• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • உருளை கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டை திறந்தால் இப்படியொரு அதிர்ச்சி - வைரல் புகைப்படம்

உருளை கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டை திறந்தால் இப்படியொரு அதிர்ச்சி - வைரல் புகைப்படம்

சிப்ஸ் பாக்கெட்

சிப்ஸ் பாக்கெட்

சிப்ஸ் பாக்கெட்டில் சூப்பர் ஹீரோவின் பொம்மை அல்லது ஸ்டிக்கர் இருந்தால் குழந்தைகளை எளிதாகக் கவர முடியும்.

  • Share this:
    உலகத்தில் அனைவருமே விரும்பும் ஒரு உணவுபண்டம் என்றால் அது உருளைக்கிழங்கு சிப்ஸ் என்பதை அதிகாரப்பூர்வமாகவே தெரிவிக்கலாம். உணவு சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. ஆனால், போய்ஸ் என்பவர் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டில் வினோதமான தின்பண்டம் பேக் செய்யப்பட்டிருந்தது.

    பொதுவாக தின்பண்டங்கள் விற்பனையாளர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்கள் தங்கள் நிறுவனத்தின் பண்டங்கள் அதிகமாக விற்பனையாக வேண்டும் என்பதற்காக அவ்வப்போது பல்வேறு மார்க்கெடிங் உத்திகளைப் பயன்படுத்துவார்கள். அதில் முக்கியமானவை, சிறிய அளவிலான விளையாட்டுப் பொருட்களை சேர்ப்பது. சிப்ஸ் பாக்கெட்டில் சூப்பர் ஹீரோவின் பொம்மை அல்லது ஸ்டிக்கர் இருந்தால் குழந்தைகளை எளிதாகக் கவர முடியும். ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டில், சிப்சுக்கு பதிலாக பாதி தோல் உரிக்கப்பட்ட பச்சையான உருளைக்கிழங்கு காணப்பட்டது.

    இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிரியரான Dr. டேவிஸ் போய்ஸ் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டில், சிப்ஸுக்கு பதிலாக பச்சையான முழு உருளைக்கிழங்கு இருந்ததைப் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதை உடனே புகைப்படம் எடுத்து அந்த படத்தை தனது டிவிட்டர் கணக்கில் பகிர்ந்தார். அவர் பகிர்ந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Also Read : லாக்டவுனுக்கே லாக் போட்ட போலீசார்... மணப்பாறையில் ருசிகர சம்பவம்

    சிப்ஸ் பாக்கெட்டுக்குள் சிப்ஸுக்கு பதிலாக உருளைக்கிழங்கு இருந்த புகைப்படத்தில், எந்த நிறுவனத்தின் சிப்ஸ் என்பதும் தெளிவாகக் காணப்படுகிறது. மேலும் அவர் தனது பதிவில், "நான் ஒரு பாக்கெட் கெட்டில் சிப்ஸ் UK வாங்கி பிரித்து பார்த்த போது, அதில் கிரிஸ்ப்ஸ் எதுவும் இல்லை. ஒரு முழு உருளை மட்டும் தான் இருந்தது" என்று கேப்ஷனில் தெரிவித்திருந்தார்.

    போய்ஸ் பகிர்ந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது, இவர் வாங்கியது கெட்டில் சிப்ஸ் யுகே வின் செடார் மற்றும் சிவப்பு ஆனியன் சுவையூட்டப்பட்ட சிப்ஸ் என்பதை அறிய முடிகிறது. இந்த பகிரப்பட்ட சிறிது நேரத்திலேயே சமூகவலைத்தளங்களில் 500க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றது. கெட்டில் சிப்ஸ் நிறுவனமும் இவரை உடனடியாக தொடர்பு கொண்டது.



     

    "உருளைக்கிழங்கு எப்படி சிப்ஸ் பாக்கெட்டுக்குள் வந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள எங்களுக்கு பிரைவேட் மெசேஜ் அனுப்ப முடியுமா?" என்று போய்ஸ் பதிவுக்கு கெட்டில் சிப்ஸ் நிறுவனம் கமென்ட் பிரிவில் கோரியிருந்தது.

    திருப்தியடையாத வாடிக்கையாளர் போய்ஸ், "சரி, இன்னும் அந்த உருளைக்கிழங்கு என்னிடம் தாம் இருக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால் நீங்களே அதை வைத்துக் கொள்ளுங்கள். இப்படி நடந்திருக்கிறது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை" என்று பதிலளித்திருந்தார்.

    also Read : மஞ்சள் நிற மலைப்பாம்பை வெட்டி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட கேக் தயாரிப்பாளர்

    பாக்கெட்டில் சிப்சுக்கு பதிலாக முழு உருளைக்கிழங்கு இருந்ததை பார்த்த உடன் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு "முதலில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அடுத்ததாக பாக்கெட்டுக்குள் எப்படி கிழங்கு வந்திருக்கும் என்ற கேள்வி தோன்றியது. பின்னர், இந்த உருளைக்கிழங்கு நிஜமாகவே ஒரு சாம்பியன் தான். சிப்ஸாக மாறாமல் எப்படியோ தன்னைக் காப்பாற்றிக் கொண்டு பாக்கெட்டுக்குள் இடம் பிடித்து விட்டது" வேடிக்கையாக தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: