ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நேரலையில் செய்தியாளரின் தோளில் அமர்ந்து ஏர்பாட் திருடிய கிளி -வைரலாகும் வீடியோ

நேரலையில் செய்தியாளரின் தோளில் அமர்ந்து ஏர்பாட் திருடிய கிளி -வைரலாகும் வீடியோ

நேரலையில் காதில் இருந்து ஏர்பாட் திருடிய கிளி

நேரலையில் காதில் இருந்து ஏர்பாட் திருடிய கிளி

Parrot stolen Airpod on live : நேரலையில் காதில் இருந்து ஏர்பாட் திருடிய கிளியில் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, IndiaChile Chile

  சிலியில் நேரலையில் நிருபர் ஒருவர் திருட்டு சம்பவத்தின் செய்தியைக் கூறிக்கொண்டிருக்கும் போது கிளி ஒன்று அவரின் தோளில் மேல் அமர்ந்து காதிலிருந்த ஏர்பாட்டை தூக்கிச் சென்றுள்ளது. அந்த தருணத்தின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.

  சிலிவிசன் என்ற செய்தி நிறுவனத்தில் நிருபராக பணியாற்றும் நிக்கோலஸ் குரும் என்றவர் குடியிருப்பு பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தைப் பற்றி நேரலையில் மக்களுக்குத் தெரிவித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவர் தோளில் மேல் வந்து கிளி ஒன்று அமர்ந்தது. நேரலையில் முக்கிய செய்தியைக் கூறிக்கொண்டிருந்த அவர் கேமரா நபரிடம் சைகையில் கிளியைக் காட்சிப்படுத்தக் கூறியுள்ளார்.

  அப்போது, கிளி அவர் காதில் அணிந்திருந்த பாடல் கேட்கும் ஏர்பாட்ஸில்  ஒன்றை அப்படியே தூக்கிக்கொண்டு சென்று விட்டது. அதனைக் கிளியிடமிருந்து பெற முயன்ற ஒரு நொடியில் அது அங்கிருந்து பறந்து போய்விட்டது.

  இதில் செய்வதறியாது திகைத்து நிருபர் முன் பின்னும் திரும்பி கிளியைத் தேடியுள்ளார். இந்த காட்சிகள் நேரலையில் பதிவாகியுள்ளது.

  Also Read : இந்தியாவ ஜெயிச்சுடுங்க.. ஜிம்பாப்வேவுக்கு மருமகளா வர்றேன் - பாக்.. நடிகையின் வைரல் ட்வீட்

  இது குறித்து தெரிவித்த நிருபர் நிக்கோலஸ் குரும், சாதாரணமாகக் கிளி தோளில் வந்து அமராது என்பதால் நான் முதலில் ஆச்சரியப்பட்டேன். ஆனால் அது ஏர்பாட்டை பார்த்து தான் வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

  சமூக வலைத்தளத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் தோன்றும் கிளிக்கு ”ஆண்டராய்டு லவ்வர்” என்ற பெயர் கிடைத்துள்ளது. இறுதியில் கிளி தூக்கிச் சென்ற ஏர்பாட் அருகில் உள்ள புல்வெளியில் கிடைத்தது தெரியவந்துள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Live telecast, Viral Video