முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Thug Life: நாங்கல்லாம் விமானத்தில் இருந்தே ஜம்பிங்கில் இறங்குனவங்க.. ! விரக்தியில் விமான பயணி செய்த விநோத செயல்!

Thug Life: நாங்கல்லாம் விமானத்தில் இருந்தே ஜம்பிங்கில் இறங்குனவங்க.. ! விரக்தியில் விமான பயணி செய்த விநோத செயல்!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்

நீண்ட நேரம் காத்திருந்ததால் பொறுமையை இழந்த பயணி ஒருவர், ஒரு சில சீட்டுகளுக்கு முன்பு வந்து அங்கிருந்த எமர்ஜென்ஸி எக்ஸிட் எனப்படும் அவசர கால கதவை திடீரென திறந்து அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.

  • Last Updated :

விமானத்தில் பயணத்திற்காக காத்திருந்த விமானி ஒருவர் திடீரென அவசர வழியை பயன்படுத்தி விமானத்தில் இருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தின் சார்லோட் பகுதியில் இருந்து மேரிலாண்டின் Thurgood Marshall Baltimore-Washington சர்வதேச விமான நிலையத்துக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 6 சிப்பந்திகள், 172 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. இதற்கிடையே மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் டேக் ஆஃப் ஆக வேண்டிய விமானம் பயணிகள் அமர்ந்திருந்த நிலையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் 30 நிமிடங்களுக்கும் மேலாக பயணிகள் கீழே இறங்குவதில் சிக்கல் நிலவியது. அங்கு விமானத்தில் இருந்து பயணிகள் கீழிறங்கும் நகரும் படிக்கட்டு இயந்திரத்தை இயக்க ஆள் இல்லாததால் இந்த தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Also Read:   விலையுயர்ந்த பங்களாவை நஷ்டத்துக்கு விற்பனை செய்த ரோகித் சர்மா..! காரணம் என்ன?

இந்த நிலையில் நீண்ட நேரம் காத்திருந்ததால் பொறுமையை இழந்த பயணி ஒருவர், ஒரு சில சீட்டுகளுக்கு முன்பு வந்து அங்கிருந்த எமர்ஜென்ஸி எக்ஸிட் எனப்படும் அவசர கால கதவை திடீரென திறந்து அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.

Brandon Goldner என்ற அதே விமானத்தில் பயணத்துக்காக காத்திருந்த பயணி ஒருவர், திறக்கப்பட்ட அவசர கால கதவை படம்பிடித்து, நடந்தவற்றை விவரித்து அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    இதற்கிடையே விமானத்தின் அவசர கதவினை திறந்து குதித்த பயணியை அங்கிருந்த காவலர்கள் கைது செய்து கூட்டிச் சென்றனர். மேலும் அந்த பயணியின் இந்த ஒழுங்கீன செயல்பாட்டின் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸின் கருப்பு பட்டியலில் அவர் வைக்கப்படுவார் எனவும், வாடிக்கையாளர்கள் காத்திருக்க வைக்கப்பட்டதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ள அந்த விமான நிறுவன செய்தித்தொடர்பாளர், அந்த விமானத்தில் காக்க வைக்கப்பட்ட பயணிகள் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    First published: