VIDEO: மோடியை சாடி பேசிக்கொண்டிருந்தபோது பாகிஸ்தான் அமைச்சருக்கு கரண்ட் ஷாக்!

மின்சாரம் பாய்ந்த போதும் மோடி அவர்களே நீங்கள் என்ன செய்தாலும் இந்த தடுக்க முடியாது என வேடிக்கையாக சொன்னதும் அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை வெடித்தது.

Vijay R | news18-tamil
Updated: August 30, 2019, 9:26 PM IST
VIDEO: மோடியை சாடி பேசிக்கொண்டிருந்தபோது பாகிஸ்தான் அமைச்சருக்கு கரண்ட் ஷாக்!
பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீது அகமது
Vijay R | news18-tamil
Updated: August 30, 2019, 9:26 PM IST
பிரதமர் மோடியை  மேடையில் அவதூறாக பேசிக் கொண்டிருக்கும் போதே அவர் மீது லேசான மின்சாரம் பாயும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நீக்கி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தியா உடனான வர்த்தகத்தை நிறுத்தியும், பாகிஸ்தான் வான்வழியில் பறக்க இந்திய விமான சேவைகளுக்கு தடைவிதித்தும் தங்களது எதிர்பபை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீது அகமது சிலதினங்களுக்கு முன் பேசுகையில், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும். இதுவே இந்தியா உடனான இறுதிப் போராக இருக்கும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

Also Read : விரைவில் இந்தியாவுடன் இறுதிப் போர்... பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை

இந்த சர்ச்சை ஓய்வதற்குள், இஸ்லாமபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து பேசி வந்தார்.

Loading...

மோடி குறித்து அவதூறாக பேசும் போதே அவர் மீதான லேசான மின்சாரம் பாய்ந்ததில் பதறியடித்து போனார். தொடர்ந்து மோடி அவர்களே நீங்கள் என்ன செய்தாலும் இந்த கூட்டத்தை தடுக்க முடியாது என வேடிக்கையாக சொன்னதும் அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை வெடித்தது.



இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மோடியை பற்றி தவறாக பேசியதற்கே இப்படியென்றால் நேரடியாக மோதினால் என்னவாகும் என்று நெட்டிசன்கள் அந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.





Also Watch

First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...