மலைப்பாம்பிடம் மாட்டிக்கொண்ட 9 மாத நாய்க்குட்டி.. உயிரை பணயம் வைத்து போராடி மீட்ட உரிமையாளர் (வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ)

மலைப்பாம்பிடம் மாட்டிக்கொண்ட 9 மாத நாய்க்குட்டி.. உயிரை பணயம் வைத்து போராடி மீட்ட உரிமையாளர் (வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ)

9 மாதம் ஆன நாய் குட்டி

பெண் ஒருவர் மலைப்பாம்பிடம் இருந்து தனது செல்லப்பிராணியை காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 • Share this:
  9 மாதம் ஆன நாய்க்குட்டி ஒன்று மலைப்பாம்பின் வசம் சிக்கிக்கொண்டு தப்பிக்க வழியின்றி திணறும் போது சரியான நேரத்தில் நாயின் உரிமையாளர் பாம்பிடம் சண்டையிட்டு நாயைக் காப்பாற்றும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  ஆஸ்திரேலியாவை சேர்ந்த கெல்லி மோரிஸ், தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகின்றர். இவர் வீட்டு நாய் முற்றத்தில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென தோட்டத்தில் இருந்த மலைப்பாம்பு ஒன்று நாயின் உடலை முற்றிலும் வளைத்து தனக்கு இரையாக்க நினைத்தது.

  கெல்லி மோரிஸ், வீட்டின் வெளியே வரும் பொழுது தனது நாய்க்குட்டி பாம்பின் பிடியில் மாட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் செய்வதறியாது மாலைப்பாம்பின் உடலை பிடித்து சுற்றியுள்ளார். பின்னர் பாம்பு நாய்க்குட்டியை விடுத்துள்ளது. கெல்லியின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.  இதுகுறித்து கெல்லி மோரிஸ் தெரிவிக்கையில், நாங்கள் எங்கள் நாய்க்குட்டியின் ஒரு பயங்கரமான அலறல் சத்தத்தைக் கேட்டோம். நாங்கள் அது எங்கேயோ மாட்டியிருக்கும் அல்லது கீழே விழுந்திருக்கும் என நினைத்தோம். அதனால் நாங்கள் கீழே ஓடினோம். எங்கள் நாய்க்குட்டியை பாம்பு சுற்றியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். எல்லா இடங்களிலும் இரத்தம் இருந்தது என கூறியுள்ளார்.

   Owner fights python to save her nine month old puppy Video viral
  பத்திரமாக பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு


  நாயை பாம்பிடம் இருந்து மீட்ட பின்னர், அவசரகால கால்நடைக்கு கொண்டு சென்றோம் . நாய்க்குட்டியின் கண்கள், தலையின் பின்புறம் இரத்தம் கொட்டியதாக கெல்லி மோரிஸ் கூறியுள்ளார்.

  மருத்துவமனையில் நாயை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரலில் காயம் ஏற்பட்டதாகவும், அதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  தற்போது நாய்க்குட்டி நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெல்லி மோரிஸ் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால் பாம்பிடம் இருந்து நாயை காப்பாற்றியிருக்க முடியாது என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: