Rewind : 523 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கால்பதித்த வாஸ்கோடகாமா

மாதிரிப்படம்

இந்தியாவுக்கான கடல் வழி பயணத்தை ஐரோப்பிய நாடுகள் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தன.

  • Share this:
    ஐரோப்பிய நாடுகளுக்கான கடல் வழிப் பயணத்தை கண்டுபிடித்த போர்ச்சுக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா 523 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் கோழிக்கோட்டை அடைந்தார்.

    இந்தியாவுக்கான கடல் வழி பயணத்தை ஐரோப்பிய நாடுகள் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தன. இயற்கை வளம் மற்றும் வாசனை திரவியங்களை தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்ல திட்டமிட்ட அவர்களுக்கு தரைவழிப் பயணம் சரியாக அமையவில்லை. கடல் வாணிபத்தில் தழைத்தோங்கிய அவர்கள், கடல்வழி மார்க்கத்தை கண்டுபிடிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்தனர். இந்தியாவுக்கான கடல் வழிப் பாதையை கண்பிடிக்க புறப்பட்டவர்களில் ஏராளமானோரில் ஒருவர் வாஸ்கோடகாமா. முதல் நபராக புறப்பட்டவர் இல்லை.

    Also Read: காதலின் நினைவு.. லவ் லாக்கை உடைக்க 10,000 கிமீ பயணம் மேற்கொண்ட பெண்

    1497ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி லிஸ்பானில் இருந்து வாஸ்கோடகாமா தலைமையில் 170 பேர் கொண்ட குழு புறப்பட்டது. மொசம்பிக், மொம்பாசா, மாலிண்டி ஆகிய இடங்களில் நிறுத்தி ஓய்வெடுத்த அவர்கள், தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டனர். ஐரோப்பாவுக்கான நீர்வழிப் பாதையை கண்டுபிடிக்கும் நோக்கில் புறப்பட்ட அவர்களின் இடைவிடாத பயணம் வெற்றியில் முடிந்தது. அதாவது இன்றிலிருந்து 523 ஆண்டுகளுக்கு முன்பு 1498 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வாஸ்கோடமாக தலைமையிலான குழு வந்திறங்கியது.

    ஏற்கனவே, பல பேர் முயற்சி செய்து கண்டுபிடிக்க முடியாத நீர் வழிப்பாதையை வாஸ்கோடகாமா தலைமையிலான குழு கண்டுபிடித்தது, இன்றளவும் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. வாஸ்கோடகாமாவுக்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கான பாதையை கண்டுபிடிப்பதாக சென்ற கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார். தன் பயணத்தின் இடையே கிறிஸ்மஸ் விழாவை தென் ஆப்பிரிக்காவில் உள்ள நடால் நகரில் வாஸ்கோடமாக கொண்டாடினார். பின்னர் மொசாம்பிக் தீவை அடைந்த அந்தக் குழு, ஒரு மாதம் அங்கு ஓய்வெடுத்தது. அங்கு அரபு நாட்டினருடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட காமா, மொபாசாவில் (தற்போதைய கென்யா) இந்தியாவைச் சேர்ந்த குஜராத்தியை சந்தித்தார். அங்குதான், இந்தியாவுக்கு செல்வதற்கான முழு தகவலும் கிடைத்துள்ளது.

    Also Read: ‘பறக்கும் சீக்கியர்’ மில்கா சிங் கொரோனாவால் பாதிப்பு!

    இதனால், மகிழ்ச்சியான வாஸ்கோடகாமா அங்கிருந்து 20 நாள் பயணத்தை இந்திய பெருங்கடல் வழியாக மேற்கொண்டு இந்தியாவை அடைந்தார். இதன்மூலம், இந்தியாவை அடைந்த ஐரோப்பாவைச் சேர்ந்த முதல் நபர் என்ற சரித்திர சாதனையை படைத்தார். இந்தியாவில் இருந்த மளிகைப் பொருட்கள் மற்றும் உடைகளை போர்ச்சுக்கலுக்கு ஏற்றுமதி செய்தார். இந்த பயணத்தின் வெற்றியைத் தொடர்ந்து போச்சுக்கல் நாட்டின் மன்னர், மீண்டும் வாஸ்கோட காமாவை 1502 -1503 ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வர்த்தகத்துக்காக அனுப்பி வைத்தார். 1524 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மீண்டும் பயணத்தை மேற்கொள்ளும் வழியில் அவர் உயிரிழந்தார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: