ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஸ்டைலாக கார் கியர் மாற்றியதால் காதல்... டிரைவரை திருமணம் செய்த பணக்கார பெண்!

ஸ்டைலாக கார் கியர் மாற்றியதால் காதல்... டிரைவரை திருமணம் செய்த பணக்கார பெண்!

திருமண ஜோடி

திருமண ஜோடி

அவர் கியரை மாற்றும் ஸ்டைல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. காரில் கியர் போடும்போது அவரது கைகள் வேகமாக செயல்படும் என அப்பெண் கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, Indiapakistanpakistan

  பெண் ஒருவர் கார் டிரைவராக வேலை செய்பவரின் கியர் மாற்றும் ஸ்டைலில் ஈர்க்கப்பட்டு அவரையே காதலித்து திருமணம் செய்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

  பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் கார் டிரைவராக வேலை செய்பவரின் கியர் மாற்றும் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு அவரையே காதலித்து கரம் பிடித்து உள்ளார். பணக்கார வீட்டு பெண்ணான அவர் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

  அப்போது, அவருக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்த டிரைவர் கியர் மாற்றுவதில் கில்லாடியாக இருந்திருக்கிறார். பயிற்சி கொடுத்தபோது அவரது கியர் மாற்றும் ஸ்டைலை கண்ட அந்த பெண், அவர் மீது காதல் வந்தது.

  இதையும் படிங்க : பேரணியில் துப்பாக்கிச்சூடு.. குண்டு பாய்ந்து காயமடைந்த இம்ரான்கான்.. பாகிஸ்தானில் பதற்றம்!

  இதையடுத்து, அடுத்த வேலையாக அவர் தன்னுடைய வீட்டில் காதலை பற்றி கூறி, அந்த கார் டிரைவரையே மணமுடித்திருக்கிறார். இதுதொடர்பாக டெய்லி பாகிஸ்தான் என்ற செய்தி தளத்துக்கு பேட்டியளித்துள்ள அந்த ஜோடி தங்களது காதல் நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார்கள்.

  அப்போது, அவர் கியரை மாற்றும் ஸ்டைல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. காரில் கியர் போடும்போது அவரது கைகள் வேகமாக செயல்படும் என அப்பெண் கூறியுள்ளார். மேலும் காதல் கணவருக்காக பாட்டு பாடச் சொல்லி கேட்டபோது அந்த பெண், ரிஷி கபூர், டிப்பிள் கபாடியா நடித்த பாபி படத்தில் இடம்பெற்ற ஹும் தும் ஏக் காம்ரே மேயின் என்ற பாடலை பாட, அதற்கு அப்பெண்ணின் கணவர் லைட்டா ஸ்வரம் குறையுது என கிண்டல் அடித்திருக்கிறார். தற்போது இந்த காதல் தம்பதியின் பேட்டி வைரலாகி வருகிறது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Trending, Viral Video