ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

வீட்டு கதவுக்கு பிங்க் கலர் பெயின்ட் அடித்தது ஒரு குத்தமா? ரூ.19 லட்சம் அபராதம் என எச்சரித்த அரசாங்கம்...

வீட்டு கதவுக்கு பிங்க் கலர் பெயின்ட் அடித்தது ஒரு குத்தமா? ரூ.19 லட்சம் அபராதம் என எச்சரித்த அரசாங்கம்...

பிங்க் கலர் பெயின்ட் அடிக்கப்பட்ட கதவு

பிங்க் கலர் பெயின்ட் அடிக்கப்பட்ட கதவு

தனது ஆசைப்படி வீட்டின் முன் கதவிற்கு அடித்த பெயின்ட் இப்படி ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் நாட்டில் தங்கள் வீட்டை விருப்பப்படி அலங்கரிக்க, கதவுகள் மற்றும் ஜன்னல்களில் விரும்பிய பெயின்ட் அடிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் எல்லா இடத்திலும் இது போல இருக்காது என்பதை வெளிப்படுத்தும் சம்பவம் ஒன்று ஸ்காட்லாந்தில் நடந்து இருக்கிறது.

ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோவை சேர்ந்தவர் 48 வயதான பெண்மணி மிரிண்டா டிக்சன் (Miranda Dickson). 2 குழந்தைகளுக்கு தாயான இவர் குறிப்பிட்ட வீட்டை கடந்த 2019-ஆம் ஆண்டு, தனது தாயிடமிருந்து பெற்றுள்ளார். சுமார் 2 ஆண்டுகள் இந்த வீட்டை சீரமைப்பதற்கு செலவிட்டுள்ளார். ஃபைனல் டச்-ஆக தனது விருப்பப்படி அந்த வீட்டின் முன்பக்க கதவிற்கு பிங்க் கலர் பெயின்ட் அடித்துள்ளார். ஆனால் இந்த வீடு எடின்பர்க் நியூ டவுனின் உலக பாரம்பரிய பாதுகாப்புப் பகுதியில் அமைந்துள்ளது.

எடின்பரோவின் பழைய மற்றும் புதிய நகரங்கள் கடந்த 1995-ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அந்தஸ்தைப் பெற்றன.இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சொத்துக்களில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம் என்பதில் சில விதிகள் உள்ளன. இவர் தனது வீட்டின் கதவிற்கு பூசிய பிங்க் கலர் பெயின்ட் கட்டிடத்தின் வரலாற்றுத் தன்மையுடன் பொருந்தவில்லை. வித்தியாசமாக இருக்கிறது என்று அந்நகர சபைக்கு யாரோ புகார் அனுப்பி இருக்கிறார்கள்.

Read More : ராட்சத பூசணிக்காயை அடித்து நொறுக்கி விளையாடும் யானைகளின் க்யூட் வீடியோ!

இதனை தொடர்ந்து நேரடியாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. முடிவில் கதவில் அடிக்கப்பட்டுள்ள பிங்க் கலர் பெயின்டை மாற்றி வெள்ளை கலர் பெயின்ட் அடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் £20,000 அபராதம் செலுத்த நேரிடும் என்று மிரிண்டா டிக்சன் எச்சரிக்கப்பட்டு உள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.19 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.


எடின்பரோ நகர சபையின் விதிப்படி, வீட்டின் முன் கதவுகளுக்கு வெள்ளை நிறம் மட்டுமே பூச வேண்டும். மேலும் வண்ணம் பயன்படுத்தப்பட கூடாது. அதனால் இவர் பிங்க் கலர் பயன்படுத்தியது ஒரு பெரிய குற்றமாக மாறி இருக்கிறது.

தனது ஆசைப்படி வீட்டின் முன் கதவிற்கு அடித்த பெயின்ட் இப்படி ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்று கூறி இருக்கும் மிரிண்டா டிக்சன், சோஷியல் மீடியாவில் இந்த கதவு வைரலானதால் கடுப்பான ஒருசிலர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட புகாராக தான் இதை கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் முற்றிலும் அபத்தமான விஷயம் என்னவென்றால், அந்தப் பகுதியில் உள்ள கலர் பெயின்ட் அடிக்கப்பட்ட மற்ற கதவுகளைப் பற்றி நான் அதிகாரிகளிடம் கேட்ட போது, ​​அது பற்றி புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதாக விரக்தியுடன் கூறி இருக்கிறார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral