ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்தியாவ ஜெயிச்சுடுங்க.. ஜிம்பாப்வேவுக்கு மருமகளா வர்றேன் - பாக்.. நடிகையின் வைரல் ட்வீட்

இந்தியாவ ஜெயிச்சுடுங்க.. ஜிம்பாப்வேவுக்கு மருமகளா வர்றேன் - பாக்.. நடிகையின் வைரல் ட்வீட்

ஷேகர் ஷின்வாரி

ஷேகர் ஷின்வாரி

Sehar Shinwari | அடுத்த ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தினால் ஜிம்பாப் நாட்டின் மருமகளாகிறேன் என பாகிஸ்தான் நாட்டு நடிகை ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பு நெருப்பை பற்றவைத்திருக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கிரிக்கெட் என்றாலே பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் என்றால் பரபரப்பு பற்றி எரியும். சாதாரண விளையாட்டு என்பதை தாண்டி உணர்ச்சிக் கொப்பளிக்க ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்று விடுவார்கள்.

  இப்போது பரபரப்பும் எதிர்பார்ப்பும் இன்னும் எகிறியிருக்கிறது. எகிற வைத்தவர் யார் தெரியுமா?.. ஸேகர் ஷின்வாரி என்னும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடிகை தான் அவர். அந்த நடிகையின் டுவிட்டர் பதிவு தான் இப்போதைய டாக் ஆப் த வேர்ல்ட். அப்படி என்னதான் பதிவிட்டுள்ளார். அடுத்த ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடித்தால் ஜிம்பாப்வே நாட்டின் மருமகள் ஆகிறேன் என்பது தான் அந்த பதிவு.

  தற்போது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியே இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி தான். தொடக்கப் போட்டியே ரசிகர்களை பரபரப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை சேசிங் செய்த இந்திய அணி தோற்றுப் போகும் பரிதாப நிலையில் இருந்தது. ஆனால் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா திரில் வெற்றி பெற்றது.

  Also Read :   டி20-யில் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேன் - மாஸ் காட்டும் சூர்ய குமார் யாதவ்..!

  இந்தப் போட்டியில் கோலியின் நேபால் கிளெய்ம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. நடுவர்கள் விலைபோய் விட்டதாக பாகிஸ்தான் ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வாங்கி கட்டிக் கொண்டார்கள். இந்நிலையில் தான் அடுத்த பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறார் பாக். நடிகை ஷின்வாரி. குருப்-2 ல் இருக்கும் இந்தியா இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் வென்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணி நான்கு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்று நான்கு புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

  இந்நிலையில் சூப்பர் 12 சுற்றின் கடைசிப்போட்டி வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் இந்தியாவை வென்றுவிட்டால் ஜிம்பாப்வே நாட்டு மருமகளாகிறேன் என்று டுவிட்டரில் பதிவிட்டு ஜிம்பாப்வே வீரர்களை உசுப்பேற்றியிருக்கிறார் பாக். நடிகை ஷின்வாரி. ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வேயை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்டது. தொடர்ந்து அதிர்ஷ்டவசமாக தென்னாப்பிரிக்காவை வென்றது. பாகிஸ்தான் அணியை வீழத்திய ஜிம்பாப்வே இந்திய அணியையும் வீழத்த வேண்டும் என்றுதான் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள் பாகிஸ்தான் ரசிகர்கள்.

  Also Read : 

  அதன் வெளிப்பாடு தான் ஷின்வாரியின் டுவிட்டர் பதிவு. அந்த டுவிட்டர் பதிவை இந்திய ரசிகர்கள் பயங்கரமாக கலாய்த்து வருகிறார்கள். ஷின்வாரியின் இந்த பதிவை 850 பேர் லைக்கு செய்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் ஷேர் செய்திருக்கிறார்கள். ஆனால் அவரது டுவிட்டரை கலாய்த்து இந்திய ரசிகர்கள் ஏராளமான பதிவுகளை இட்டுள்ளனர். கடைசிவரைக்கும் தனியாகவே இருக்கலாம்னு முடிவு பன்னீட்டியாமா?.. என்றும், பாகிஸ்தானிய பெண்ணை கல்யாணம்  பண்ணிக்க ஜிம்பாப்வேகாரன் ஒத்துக்கனுமே என்பன போன்ற ‘கலாய்’ டுவிட்டுகள் வரிசைகட்டி வந்து கொண்டிருக்கினறன.

  என்னதான் டுவிட் போட்டாலும் களத்தில் திறமையை காட்டினால்  தான் ஜெயிக்க முடியும்.. என்பதை  தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக டுவிட் போர் நடத்தி வரும் ஷேகர் ஷின்வாரியிடம் யாராவது சொல்வார்களா?

  Published by:Selvi M
  First published:

  Tags: Actress, T20 World Cup, Tamil News, Trending, Zimbabwe