Home /News /trend /

இந்த படத்தில் உங்களுக்கு முதலில் தெரிந்தது என்ன? காதலில் உங்கள் பெர்சனாலிட்டியை தெரிந்து கொள்ளலாம்

இந்த படத்தில் உங்களுக்கு முதலில் தெரிந்தது என்ன? காதலில் உங்கள் பெர்சனாலிட்டியை தெரிந்து கொள்ளலாம்

Trending

Trending

Personality Test | இந்த ஆப்டிகல் இல்யூஷன் (மாயை) புகைப்படத்தில் உங்களுக்கு முதலில் தெரிந்தது என்ன? நீங்கள் புகைப்படத்தில் முதலில் எதைப் பார்த்தீர்கள் என்பதன் அடிப்படையில், காதலில் உங்கள் ஆளுமை எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நம்முடைய ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்களை எளிதாகத் தெரிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஆப்டிகல் இல்யூஷன். ‘இருக்கு ஆனா இல்ல’ என்று கூறுவது போல, ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும். அதே போல இங்கே ஒரு ஆப்டிகல் இல்யூஷன் (மாயை) புகைப்படம் உள்ளது. அதில் உங்களுக்கு முதலில் தெரிந்தது என்ன? நீங்கள் புகைப்படத்தில் முதலில் எதைப் பார்த்தீர்கள் என்பதன் அடிப்படையில், காதலில் உங்கள் ஆளுமை எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த புகைப்படத்தை ஒலேக் ஷுப்லைக் என்பவர் வடிவமைத்துள்ளார். ஒவ்வொருவரும் காதலை ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள், அணுகுவார்கள். அதை அடிப்படையாக வைத்து ஆறு விதமான இமேஜ்கள் ஒரே புகைப்படத்தில் காணப்படுகின்றன.

நீங்கள் முதலில் எந்த வடிவத்தைப் பார்க்கிறீர்களோ, உங்கள் காதல் பெர்சனாலிட்டியைக் குறிக்கும்.



1. ஓவியரும் அவரின் ஓவியமும்
2. மீசையில்லாத நபர்
3. மீசை உள்ள நபர்
4. மரத்துக்கு பக்கத்தில் இருக்கும் பெண்
5. வீடுகள்
6. இசைக்கருவி

நீங்கள் முதலில் பார்த்தது ஓவியரும் அவரின் ஓவியமும்

நீங்கள் யாரை காதலிக்கிறீர்கள் என்பதை மிக மிக கவனமாக தேர்ந்தெடுப்பீர்கள். நீங்கள் காதலிக்க தொடங்குவதற்கு முன்பு மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு நிறைய நேரம் செலவிடுவீர்கள். ஆனால் காதலில் விழுந்த பின்பு அந்த ஒரு ஸ்பெஷல் நபருக்காக உங்களுடைய எல்லாவற்றையும் நீங்கள் கொடுக்க தயங்க மாட்டீர்கள். அதுவே உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கலாம்.

Also Read : 99 சதவீதம் பேர் தோல்வி... ஒரே ஒரு தீக்குச்சியை நகர்த்தி இந்த கணக்கை சமன் செய்ய முடியுமா.?

நீங்கள் முதலில் பார்த்தது மீசையில்லாத நபர்

காதல் என்று வரும் பொழுது நீங்கள் கொஞ்சம் சீரியஸான நபர். நீங்கள் காதலிக்கும் போது பல்வேறு உணர்வுகளை எதிர்கொள்வீர்கள். எனவே உங்களுக்கு சில நேரங்களில் தனிமை பெரிய தேவையாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் நீங்கள் தனிமையை விரும்புவது, உங்கள் பார்ட்னரை குழப்பிவிடும்; நீங்கள் அவரை தவிர்க்கிறீர்கள் என்று நினைக்க வைக்கும்; எனவே அதிக நேரம் தனிமையில் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நீங்கள் முதலில் பார்த்தது மீசை இருக்கும் ஆண்

காதலிக்கத் தொடங்குவதற்கு முன்பு உங்களுக்கு எந்த விஷயமும் பெரிதாகத் தெரியாது. எந்த விஷயத்துக்கும் அடிபணிய மாட்டீர்கள். ஆனால், காதலில் விழுந்த சில காலத்திலேயே, எல்லாம் மாறிவிடும். குடும்பம், வீடு, உறவு என்று இவை எல்லாமே உங்கள் வாழ்வின் அங்கமாகி விடும். சில நேரங்களில் வீட்டில் கிடைக்கும் வசதிகளை துறப்பது உங்கள் வாழ்க்கைக்கு உதவும்.

Also Read : பாகுபலி ராஜமாதா போல் தனது குழந்தையை மக்களுக்கு காட்டிய கொரில்லா - வைரல் வீடியோ

நீங்கள் முதலில் பார்த்தது மரத்துக்கு பக்கத்தில் இருக்கும் பெண்

காதலில் மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் உணர்வுபூர்வமாக பார்ப்பீர்கள். நீங்கள் காதலில் இருக்கும் போது, ஆர்வத்துடன், உங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். உறவில், மிகவும் சென்ஷுவலாக இருப்பீர்கள், ஆனால் கவனமாக இருக்க வேண்டும்!

நீங்கள் முதலில் பார்த்தது வீடுகள்

நீங்கள் எதிர்காலத்தை நோக்கியே செயல்படுவீர்கள். காதலிக்காத வரை, நீங்கள் எதையும் திட்டமிட்டு செய்யமாட்டீர்கள். ஆனால் காதலிக்க தொடங்கிய பிறகு உங்க எதிர்காலத்திற்கான எல்லா விஷயங்களையுமே நீங்கள் திட்டமிட்டு செய்ய துவங்குவீர்கள். இதுவே உங்கள் காதலில் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

Also Read : தூங்கி கொண்டிருந்த சிறுவனின் சட்டையில் புகுந்த பாம்பு... காப்பாற்ற போராடிய தாய்.. இறுதியில் நடந்தது - நெஞ்சை உலுக்கும் வீடியோ

நீங்கள் முதலில் பார்த்தது இசைக்கருவி

உறவில் நீங்கள் மிகவும் கிரியேட்டிவ் நபராக இருப்பீர்கள். உங்களுடைய கலை ஆர்வம், நோக்கம் கொண்ட பக்கம், புதிய அனுபவங்கள் ஆகியவற்றை நீங்களே பெரிதாக விரும்புவீர்கள். இவையெல்லாம், காதலில் விழுந்த பின்பு தான் உங்களுக்கு புரியும்.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Personality Test, Trending

அடுத்த செய்தி