Home /News /trend /

குதிரை எந்த திசையில் நடப்பது போல் தெரிகிறது? இதை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை கூறலாம்..

குதிரை எந்த திசையில் நடப்பது போல் தெரிகிறது? இதை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை கூறலாம்..

காட்சி படம்

காட்சி படம்

Optical Illusion : குதிரை நடந்து செல்வதை நீங்கள் எந்த திசையில் பார்த்தீர்கள் ?

குதிரை செல்லும் திசையை வைத்து நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்பதை கணிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. 

சமூக வலைத்தளங்களில் நிறைய போட்டோக்கள் வைரலாவது உண்டு. சில சமயங்கள் ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் மாய தோற்றத்தை கொண்ட போட்டோஸும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவை பார்ப்பதற்கே சற்று குழப்பமாக இருக்கும்.

நம்முடைய ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்களை எளிதாக தெரிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஆப்டிக்கல் இல்யூஷன். ‘இருக்கு ஆனா இல்ல’ என்று கூறுவது போல, ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும். அதே போல இங்கே ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் (மாயை) புகைப்படம் உள்ளது. தற்போது குதிரையின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பிரைட் சைட் உருவாக்கியுள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோவை வைத்து நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறீர்களா அல்லது எதிர்காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறீர்களா என்பதை நீங்கள் பார்ப்பதைப் பொறுத்து வெளிப்படையாக சொல்ல முடியும்.

ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில், குதிரையில் ஒரு மனிதனை அமர்ந்து கொண்டிருக்கிறார். அதன் காலடியில் ஒரு நாய் இருக்கிறது. இதில் அந்த குதிரை எந்த திசையில் செல்கிறது என்பதைப் பொறுத்தது அதனை பார்க்கும் நபரின் சிந்தனையை கணிக்க முடியும் என தெரிகிறது.



also read :நீங்கள் எப்படிப்பட்டவர்? இந்த ஓவியத்தில் முதலில் பார்ப்பதை வைத்து தெரிந்து கொள்ளுங்கள்!

புதிரின்படி, குதிரை முன்னோக்கி நடப்பதை நீங்கள் கண்டால், எதிர்காலத்தில் நீங்கள் எப்போதும் நல்லதைத் தேடுகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையில் பெரிய விஷயங்கள் வரும் வரை காத்திருக்க மாட்டீர்கள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி உற்சாகமாக இருப்பீர்கள்.

குதிரை பின்னோக்கி நடப்பதை நீங்கள் பார்த்தால், நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டீர்கள் என்று அர்த்தம். நீங்கள் கடந்த காலத்தைப் பற்றிய ஏக்கத்தை உணரலாம் மற்றும் வித்தியாசமாக என்ன செய்திருக்க முடியும் என்பதைப் பற்றி யோசித்து, அதைப் பற்றியே அதிகம் சிந்திக்கும் மனநிலையில் வைத்திருக்கலாம்.

இந்த ஆப்டிக்கல் இல்யூஷனை வெளியிட்டுள்ள பிரைட் சைட் கூறியுள்ளதாவது: “உங்களுக்கு உங்களைப் பற்றிய உண்மை நன்றாக தெரியுமா?. சமூக தொடர்புகளில் இருந்து விலகி, சில சமயங்களில் தங்கள் சொந்த எண்ணங்களில் ஆர்வமுள்ள இன்ட்ரோவெர்ட் நபர் என நினைத்திருக்கலாம், ஆனால் உண்மையில் நீங்கள் அயல் நோக்குடன் சமூக ரீதியாக உறுதியான நபராக இருப்பீர்கள். நீங்கள் ஒரு தர்க்கரீதியான, பகுப்பாய்வு சிந்தனையாளரா அல்லது உங்கள் முடிவெடுப்பதில் பெரும்பாலானவை உள்ளுணர்வு அல்லது உணர்ச்சிகளின் அடிப்படையில் இருக்கிறீர்களா?. இந்த ஆப்டிகல் மாயைகள் ஆளுமை சோதனை அனைத்தையும் வெளிப்படுத்தும்” என குறிப்பிட்டுள்ளது.

also read : நீங்கள் பார்க்கும் முதல் உருவம் உங்கள் காதல் வாழ்க்கையை குறிக்கும்..

குதிரை நடந்து செல்வதை நீங்கள் எந்த வழியில் பார்த்தீர்கள், கடந்த காலத்தை விட்டுவிட வேண்டிய நேரம் இதுதானா? அல்லது நீங்கள் எப்பொழுதும் முன்னோக்கி சிந்திக்கும் நபரா? என்பதை முயற்சித்து பாருங்கள்..

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி