இறந்தவர்களும் மரம் வளர்க்கிறார்கள் இங்கே... சென்னையில் இப்படி ஒரு கல்லறை தோட்டமா..!

இறந்தவர்களும் மரம் வளர்க்கிறார்கள் இங்கே... சென்னையில் இப்படி ஒரு கல்லறை தோட்டமா..!
பல்லாவரம் கல்லறை தோட்டம்
  • Share this:
சென்னையின் பரபரப்பான பல்லாவரம் சாலையில் சோலைவனம் போல் காட்சி தருகிறது ஓர் இடம். ஏதோ தனியாருக்கு சொந்தமான தோட்டமாக இருக்கும் என்று அருகில் சென்று பார்த்த போது தான் ஆச்சரியம் காத்திருந்தது. அது இறந்தவர்களின் சடலத்தை புதைக்கும் கல்லறை தோட்டம்.

பல்லவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் விதமாக அமைந்துள்ளது இந்த கல்லறை தோட்டம். இந்த இடத்தை பார்ப்பவர்கள் அனைவருக்கும் மனதில் ஒருவிதமான அமைதியான சூழ்நிலை உருவாகிறது. உள்ளே சென்றால் கல்லறைகளுக்கு மத்தியில் தேக்கு, மா, வேம்பு உள்ளிட்ட பலவிதமான மரங்கள் சூழ்ந்து பசுமையாய் காட்சியளிக்கின்றன.
கல்லறையின் இருபக்கங்களும் மரங்கள் சூழ நடுவில் நடந்தால் பூங்காவுக்குள் வந்த அனுபவம் கிடைக்கிறது. இப்படி ரம்மியமாய் காட்சியளிப்பதன் காரணத்தை விசாரித்தால், இவற்றை எல்லாம் மிஞ்சும் விதமாக அது சுவாரசியமாக அமைந்துள்ளது.

பல்லாவரம் பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கான இந்த கல்லறை தோட்டத்தில் மரம் நட்டு பசுமையாக மாற்ற வேண்டுமென்று ஊர் மக்கள் முடிவு செய்துள்ளனர். அதையடுத்து யாருடைய வீட்டில் இருந்து சடலத்தை புதைக்க வேண்டுமென்றாலும் அவர்கள் ஒரு மரம் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பலரும் நட்டு,பராமரித்த மரங்கள் கல்லறை தோட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாய் வனத்தோட்டமாய் மாற்றி வருகின்றன.

Also Read : லாட்டரியில் விழுந்த 6 கோடி ரூபாய்... அந்தப் பணத்தில் வாங்கிய நிலத்தில் புதையல்...!போக்குவரத்து நெரிசலும், வெயிலும் வாட்டும் பல்லாவரம் பகுதியில் இதுப்போன்ற ரம்மியான இடம் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.  இறந்தவர்களின் ஆன்மா அமைதியின் நிழலில் இளைப்பாறுவதை போல, இருப்பவர்களின் மனமும்,உடலும் இங்குள்ள மரங்களின் நிழலில் இளைப்பாறுவதை காண முடிகிறது.

கல்லறை என்பது உயிரற்ற உடல்களைப் புதைக்கும் இடம் மட்டுமல்ல என்ற எண்ணத்தை மாற்றினால், உயிர் மூச்சை உருவாக்கும் இடமாகவும் மாற்றலாம் என்பதற்கு இது ஓர் உதாரணமாக அமைந்துள்ளது.
First published: December 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading