Home » News » Trend

உலகின் மிகச்சிறிய நானோ-குளிர்சாதன பெட்டி... கண்ணுக்கே தெரியாத அளவு மிகச் சிறியது!

இந்த புதுமையான நுட்பம் குளிரூட்டும் செயல்திறனை அளவிடுவதற்கான ஒரு வழியாகும்.

உலகின் மிகச்சிறிய நானோ-குளிர்சாதன பெட்டி... கண்ணுக்கே தெரியாத அளவு மிகச் சிறியது!
  • News18 Tamil
  • Last Updated: September 24, 2020, 8:32 PM IST
  • Share this:
எலக்ட்ரான் நுண்ணோக்கி வழியாக மட்டுமே தெரியும் உலகின் மிகச்சிறிய நானோ-குளிர்சாதன பெட்டியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

யு.சி.எல்.ஏ (கலிபோர்னியா பல்கலைக்கழகம்) என்ற ஆராய்ச்சியாளர்கள் குழு 100 நானோமீட்டர் தடிமன் கொண்ட தெர்மோ எலக்ட்ரிக் குளிரூட்டிகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இந்த புதுமையான நுட்பம் குளிரூட்டும் செயல்திறனை அளவிடுவதற்கான ஒரு வழியாகும். ஒரு நானோ மீட்டரின் அளவு ஒரு மில்லிமீட்டரில் ஒரு மில்லியனுக்கு சமமாகும்.

இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரை சமீபத்தில் ஏ.சி.எஸ் நானோ இதழில் வெளியிடப்பட்டது. முன்னணி எழுத்தாளர் ஒருவர் இது குறித்து தெரிவித்திருப்பதாவது, "உலகின் மிகச்சிறிய குளிர்சாதன பெட்டியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இருப்பினும், அவை முட்டை மற்றும் பாலை சேமிக்கும் வழக்கமான குளிர்சாதன பெட்டிகள் அல்ல. ஏனெனில் இவை சிறிய சாதனங்களை விட மிகவும் சிறியது. இவை கணினிகளை குளிர்விப்பதற்கான முன்மாதிரியாகவும் (prototype) மற்றும் பெரிய அளவிலான ஃபைபர்-ஆப்டிக் நெட்வொர்க்குகளின் வெப்பநிலையை சீராக்கவும் பயன்படுத்தப்படும்.


ஒரு தெர்மோஎலக்ட்ரிக் சாதனம் என்பது இரண்டு வெவ்வேறு குறைக்கடத்திகள் (semiconductors) மற்றும் உலோக தகடுகளுக்கு (metallic plates) இடையில் ஒரு வகையான சாண்ட்விச் போன்று அமைந்திருக்கும். இதன் ஒருபக்கம் சூடாக இருக்கும் போது, மறுபுறம் குளிர்ச்சியாக இருக்கக்கூடும். இந்த வெப்பநிலை வேறுபாடு மின்சாரத்தை உருவாகும் தன்மை கொண்டது. இதேபோன்ற சாதனம் நான்கு தசாப்தங்களாக நாசாவின் வாயேஜர் விண்கலத்தை இயக்கி வருகிறது. அதேபோல, எதிர்காலத்தில் கார் ஏர் கண்டிஷனிங் வெளியேற்றத்தில் பயன்படுத்தப்படுவதற்கான சாத்திய கூறுகளும் உள்ளன.

இந்த குளிரூட்டலை எளிதாக்க மேற்கண்ட அதே செயல்முறையை மாற்றியமைக்கலாம். ஒரு பக்கத்தில் மின்சாரம் வழங்கும்போது, இரு பக்கங்களும் முறையே சூடாகவும் குளிராகவும் மாறும். இந்த நிகழ்வு பின்னர் குளிரான அல்லது குளிர்சாதன பெட்டியாக பயன்படுத்தப்படலாம். வழக்கமாக நம் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் நீராவி-சுருக்க அமைப்பை மாற்றுவதற்கு இந்த சிறிய சாதனம் அளவிடப்படலாம்" என்று இந்த ஆராய்ச்சி குழு நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி தான், இந்த கண்டுபிடிப்பு அரங்கேறியுள்ளது. இந்த நானோ குளிர்பெட்டியை உருவாக்க யு.சி.எல்.ஏவில் உள்ள குழு இரண்டு நிலையான குறைக்கடத்தி பொருட்களைப் பயன்படுத்தியது.

அவை, பிஸ்மத் டெல்லுரைடு மற்றும் ஆண்டிமனி-பிஸ்மத் டெல்லுரைடு ஆகும். இந்த கனமான பொருட்களில் இருந்து எடுக்கப்பட்ட செதில்களை கொண்டு, 1 கன மைக்ரோமீட்டரைச் சுற்றி நானோ சாதனத்தை உருவாக்கினர். ஒரு மனித விரல் நகம் கூட ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கான மைக்ரோமீட்டர்களால் வளரும், மனித விரல் நகத்தின் நுனியில் இதுபோன்ற 5,000 சாதனங்களை உருவாக்குவதை கற்பனை செய்வதே ஆச்சர்யமாக உள்ளது. அப்படி இருக்க ஆராய்ச்சியாளர்கள் அவ்வளவு சிறிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளது மிகவும் சவாலானது தான். இருப்பினும், இந்த சாதனங்களை பெரிய அளவில் செயல்பட வைப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் வரை, பயன்பாடுகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.
First published: September 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading