பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகர் ஒமர் இசா என்பவர் தனது மகன் இப்ராஹிமை இனி ‘இந்தியா’ என அழைக்கப்போவதாக சமூகவலைதளத்தில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகர் ஒமர் இசா என்பவர் தனது இன்ஸ்டாகிரம் பதிவில் நகைச்சுவையாக ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அவருக்கும் அவரது மனைவிக்கும் நடுவில் அவரது மகன் இப்ராஹிம் படுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.
அதில், “புதிதாக பெற்றோர் ஆனவர்களுக்கு எச்சரிக்கை, நாங்கள் செய்த அதே தவறை செய்த பெற்றோருக்கு ஆழ்ந்த வருத்தங்கள். நானும் எனது மனைவி பேகமும் எங்கள் முதல் குழந்தை இப்ராஹிமை எங்கள் படுக்கையில் படுக்க வைத்து சிறிய தவறை செய்துவிட்டோம். அவன் மீது கொண்ட அதீத பாசத்தால், சிறு வயதில் தூங்கும் போது எங்களுக்கு நடுவில் படுக்க வைத்துக்கொள்வோம்.
View this post on Instagram
இப்போது அவன் வளர்ந்து தனி அறை ஒதுக்கிய பின்னரும் கூட எங்களுக்கு இடையில் படுத்துக்கொள்கிறான். நான் பாகிஸ்தானை சேர்ந்தவன், என் மனைவி பங்களாதேஷை சேர்ந்தவர். எங்களுக்கு இடையில் இருப்பதால் அவனை இனி ‘இந்தியா’ என அழைக்க போகிறோம். ‘இந்தியா’ என் வாழ்க்கையில் பல சிக்கல்களை உருவாக்கி வருகிறான்” என குறிப்பிட்டிருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India, Pakistan News in Tamil, Trending News