100 ஆண்டுகள் பழமையான மீன் - டெட்ராய்ட் ஆற்றில் அதிசயம்!

100 ஆண்டுகள் பழமையான மீன் - டெட்ராய்ட் ஆற்றில் அதிசயம்!

100 ஆண்டுகள் பழமையான மீன்

முதலில் சிறிய வகை மீன் என நினைத்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஸ்டர்ஜன் வகை மீன் குறித்து ஆய்வில் ஈடுபட்டபோது, 100 ஆண்டுகள் பழமையான மீன் ஒன்று சிக்கியது ஆய்வாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் மீன் மற்றும் வனவிலங்கு சேவை (US Fish and Wildlife Service) மையம் கடந்த வாரம் டெட்ராய்டு ஆற்றில் (Detroit River) ஆய்வில் ஈடுபட்டது. ஸ்டர்ஜன் மீன் குறித்த அந்த ஆய்வில் நிபுணர்கள் 3 பேர் இடம்பெற்றிருந்தனர். ஆற்றில் பயணிக்க தொடங்கி சில நிமிடங்களில் மீன் ஒன்றை கண்ட ஆய்வாளர்கள் அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் சிறிய வகை மீன் என நினைத்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் எண்ணியதற்கும் மேலாக எடையுடைய மிகப்பெரிய ஸ்டர்ஜன் மீன் அவர்களது முயற்சியில் சிக்கியது.

படகில் எடுத்து அந்த மீனை அளவிட்டபோது மேலும் வியக்கத்தக்க விஷயங்கள் ஆய்வாளர்களுக்கு கிடைத்தது. 7 அடி நீளம் கொண்ட அந்த மீனின் சுற்றளவு மற்றும் மற்ற அளவுகளை கணக்கிட்டபோது சுமார் 108 கிலோ எடை இருந்த அந்த மீன் 100 ஆண்டுகள் பழமையானது என்றும், பெண் ஸ்டர்ஜன் மீன் என்றும் தெரியவந்தது. இதனால் வியப்படைந்த ஆய்வாளர்கள் இது குறித்த புகைப்படத்தை அமெரிக்காவின் மீன் மற்றும் வனவிலங்கு சேவை மையத்தின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தனர். இணையத்தில் வைரலான அந்த புகைப்படம் சுமார் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்து, பகிர்ந்திருந்தனர்.

ஆண்டுதோறும் ஸ்டர்ஜன் மீன் கணக்கெடுப்புக்காக நடத்தப்படும் இந்த ஆய்வு, ஏப்ரல் 22 ஆம் தேதி தெற்கு டெட்ராய்டு ஆற்றுப்பகுதியில் நடைபெற்றது. அப்போது பெரிய ஸ்டர்ஜன் மீன் பிடிக்கப்பட்டது. ஜெனிஃபர் ஜான்சன் (Jennifer Johnson) மற்றும் பேஜி வைகிரன் (Wigren) ஆகியோர் இந்த மீன் பிடிக்கப்பட்டது குறித்து பேசும்போது, "ஸடர்ஜன் மீன் இனம், ஆபத்தான உயிரினங்கள் பட்டியலில் உள்ளது. இதனால், இந்த மீன் வகைகளை பிடிக்க தடை உள்ளது. ஆண்டுதோறும் ஸ்டர்ஜன் மீன் ஆய்வு மற்றும் கணக்கெடுப்புக்காக நடத்தப்படும் இந்த ஆய்வில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்டர்ஜன் சிக்கும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

Also read... இரு நாடுகளிடையே ஒரே ஒரு பயணியுடன் 2,500 மைல்கள் பறந்த போயிங் விமானம்!

நாங்கள் பிடித்த பெண் ஸ்டர்ஜன் 100 ஆண்டுகள் பழமையானது என்பதை, அதன் எடை, நீளம் மற்றும் சுற்றளவு மூலம் கண்டுபிடித்தோம். கடந்த 100 ஆண்டுகளாக இந்த மீன் அற்றில் எதிர்கொண்ட விஷயங்களை எண்ணிப்பார்க்கும்போது வியப்பாக உள்ளது. முதலில் சிறிய வகை ஸ்டர்ஜன் என்று எண்ணிணோம். பிடிக்க முயற்சிக்கும்போது அது பெரிய மீன் என்று எங்களால் உணர முடிந்தது" எனத் தெரிவித்தனர்

ஸ்டர்ஜன் மீன் இனம், அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய மீன் இனங்களுள் ஒன்றாக இருப்பதால், மிச்சிகன் மற்றும் டெட்ராய்டு பகுதிகளில் அதனை பிடிக்க தடை உள்ளது. ஆண் ஸ்டர்ஜன் மீன்கள் 55 ஆண்டுகள் வரை வாழும், பெண் ஸ்டர்ஜன் மீன்கள் 70 முதல் 100 ஆண்டுகள் வரை வாழும். ஆண்டுதோறும் கணக்கெடுப்புக்காக பிடிக்கப்படும் மீன்கள் கூட, ஆய்வுக்குப் பிறகு உடனடியாக விடுவித்துவிட வேண்டும். அந்தவகையில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பிடிக்கப்பட்ட ஸ்டர்ஜன் மீனும் மீண்டும் ஆற்றில் விடப்பட்டது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: