Home /News /trend /

இந்த படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது பெண்ணா, ஆணா அல்லது பறவையா.?

இந்த படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது பெண்ணா, ஆணா அல்லது பறவையா.?

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

Optical Illusion | தினமும் சோசியல் மீடியாவில் விதவிதமான ஆப்டிகல் இல்யூஷன்கள் வைரலாகி வருகின்றன. இன்று அப்படியொரு ஆப்டிக்கல் இல்யூஷன் பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இணையத்தில் வைரலாகி வரும் ஆப்டிகல் இல்யூஷன்கள் மூளையின் சிக்கல்களை ஆராய்ச்சியாளர்கள் புரிந்துகொள்ள உதவுகின்றன. மேலும் மனிதர்களின் கண்காணிப்புத் திறனை மேம்படுத்தவும் சிறந்த வழியாக உள்ளது. குறிப்பாக சில ஆப்டிகல் இல்யூஷன்கள் நமது உள்ளார்ந்த உளவியல் பண்புகளை சுட்டிக்காட்ட பயன்படுகின்றன. ஒரு சாதாரண மனிதனின் மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் விஷயங்களை அல்லது படங்களைப் பார்ப்பதை வைத்து வித்தியாசமான உணர்வை உருவாக்குகிறது. இவை மனிதர்களின் குண நலன்கள், பண்புகள் ஆகியவற்றைக் கண்டறிய மனோ பகுப்பாய்வுத் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன.

சில வகை ஆப்டிகல் இல்யூஷன்களுக்கு மக்களின் உள்ளார்ந்த ஆசைகளையும் எண்ணங்களையும் வெளிக்கொண்டு வரும் ஆற்றல் உள்ளவை. தினமும் சோசியல் மீடியாவில் விதவிதமான ஆப்டிகல் இல்யூஷன்கள் வைரலாகி வருகின்றன. இன்று அப்படியொரு ஆப்டிக்கல் இல்யூஷன் பற்றித் தான் பார்க்கப்போகிறோம். மேலே கொடுக்கப்பட்டுள்ள ஓவியமானது சர்ரியலிசம் என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு, ரஷ்ய கலைஞர் இகோர் லைசென்கோ என்பவரால் வரையப்பட்டுள்ளது.

சர்ரியலிசம் என்பது, தூக்கத்தில் மனதில் இருந்து தோன்றும் கனவுகளைச் சித்தரிக்க முற்படும் கலைப் பரிமாணம் ஆகும், சுருக்கமாக சொன்னால் மிகை எதார்த்தவாதம் என அழைக்கப்படுகிறது. நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஓவியத்தில் ஒரு அழகிய நிலப்பரப்பு, கடல் அலைகள் தென்படுகிறதா?... ஆனால் அதனுள் வேறு சில உருவங்களும் மறைந்துள்ளன. அதில் நீங்கள் எதை முதலில் பார்க்கிறீர்கள் என்பதை வைத்து உங்கள் உணர்வின் அளவைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.



இப்போது சொல்லுங்கள், நீங்கள் முதலில் எதைப் பார்த்தீர்கள்?

அது பெண்ணா, பறவையா அல்லது ஆணா?

பெண்:

கடல் அலைகள் நிலத்தில் வந்து மோதும் காட்சியை, கடற்கரையில் அமர்ந்தபடி தலையில் தொப்பி அணிந்த பெண் ஒருவர் கண்டு ரசித்துக்கொண்டிருப்பதை நீங்கள் முதலில் பார்த்திருந்தால், நீங்கள் சராசரியான உணர்வைக் கொண்ட ஒரு நபர் என்பது உறுதியாகிறது. மேலும் படத்தில் உள்ள அடிப்படையான விஷயங்களை மட்டுமே உங்களால் காண முடியும் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

Also Read : பாலைவனத்தில் பூக்களா? பூத்துக்குலுங்கும் அட்டகாமா பாலைவனம்.... கண்ணைக் கவரும் காட்சிகள் !

பறவை:

ஓவியத்தை பார்த்த முதல் பார்வையிலேயே உங்கள் கண்ணுக்கு பறவை தென்பட்டிருந்தால், கண், காது, மூக்கு, வாய் உள்ளிட்ட ஐம்புலன்களும் நல்ல உணர்திறனைக் கொண்டுள்ளது என்றும், உங்களிடம் ஒரு படத்தில் உள்ள சிக்கலான விஷயங்களைக் கண்டறியும் திறமை உள்ளது என்பதும் உறுதியாகிறது.

Also Read : இந்த தக்காளி கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் 3 ஆப்பிள்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

ஆண்:

பறவை மற்றும் பெண் இருவருமே பார்த்த முதல் பார்வையிலேயே கண்களில் படும்படி உள்ளனர். ஆனால் ஓவியத்தில் உள்ள ஆண் உருவத்தை உற்றுநோக்கி பார்க்கும் சிலரால் மட்டுமே கண்டறிய முடியும். அப்படிப்பட்ட சிலரில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்கு சிறந்த உணர்தல் திறனும், படத்தில் உள்ள மிகவும் சிக்கலான விஷயங்களைக் கூட எளிதில் அடையாளம் காணும் திறனும் உள்ளது.

இகோர் லைசென்கோவின் வரைந்துள்ள இந்த ஓவியத்தில் புகழ்பெற்ற பிரெஞ்சு கடல்சார் ஆய்வாளர் ஜே-ஒய் கூஸ்டோ (J-Y Cousteau) என்பவரது உருவப்படம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது,
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி