• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • காரை தவிர்த்து JCB-யில் திருமண ஊர்வலம் - புதுமண தம்பதியின் அட்ராசிட்டி!

காரை தவிர்த்து JCB-யில் திருமண ஊர்வலம் - புதுமண தம்பதியின் அட்ராசிட்டி!

புதுமண தம்பதியின் அட்ராசிட்டி

புதுமண தம்பதியின் அட்ராசிட்டி

பாகிஸ்தானில் புதுமண தம்பதிகள் ஜேசிபியில் திருமண ஊர்வலம் சென்றது வைரலாக பரவியுள்ளது.

  • Share this:
இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் திருமணங்கள் மிக ஆடம்பரமாக நடக்கும். கோடீஸ்வரர்கள் என்றால் சொல்லத்தேவையில்லை. திருமண மண்டப அலங்காரம் முதல் மண்டப்பெண் உடை, அலங்காரம் உள்ளிட்ட அனைத்திலும் பிரம்மாண்டத்தின் உச்சி எதுவோ, அதனை தொட்டுவிடுவார்கள். முகேஷ் அம்பானியின் வீட்டு திருமணத்தில் பத்திரிக்கை ஒன்று மட்டுமே லட்ச ரூபாய் மதிப்பில் வடிவமைப்பு செய்யப்பட்டு, விருந்தினர்களுக்கு கொடுக்கப்பட்டது.

கர்நாடகாவில் எம்.எல்.ஏ ஒருவர் சுமார் 500 கோடி ரூபாய் செலவில், சுமார் ஒரு வாரம் திருமணத்தை நடத்தி அசத்தினார். இந்த திருமணங்களில் எல்லாமே ஆடம்பரம் என்றாலும், மணப்பெண் மற்றும் மணமகன் ஊர்வலம் மட்டும் கூர்ந்து கவனிக்கப்பட்டது. அவர்களை எதில் அழைத்து வருகிறார்கள் என விருந்தினர்கள் உள்ளிட்டோர் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.

இதற்காகவே, தங்க, வெள்ளி பல்லக்குகள், ஆடம்பர கார்கள், கம்பீரமான குதிரைகளின் மீது அமர்ந்து கம்பீரமாக வலம் வருவார்கள். அவர்களின் இந்த ஊர்வலம் செய்திகளில் இடம்பெறவில்லை என்றால் மட்டுமே ஆச்சர்யம். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களும் தங்களின் வசதிக்கேற்ப கார்கள், மாட்டு வண்டி உள்ளிட்டவைகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள்.

 



 

சில திருமண ஊர்வலங்கள் மட்டுமே வித்தியாசமாகவும், அனைவரது கவனத்தையும் ஈர்ப்பவையாக இருக்கும். பாகிஸ்தானில் நடைபெற்ற அப்படியான ஒரு திருமண ஊர்வலம் அனைவரது கவனத்தையும், நெட்டிசன்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. பாகிஸ்தானில் ஹூன்சா பகுதியில் நடைபெற்ற திருமணத்தில், புதுமண தம்பதிகள் ஜேசிபி எந்திரத்தின் முன் பக்க பக்கெட்டில் நிற்கவைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த வீடியோவை அந்நாட்டின் பத்திரிக்கையாளரான குலாம் அப்பாஸ் ஷா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஜேசிபி முழுவதும் மலர்களாலும், கலர் காகிதங்களாலும் அலங்க்கரிக்கப்பட்டுள்ளது. முன் பக்க பக்கெட்டில் புதுமண தம்பதிகள் அமர்ந்துகொள்ளும் வகையில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வண்டி அலைந்து அலைந்து செல்வதால், தம்பதிகள் இருவரும் அதில் அமராமல் நின்றவாறே ஊர்வலமாக செல்கின்றனர். இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து டிரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது.

 

 



 

வித்தியாசமாக திருமண ஊர்வலம் நடத்திட்டீங்களேப்பா என தமாஷாக நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர். அவனவன் கோடி ரூபாய் செலவழித்து திருமண ஊர்வலம் சென்றால் கூட, டிரெண்டிங்கில் இடம்பிடிக்கவில்லை, நீங்க பிடிச்சிட்டீங்க, தம்பதிக்கு வாழ்த்துக்கள் என சிலர் கூறியுள்ளனர்.

இதேபோல், இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் வித்தியாசமாக நடைபெற்ற திருமண ஊர்வலத்தையும் நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர். முதலில் டிவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களிலும் வைரலாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: