முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / நெருப்பு பானி பூரி சாப்பிட வேண்டுமா? வைரலாகும் வீடியோ!

நெருப்பு பானி பூரி சாப்பிட வேண்டுமா? வைரலாகும் வீடியோ!

நெருப்பு  பானி பூரி

நெருப்பு பானி பூரி

பானி பூரியின் மேல் நெருப்பை பற்றவைத்து நேரடியாக உங்களின் வாயிற்குள் இதை போட்டு விடுவார்கள். இந்த ஸ்பெஷல் பையர் பானி பூரியை நீங்கள் குஜராத்திற்கு சென்று சுவைக்கலாம்.

  • Last Updated :

சத்தான உணவுகளை விடவும் நொறுக்கு தீனிகளை தான் நம்மில் பலருக்கும் பிடிக்கும். அதுவும் தெருக்களில் விற்கப்படும் உணவுகள் என்றால் சொல்லவா வேண்டும். ஒரு கை பார்த்துவிடுவோம் என்று பல்வேறு வகையான உணவுகளை ருசி பார்த்து விடுவோம். அதிலும் குறிப்பாக பானி பூரி பிரியர்களுக்கு அதை பிளேட் பிளேட்டாக சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்றே தோன்றும்.

தெருக்களில் விற்கப்படும் பானி பூரிகளை பிறர் சாப்பிடுவதை பார்த்தாலே நமக்கும் சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு உண்டாகும். இதனால் கடைசியில் நாமும் பானி பூரியை விரும்பி சாப்பிட வரிசையில் நிற்போம். முன்பெல்லாம் பானி பூரியை புதினா, பச்சை மிளகாய் கலந்த நீர் மற்றும் சில மசாலாக்களை கலந்து நமக்கு தருவார்கள். அதன் பிறகு இனிப்பு பானி பூரி பிரபலமாக தொடங்கியது. இதை புளி தண்ணீர் மற்றும் இனிப்பை கொண்டு தயாரிப்பார்கள்.

அதன்பிறகு ஏன் ஒரு வகையான தண்ணீர் தான் கொடுக்க வேண்டுமா என்று 7 வகையான பானி பூரி தண்ணீரை கொண்டு விற்க தொடங்கினர். இதை வாரணாசி போன்ற ஊர்களில் சுவைத்து மகிழலாம். அடுத்த புது முயற்சியாக பானி பூரியில் மதுபானங்கள் கலந்து சாப்பிட தொடங்கினர். இது பலருக்கும் பிடித்தமானதாகவும் மாறி விட்டது. சுவையான பானி பூரியுடன் போதையை இதன்மூலம் கலந்து விட்டனர்.

தற்போது இவை எல்லாவற்றிற்கும் மேலே ஒருபடி சென்று பானி பூரியில் நெருப்பு வைத்து தருகின்றனர். ஆம், நீங்கள் படிப்பது சரிதான். பானி பூரியின் மேல் நெருப்பை பற்றவைத்து நேரடியாக உங்களின் வாயிற்குள் இதை போட்டு விடுவார்கள். இந்த ஸ்பெஷல் பையர் பானி பூரியை நீங்கள் குஜராத்திற்கு சென்று சுவைக்கலாம். இந்த பானி பூரியை சாப்பிடும் வீடியோவை க்ருபாலினி படேல் என்கிற பெண்மணி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள தெரு கடையில் இந்த ஸ்பெஷல் பையர் பானி பூரியை சுவைத்தாக இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த வீடியோயை பார்த்த நெட்டிசன்கள் எப்போதும் போல இந்த பையர் பானி பூரியை வைரலாக்கி வருகின்றனர். இந்த பானி பூரியை பற்றவைக்க சிறிது கற்பூரத்தை அதன் மீது போடுவதாகவும் க்ருபாலினி தெரிவித்துள்ளார். இருப்பினும் இது சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது தான் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை 23,000 பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். அத்துடன் பலர் இந்த பையர் பானி பூரியை பற்றி வேடிக்கையான கமெண்ட்களை பதிவிட்டு உள்ளனர்.

Also read... ஆறு ரூபாய் லாட்டரியில் ஒரு கோடி வென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்!

அதில் ஒருவர், "பானி பூரி வாங்கும்போது இன்னும் காரமாக (ஸ்பைஸி) வேண்டுமென்று சொல்வோம், அதற்கு நேரடியாக நெருப்பை நமது வாயிலே இப்படி ஏற்றி விடுகிறார்கள் போல" என்று கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார். மேலும் இந்த பையர் பானி பூரி கடை எங்குள்ளது என்கிற கமெண்ட்டை பல நெட்டிசன்கள் பதிவிட்டு இருந்தனர்.

top videos

    எது எப்படியோ வேடிக்கையான உணவு வகைகளை அறிமுகம் செய்தால், அதை வாங்கி சுவைக்க ஆளா இல்லை!

    First published:

    Tags: Trending