Home /News /trend /

இந்த படத்தில் நீங்கள் எந்த முகங்களை முதலில் பார்த்தீர்கள் - உங்கள் ஆளுமையை தெரிந்துகொள்ளுங்கள்!

இந்த படத்தில் நீங்கள் எந்த முகங்களை முதலில் பார்த்தீர்கள் - உங்கள் ஆளுமையை தெரிந்துகொள்ளுங்கள்!

Trending

Trending

Optical illusion | நமது கண்களையும், மூளையையும் ஏமாற்ற கூடிய பல விஷயங்கள் ஆப்டிகல் இல்யூஷன்களில் ஒளிந்திருக்கும்.

    ஆப்டிகல் இல்யூஷன் என்பது நம்முடைய உணர்திறனை சோதிக்கும் ஒரு வகையான அனலைட்டிக்கல் டூல் (Analytical tool) அதாவது பகுப்பாய்வு கருவியாகும். ஆப்டிக்கல் இல்யூஷனை பார்க்கும் போது நாம் அடிக்கடி பார்க்காத ஒன்றை பார்க்கிறோம் அல்லது இருக்கும் ஒன்றை பார்க்க தவறுகிறோம்.

    ஃபிஸிக்கல், ஃபிஸியலாஜிக்கல் மற்றும் காக்நெட்டிவ் போன்ற பல வகையான ஆப்டிகல் இல்யூஷன்கள் உள்ளன. பல ஆப்டிகல் இல்யூஷன்கள் கோடிட்டு காட்ட கூடிய பல மறைக்கப்பட்ட உருவங்களை அல்லது விவரங்களை கொண்டுள்ளன. நமது கண்களையும், மூளையையும் ஏமாற்ற கூடிய பல விஷயங்கள் ஆப்டிகல் இல்யூஷன்களில் ஒளிந்திருக்கும்.

    அவற்றில் சில நம்முடைய ஆளுமைகளை வெளிப்படுத்த கூடியவையாக கூறப்படுகின்றன. தற்போது இங்கே நாம் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் முதலில் பார்க்கும் முகங்கள் உங்கள் ஆளுமையை பற்றி நிறைய கூறுகின்றன.



    மேலே உள்ள ஒரு முதியவர் மற்றும் ஒரு வயதான பெண்மணி ஆகியோர் அடங்கிய இமேஜில் மறைந்திருக்கும் வேறு முகங்களை கண்டீர்களா, இல்லையா என்பதை வைத்து உங்களின் ஆளுமையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    Also Read : 30 வினாடிகளுக்குள் அடுத்த எண்ணை கண்டுபிடித்தால் நீங்க வேற லெவல்..!

    இந்த ஆப்டிகல் இல்யூஷனில் எத்தனை முகங்களை நீங்கள் பார்த்தீர்கள்?

    இந்த ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் ஆளுமை பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களைக் கண்டறிய உதவுகிறது. "தி மைண்ட்ஸ் ஜர்னல்" ஷேர் செய்துள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷனில் மொத்தம் 5 பேர் உள்ளனர். ஆம் பெரும்பாலானோர் கண்களுக்கு ஒரு முதியவர் மற்றும் பாட்டி இருப்பது மட்டுமே கண்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் இந்த இருவரை தவிர மேலும் மூவர் இந்த ஆப்டிகல் இல்யூஷனில் உள்ளனர்.

    ஆம், படத்தில் மறைந்திருக்கும் வயதான தம்பதிகளின் பக்கவாட்டு முகம் தான் பலருக்கும் சட்டென்று தெரிந்திருக்கும். இவர்களை முன்னோக்கி பார்த்தால் ஒரு ஆணும் பெண்ணும் உள்ளது தெரியும். முதியவர் மற்றும் ஒரு ஆண் அடங்கி இருக்கும் வலது பக்கத்தில் பின்னணியில் இன்னொரு பெண் இருப்பதையும் பார்க்கலாம்.

    ஆக மொத்தம் இந்த ஒரே ஆப்டிகல் இல்யூஷனில் இருக்கும் உருவங்களில் நீங்கள் முதலில் யாரை பார்த்தீர்கள் என்பதன் அடிப்படையில் உங்களிடம் என்ன வகையான ஆளுமைப் பண்புகள் உள்ளன என்பதை பற்றி பார்க்கலாம்.

    Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் 6 விலங்குகளை கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் தான்!

    முதியவர்களை முதலில் பார்த்திருந்தால்..

    இந்த ஆப்டிகல் இல்யூஷனில் முதலில் ஒரு வயதான ஜோடியின் உருவத்தைக் கண்டிருந்தால், நீங்கள் வாழ்க்கையைப் பற்றி ஒரு பெரிய பார்வையை எடுத்து கொள்கிறீர்கள். அற்ப விஷயங்களில் சிக்கி கொள்ளாமல் இருப்பீர்கள். நீங்கள் ஒரு தந்திரக்காரர் மற்றும் நல்ல சிந்தனையாளர் என்பதையும், இலக்குகளில் கவனம் செலுத்துவீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. நீங்கள் சிறந்த திட்டமிடல் திறன்களை கொண்டிருக்கிறீர்கள். தொழில் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு கீழ் வேலை பார்ப்போரை மைக்ரோமேனேஜ் செய்யாமல் ஒரு சிறந்த முதலாளியாக இருப்பீர்கள்.

    Also Read : காஃபி எப்படி இருந்தால் பிடிக்கும் என்று சொல்லுங்கள், நீங்கள் எப்படிப்பட்டவர் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.!

    இளம் ஜோடியோடு சேர்த்து மற்றொரு பெண்ணை முதலில் பார்த்திருந்தால்..

    வயதான தம்பதியினரின் முகத்தில் ஒரு பெண்ணின் உருவத்தையும், ஒரு கிட்டார் வாசிக்கும் ஆணையும், வலதுபுறத்தில் கிட்டார் பிளேயருக்குப் பின்னால் பின்னணியில் இருக்கும் பெண்ணையும் நீங்கள் முதலில் கண்டிருந்தால், விவரங்கள் மீது நீங்கள் சிறந்த கவனம் செலுத்துவீர்கள். மேலும் நீங்கள் பிறரை மற்றும் சுற்றுப்புறங்களை உன்னிப்பாகக் கவனிப்பீர்கள் என்பதையும் மற்றவர்கள் அடிக்கடி தவறவிடக்கூடிய விஷயங்களை நீங்கள் சரியாக கவனிக்கிறீர்கள் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது. எதையும் மேலோட்டமாக பார்க்காமல் ஆழமாக தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் மற்றும் கடைசி விவரம் வரை விஷயங்களை திட்டமிடுவதில் சிறப்பானவர் என்பதை குறிக்கிறது.
    Published by:Selvi M
    First published:

    Tags: Optical Illusion, Trending

    அடுத்த செய்தி