Home /News /trend /

காதலை சொன்னதும் காய்ச்சலே வந்ததாம்.. மருத்துவருக்கும் ஊழியருக்குமான நெகிழ வைக்கும் காதல் கதை..!

காதலை சொன்னதும் காய்ச்சலே வந்ததாம்.. மருத்துவருக்கும் ஊழியருக்குமான நெகிழ வைக்கும் காதல் கதை..!

பாகிஸ்தானில் பெண் மருத்துவரின் காதல் கதை

பாகிஸ்தானில் பெண் மருத்துவரின் காதல் கதை

பெண் மருத்துவர் ஒருவர் அவர் வேலைசெய்யும் மருத்துவமனையில் தூய்மை பணி செய்பவரைக் காதல் திருமணம் செய்த அழகான காதல் கதை அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பாகிஸ்தானில்  மருத்துவமனையில் சுத்தம் செய்யும் தொழிலாளராக பணிபுரிந்த ஒருவரை அந்த மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் ஒரு பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த ஜோடி தற்போது இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.

பாகிஸ்தானில் கிஸ்வர் ஷஹீபா என்ற பெண் மருத்துவர் “ஒக்கரா தேசில்” மாநிலத்திலுள்ள “டிபல்பூர்” என்ற நகரத்தில் வசித்து வருகிறார் அவர் அங்கேயே மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அங்கு அறையை சுத்தம் செய்யும் தொழிலாளியாக வேலைப்பார்த்தவர் ஷசாத். அவரின் எளிமையான குண நடவடிக்கையைக் கண்டு அவர் மேல் காதல் கொண்டுள்ளார் மருத்துவர் கிஸ்வர் ஷஹீபா. முதன் முதலில் கிஸ்வர் தான் ஷசாத்திடம் காதலைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷாசாத் கேட்டபோது, நான் இதனை எதிர்பார்க்கவே இல்லை. கிஸ்வர் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது. நான் அந்த மருத்துவமனையில் உள்ள அறைகளைச் சுத்தம் செய்து கொண்டும் அங்குள்ள மருத்துவர்களுக்கு டீ பரிமாறும் சேவை செய்து கொண்டும் இருந்தேன். ஒரு நாள் இவரை அணுகிய கிஸ்வர் நான் இல்லாத நேரங்களில் என்னைத் தொடர்பு கொள்வதற்காக என்னுடைய மொபைல் நம்பரை கேட்டார்.

நானும் அவருக்கு என் மொபைல் நம்பரை கொடுத்தேன். அதன் பிறகு நான் என்னுடைய வாட்ஸ் அப்பில் ஒரு ஸ்டேட்டஸ் போட, அதற்கு லைக் எமோஜி அனுப்பி இருந்தார் கிஸ்வர். அதன் பிறகு அன்றைய நாளின் பிற்பகுதியில் என்னை அவருடைய ரூமிற்கு அழைத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

இது நான் சற்றும் எதிர்பாராததாகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும் இருந்தது. என்னாலேயே நடப்பதை நம்ப முடியவில்லை. அதன்பிறகு சில நாட்கள் நான் மருத்துவமனைக்கு வரவில்லை. உண்மையில் அந்த இடைப்பட்ட நாட்களில் எனக்குப் பயத்தினால் காய்ச்சல் ஏற்பட்டது என்பதை அவர் தன்னுடைய யூடியூப் சேனலில் பிற்காலத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read : இறந்துவிட்டார் என்று கூறி ஓய்வூதியத்தை நிறுத்திய அரசு - சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்த 102 வயது முதியவர்!

அதன் பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டு திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர். அவர்கள் திருமணத்திற்குப் பிறகு அந்த மருத்துவமனையிலிருந்து கிஸ்வர் வெளியேறிவிட்டார். தற்போது அவர்கள் அதே ஊரிலேயே கிஸ்வருக்காக ஒரு கிளினிக் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இது மட்டும் இல்லாமல் இந்த ஜோடி தங்களுக்கு என ஒரு யூடியூப் சேனலை உருவாக்கிக் கொண்டு அதில் தங்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பற்றிய பல முக்கிய நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டு பார்வையாளர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த ஜோடியை பற்றிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published by:Janvi
First published:

Tags: Doctor, Love, Love marriage

அடுத்த செய்தி