முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / புகைப்படத்தில் மறைந்திருக்கும் செல்போனை கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் தான்.!

புகைப்படத்தில் மறைந்திருக்கும் செல்போனை கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் தான்.!

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical illusion | கீழே கொடுக்கப்பட்டுள்ள போட்டோவில் ஒரு கார்பெட் இருக்கிறது. நீங்கள் சாதாரணமாக பார்த்தால் அது மட்டும் தான் தெரிகிறது. ஆனால் இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிடும் நபர்கள் அதில் ஒரு செல்போன் மறைந்திருப்பதாக கூறுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் விட சமீபத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்ஸ் எனப்படும் ஒளியியல் மாயை தொடர்பான போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. காண்போர் கண்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் விதவிதமான ஆப்டிக்கல் இல்யூஷன்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

ஒரு ஓவியத்தில் மறைத்திருக்க வேண்டியதை கண்டுபிடிப்பதாகட்டும் அல்லது அதில் உள்ள புதிருக்கு தீர்வு தருவதாகட்டும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் எப்போதுமே நம் கவனத்தை ஈர்ப்பவையாகவே அமைகின்றன. புதிர்கள், மைண்ட் கேம்கள் மற்றும் சுடோகு போன்றவற்றைத் தீர்ப்பதில் உள்ள சுவாரஸ்யங்களை விட ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மூளைக்கு சிறந்த சவாலாக உள்ளன. ஆப்டிக்கல் இல்யூஷன் புதிர்கள் அனைத்துமே திறமையாளர்களால் வடிவமைக்கப்பட்ட படங்கள் மற்றும் ஓவியங்கள் ஆகும்.

ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும். சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும். அப்படிப்பட்ட ஓவியம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஒரே நேரத்தில் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்கும் இந்த புதிர் விளையாட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்தமானதாக மாறி வருகிறது. தற்போது இணையத்தில் பார்க்க மிகவும் சாதாரணமாக தோன்றும் ஒரு போட்டோ தன்னுள் மிகப்பெரிய ஆச்சர்யத்தை மறைத்து வைத்திருப்பதால், தாறுமாறு வைரலாகி வருகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள போட்டோவில் ஒரு கார்பெட் இருக்கிறது. நீங்கள் சாதாரணமாக பார்த்தால் அது மட்டும் தான் தெரிகிறது. ஆனால் இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிடும் நபர்கள் அதில் ஒரு செல்போன் மறைந்திருப்பதாக கூறுகின்றனர்.

இந்த கார்ப்பெட்டை நன்றாக உற்றுப்பாருங்கள்... மறைக்கப்பட்ட செல்போனைக் கண்டுபிடிக்க முடிகிறதா? படத்தில் உள்ள நீல நிற வேலைப்பாடுகளை நன்றாக உற்றுப்பாருங்கள். வலது, இடது என நன்றாக கண்களை அலைபாய விடுங்கள்.

Also Read : ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே இந்த புகைப்படத்தில் இருக்கும் யானையை கண்டுபிடிக்க முடியும்... நீங்கள்.?

இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா?. சரி, கவலையை விடுங்கள். நாங்களே விடையோடு, அது மறைந்துள்ள இடத்தையும் சுட்டிக்காட்டுகிறோம். அந்த செல்போன் புகைப்படத்தில் உள்ள டேபிளுக்கு கீழே தான் இருக்கிறது. டேபிளுக்கு கீழே வலதுபுறம் உள்ள கார்பெட்டின் நீல நிற பட்டை வடிவ டிசைனுக்குள் தான் செல்போன் மறைந்துள்ளது. செல்போனின் பின்பக்க கவர் டிசைனும், கார்பெட் டிசைனும் ஒன்றாக இருப்பதால் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் குறிப்பிட்ட இடத்தை நன்றாக உற்றுப்பார்த்தால் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கார்பெட் பூ டிசைன் நிறம் மாறியிருப்பதை காணலாம். இதை வைத்தே நாம் செல்போன் இருப்பதை கண்டுபிடித்து விடலாம், அது எங்கு என சரியாக பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தைப் பாருங்கள்.

இந்த வைரலான ஆப்டிக்கல் இல்யூஷனை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு, விடையை கண்டுபிடிக்க சவால் விடுங்கள்...

First published:

Tags: Optical Illusion, Tamil News, Trending