ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ரயில் பாதையில் எந்த மஞ்சள் கோடு நீளமானது.? 10 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் தான் அதிபுத்திசாலி.!

ரயில் பாதையில் எந்த மஞ்சள் கோடு நீளமானது.? 10 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் தான் அதிபுத்திசாலி.!

ஆப்டிகல் இல்யூசன்

ஆப்டிகல் இல்யூசன்

Optical Illusion | இணையத்தில் தற்போது வைரலாகும் ஒளியியல் மாயை புகைப்படத்தில் ரயில் பாதையில் இரண்டு மஞ்சள் நிற கோடுகள் உள்ளன. இதில் உள்ள நீளமான மஞ்சள் கோட்டினை 10 வினாடிக்குள் கண்டுபிடிக்கவும்…

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு நம்மில் பலரை இணையத்தில் அறிவுப்பூர்வமாக யோசித்து செயல்பட வைக்கிறது ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்கள். நமது மூளைக்கும், கண்களுக்கும் சவால் விடும் வகையிலான இந்த புகைப்படங்களில் மறைந்திருக்கும் விஷயங்களை நீங்கள் 1 நிமிடம், 30 வினாடிகள், 10 வினாடிகள் என குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடித்துவிடுவீர்கள்? என்றால் நிச்சயம் நீங்களும் புத்திசாலிகள் லிஸ்டில் இடம் பெற்றுள்ளீர்கள் என அர்த்தம்.

சில நேரங்களில் இதுப்போன்றுள்ள ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்களைப் பார்த்தவுடன் கண்டுபிடித்துவோம். ஆனால் சில நேரங்களில் என்ன தான் இதில் உள்ளது? என தலை முடியை பிய்த்துக் கொள்வோம். அப்படியொரு இல்யூசன் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால் இது சற்று வித்தியாசமானது. அப்படி என்னதான்? என நாமும் அறிந்துக் கொள்வோம்.

ரயில் பாதையில் உள்ள நீளமான மஞ்சள் கோட்டினை 10 வினாடிக்குள் கண்டுபிடிக்கவும்…

இணையத்தில் தற்போது வைரலாகும் ஒளியியல் மாயை புகைப்படத்தில் ரயில் பாதையில் இரண்டு மஞ்சள் நிற கோடுகள் இருப்பது போன்று தெரியும். இன்றைய ஒளியியல் மாயை புகைப்படத்தின் கேள்வி என்னவென்றால், நீங்கள் பார்க்கும் இந்த ரயில் பாதையில் எந்த மஞ்சள் நிற கோடு நீளமாக தெரியும் என்று. இதைப் பார்த்தவுடனே நம்மில் பலர் இதில் என்ன கஷ்டம் உள்ளது?

இதோடு ரயில் தண்டவாளத்தில் உள்ள முதல் கோடு தான் நீளமானதாக உள்ளது என்று சொல்லிவிடுவோம். ஆனால் இது முற்றிலும் தவறானது. இந்த இடத்தில் தான் நமது மூளைக்கு சவால் விடுகிறது இந்த ஆப்டில் இல்யூசன் புகைப்படங்கள். இது மற்ற இல்யூசன்களை விட வேறுபட்டது. அது என்ன என்பது? குறித்து நாமும் அறிந்து கொள்வோம்..

Also Read : இந்த படத்தில் ஒளிந்துள்ள புலிகளை 11 வினாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள ரயில் பாதையில் உள்ள மஞ்சள் நிற கோடுகள் பொன்சோ ஒளியியல் மாயை அதவாது ponzo optical illusion புகைப்படங்கள் என்றழைக்கப்படுகிறது. இதை முதன் முதலில் இத்தாலிய உளவியலாளர் மரியோ பொன்சோவால் கடந்த 1913 ல் வெளியிடப்பட்டது. இதன்படி, இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் பார்ப்பதற்கு சற்று மாறுபாட்டுடன் தெரியவரும். ஆனால் இந்த கோடுகள் இரண்டும் ஒரே நீளமானவை. இதில் பெரியது, சிறியது என எந்த வித்தியாசமும் கிடையாது.

இவற்றை அளந்துப் பார்த்தால் எல்லாம் ஒரே அளவு தான். இவ்வாறு நமது மூளைக்கு சவால் விடும் இந்த புகைப்படங்களை 10 வினாடிக்குள் உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? நிச்சயம் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகத் தான் இருக்கும். ஒரு வேளை கண்டுபிடித்திருந்தீர்கள் என்றால் நீங்களும் அதிபுத்திசாலிகளின் லிஸ்டில் தான் இடம் பெற்றிருப்பீர்கள் என்று அர்த்தம்.

Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Tamil News, Trending