Home /News /trend /

தன் கையே தனக்கு உதவி: அரசாங்கம் கைவிட்ட நிலையில், ஊர்மக்களே ஒன்று திரண்டு செய்த வேலை!

தன் கையே தனக்கு உதவி: அரசாங்கம் கைவிட்ட நிலையில், ஊர்மக்களே ஒன்று திரண்டு செய்த வேலை!

Parpatiya village

Parpatiya village

Parpatiya Village | கிராமத்தில் இருந்து மெயின் ரோடுக்கு சாலை இல்லாதது இவ்வளவு பெரிய பிரச்சனையா என்று ஒரு சிலருக்கு தோன்றலாம். ஆனால் சரியான சாலை வசதி இல்லாததால் இந்த கிராமத்தில் பலரும் தீவிரமான பாதிப்பு அடைந்துள்ளனர். குறிப்பாக 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு கர்ப்பிணிப் பெண் சாலை வசதி இல்லாததால் அதிக சிரமத்துக்கு உள்ளானார்.

மேலும் படிக்கவும் ...
தன் கையே தனக்கு உதவி என்ற பழமொழி உண்மை என்பதை அவ்வபோது நடக்கும் சம்பவங்கள் வெளிப்படுத்துகிறது. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுர்குஜா மாவட்ட எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் செய்த காரியம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப அரசாங்கம் நாடு முழுவதும் பல வசதிகளை செய்து கொடுக்க முன் வந்தாலும், ஒரு சில இடங்களில் மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுவதில்லை.

அதில் ஒன்றுதான் பார்ப்பட்டியா என்ற ஒரு சிறிய கிராமம். அரசு உதவவில்லை என்றால் என்ன, யாருடைய உதவியும் இல்லை என்றாலும் தாங்களே தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று இவர்கள் முடிவு செய்துள்ளனர்.

“அரசாங்கத்திற்கு எங்கள் மீது கொஞ்சம் கூட அக்கறையே இல்லை. நாங்கள் எத்தனையோ முறை மனு கொடுத்தும், கோரிக்கை வைத்தும் எங்களுடைய கோரிக்கையை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. அதனால்தான் நாங்களே அதை நிறைவேற்றுவதாக முடிவு செய்து வேலையைத் தொடங்கி விட்டோம்” என்று கிராமத்து சார்பாக ஒருவர் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த கிராம மக்களுக்கு அப்படி என்னதான் பிரச்சனை அரசாங்கம் என்ன செய்யவில்லை என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்..



நாடு முழுவதும் பல கிராமங்கள் உள்ளன, ஆனால் கிராமங்களை பிரதான சாலையில் இணைக்கும் சாலை வசதிகள் பல கிராமங்களுக்கு இல்லை. இன்னும் சில கிராமங்களில் சாலைகளே இல்லை. அதேபோலத்தான் சுர்குஜா மாவட்டத்தில் இருக்கும் இந்த கிராமத்திற்கும் சாலையே இல்லை. சரியான சாலை வசதி இல்லாததால் அவசர காலத்தில் மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும் போது உரிய சிகிச்சை பெற முடியாமல் பலரும் அவதிப்பட்டு வந்துள்ளனர் என்று வருத்தம் தெரிவித்தனர்.

Also Read : அகதியாக வந்த குடும்பத்திற்கு நினைத்த பார்க்கமுடியாத உதவியை செய்த நபர்

கிராமத்திலிருந்து மெயின் ரோடுக்கு செல்ல வேண்டுமானால் ஆறு கிலோ மீட்டர் செல்ல வேண்டும். எனவே கிராமத்தில் இருந்து மெயின் ரோடுக்கு இணைப்பு சாலையை உருவாக்க பல கோரிக்கைகளை இந்த கிராமத்தினர் பல்வேறு காலகட்டங்களில் சமர்ப்பித்து வந்துள்ளனர்.

ஒவ்வொரு முறை இவர்கள் சாலை அமைக்க கோரிக்கை விடுத்த போதும் சுர்குஜா மாவட்டத்தில் கலெக்டர் விரைவிலேயே சாலை கட்டமைக்கும் பணி தொடங்கி விடும் என்று உறுதியளித்ததாக கிராமவாசிகள் கூறினர். ஆனால் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்தும் பணி தொடங்கவே இல்லை என்ற நிலையில் கிராமவாசிகளே சாலை அமைப்பதை தொடங்கிவிட்டார்கள்.



கிராமத்தில் இருந்து மெயின் ரோடுக்கு சாலை இல்லாதது இவ்வளவு பெரிய பிரச்சனையா என்று ஒரு சிலருக்கு தோன்றலாம். ஆனால் சரியான சாலை வசதி இல்லாததால் இந்த கிராமத்தில் பலரும் தீவிரமான பாதிப்பு அடைந்துள்ளனர். குறிப்பாக 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு கர்ப்பிணிப் பெண் சாலை வசதி இல்லாததால் அதிக சிரமத்துக்கு உள்ளானார். ரோடு வசதி இல்லாமல் அந்த கிராமத்திற்கு எமர்ஜென்சி நேரத்தில் ஆம்புலன்ஸ் வரவில்லை. எனவே அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நேரத்தில் அவர் ஆற்றில் கூடையில் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டார் என்று கூறினார்கள்.

Also Read : மகள்களுக்கு உலகை சுற்றி காட்ட நீரில் மிதக்கும் அபார்ட்மெண்ட் வாங்கிய பெற்றோர்!

இந்நிலையில் சுர்குஜா மாவட்டத்தின் ஆணையரான சஞ்சீவ் குமார் அவர்கள் “நாங்கள் சாலை அமைப்பதற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளோம். எங்களுக்கு அனுமதி கிடைத்த உடனேயே நாங்கள் வேலையைத் தொடங்கிவிடுவோம்” என்று செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
Published by:Selvi M
First published:

Tags: Trending, Village

அடுத்த செய்தி