ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

6 மாதங்கள் வரை கெட்டுப்போகாது.. ருசியில் அசரடிக்கும் கராச்சி அல்வா! ராஜஸ்தான் ஸ்பெஷல்!

6 மாதங்கள் வரை கெட்டுப்போகாது.. ருசியில் அசரடிக்கும் கராச்சி அல்வா! ராஜஸ்தான் ஸ்பெஷல்!

கராச்சி அல்வா

கராச்சி அல்வா

Karachi Halwa | பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் அல்வா மிக பிரபலமானதாகும். 1947-இல் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் என்றொரு புதிய நாடு உருவான நிலையில், இந்த அல்வா எல்லைக்கு அப்பால் உள்ள உணவுப் பொருளானது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு திண்பண்டம் புகழ் பெற்றதாக இருக்கும். உதாரணத்திற்கு கோவில்பட்டி கடலைமிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, ஆம்பூர் பிரியாணி என வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதைப் போலவே, பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் அல்வா மிக பிரபலமானதாகும். 1947-இல் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் என்றொரு புதிய நாடு உருவான நிலையில், இந்த அல்வா எல்லைக்கு அப்பால் உள்ள உணவுப் பொருளானது. குறிப்பாக, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்த கராச்சி அல்வா ஒவ்வொரு வீட்டிலும் தயார் செய்யப்படும் இனிப்பாகும்.

பிரிவினையின்போதும், அதற்குப் பிறகும் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள், கையோடு இந்த கராச்சி அல்வா ரெசிபியையும் கொண்டு வந்து விட்டனர்.

புலம்பெயர்ந்த மக்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் பகுதியில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு பண்டிகை காலத்தின்போதும் கராச்சி அல்வாவை தவறாமல் தயார் செய்கின்றனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான கராச்சியின் பெயரால் உருவான இந்த அல்வாவின் சுவை, நாக்கில் தாண்டவமாடும். உண்போரை மெய்மறக்க செய்யும்.

32 ஆண்டுகளாக அல்வா விற்பனை செய்யும் பாகிஸ்தானி குடும்பம்

கடந்த 1991ஆம் ஆண்டில், சிந்து மாகாணத்தில் இருந்து ஹேம்ராஜ் கட்டாரி என்பவர் ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் குடியேறினார். தங்கள் பூர்வீக மண்ணில் பிரபலம் கொண்டதாக இருக்கும் அல்வா தயாரிப்பையே தனது தொழிலாக தொடங்கினார் அவர்.

Also Read : ”செல்லத்தை தூக்கிட்டு வாங்க”... வயலில் இறங்கி வேலை பார்க்கும் நாயின் வைரல் வீடியோ!

அல்வா எப்படி தயாராகிறது

கராச்சி அல்வாவை சட்டென்று நினைத்த உடனே தயாரித்து விட முடியாது. கோதுமையை 8 நாட்களுக்கு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தண்ணீரை மாற்ற வேண்டும். அதற்கு பிறகு அதை காயவைத்து மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அல்வா சமையலுக்கு மட்டுமே 4 முதல் 5 மணி நேரம் ஆகிறதாம். அரைத்த கோதுமை மாவில் இருந்து பால் எடுத்து, அதில் சர்க்கரை, நெய், ஏலக்காய், உலர் பழங்கள் உள்ளிட்டவற்றை சேர்த்து அல்வா தயாராகிறது. பிஸ்தா கொண்டு செய்யப்பட்ட அல்வா கிலோ ரூ.900 ஆகும்.

Also Read : அக்ரிமெண்ட் போட்டு திருமணம் செய்த தம்பதிக்கு பிரபல நிறுவனம் கொடுத்த சர்ப்ரைஸ்!

இதர உலர் பழங்களைக் கொண்டு தயாராகும் அல்வா கிலோ ரூ.650 ஆகும். அதேபோன்று பழங்கள் குறைவாகப் பயன்படுத்தப்படும் அல்வா ரூ.450 ஆகும். தீபாவளி சமயத்தில் மட்டும் 150 கிலோ அல்வா விற்பனையாகிறதாம். ராஜஸ்தானில் தயாராகும் கராச்சி அல்வா சென்னை, மும்பை, அஹமதாபாத், சூரத் போன்ற நகரங்களுக்கும் ஏற்றுமதி ஆகிறது. சொன்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கும். இந்த அல்வா 6 மாதங்கள் வரையில் கெட்டுப் போகாமல் இருக்குமாம். பச்சை நிறம் மற்றும் காவி நிறத்தில் அல்வா தயார் செய்யப்படுகிறது.

Published by:Selvi M
First published:

Tags: Karachi, Rajastan, Tamil News, Trending