"ஆப்டிகல் இல்யூஷன்" என்பது உங்கள் மூளையை ஏமாற்றும் ஒரு மாய வித்தையாகும். இன்று இணையத்தில் வைரலாக இருக்க கூடிய விஷயங்களில் ஒன்று ஒலியியல் மாயை சார்ந்த படங்களும், வீடியோக்களும் தான். இதில் நாம் பார்க்க கூடிய விஷயங்கள் வேறு சிலவற்றை போன்ற தோற்றத்தை பல நேரங்களில் நமக்கு உண்டாக்க கூடும். இந்த உணர்வை தான் ஆப்டிகல் இல்யூஷன் என்று கூறுவார்கள்.அதாவது, ஒன்றை ஒரு நேரத்தில் பார்க்கும்போது வேறு ஒன்று போல தோன்றும். அதையே இன்னொரு முறை பார்க்கும் போது வித்தியசாமான ஒன்றாக உணர முடியும்.
குறிப்பாக நமது மூளை இவற்றை வேறு சிலவற்றை போன்று கற்பனை செய்து கொள்ளும். தூரத்தில் இருந்து பார்க்கும் போது நமது மூளைக்கு தெரிந்த அந்த உருவம், அருகில் இருக்கும் போது வேறொரு உருவத்தை காட்ட கூடும். இதுவும் ஒளியியல் மாயையில் அடங்கும். இப்படி நமக்கு தோன்றுவதற்கு பல காரணிகள் உண்டு. பொதுவாக ஆப்டிகல் மாயை வகை படங்கள் உங்கள் மூளையின் திறனை சோதிக்கும் வகையில் அமையும். அறிவாற்றல், உடலியல் மற்றும் நேரடி காட்சி மாயைகள் என மூன்று வகையான ஒளியியல் மாயைகள் உள்ளன. ஆப்டிகல் மாயைகளை வேறுபடுத்துவது ஒருவரின் கவனத்தை நீண்ட காலத்திற்கு கைப்பற்றி வைத்திருக்கும் திறன் ஆகும்.
ஒளியியல் மாயைகள் அறிவாற்றல் திறன்களின் வளர்ச்சிக்கும் உதவும். வழக்கமான ஆப்டிக்கல் மாயை புதிர்களைத் தீர்ப்பதில் ஒரு நபரை விரைவாக சிந்திக்க கூடியவராக மாற்றும். எனவே, உங்கள் மூளை திறனை சோதனைக்கு உட்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், இதோ உங்களுக்கான ஒரு ஆப்டிகல் புதிர் காத்திருக்கிறது. இந்த ஆப்டிகல் மாயை சவாலை நீங்கள் இப்போதே முயற்சிக்க வேண்டும். இந்த படத்தில் உள்ள கண்ணாடியை வெறும் 8 வினாடிகளுக்குள் கண்டறிவதே உங்களுக்கான இன்றைய சவால்.
இந்த படத்தை பார்க்கையில் நிச்சயம் குழப்பம் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில், பல வகையான டிசைன்கள் இதில் உள்ளன. இந்நிலையில் இதில் கண்ணாடியை கண்டுபிடிப்பது மிக கடினமான விஷயமாகவே இருக்கும். பொதுவாக ஆப்டிக்கல் மாயைகள் ஒருவரின் அவதானிப்பு மற்றும் விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறனை மதிப்பிடுவதற்கான எளிய வழியாகும். எனவே, உங்கள் புத்திசாலித்தனத்தை சோதிக்க இது ஒரு சிறந்த வழியாகும். ஆனால் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட IQ சோதனைகள் உங்கள் உண்மையான IQ அளவைக் கண்டறிய சிறந்த வழியாகும்.
சரி, இந்த ஆப்டிகல் மாயை சவாலில் வெற்றி பெற, நீங்கள் சிறந்த கண்காணிப்பு திறன் பெற்றவராகவும், பொறுமை உள்ளவராகவும் இருக்க வேண்டும். படத்தில் ஒளிந்துள்ள கண்ணாடியை கண்டுபிடிக்க முதலில் படத்தை கவனமாக ஆராய்ந்து பாருங்கள். கண்ணாடியை உங்களால் முதல் முயற்சியில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். எவ்வளவு முயற்சித்தும் கண்ணாடியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நாங்களே அதற்கான விடையை சொல்லி விடுகிறோம்.
இந்த படத்தின் இடது புறத்தில் மேற்பகுதியில் தான் கண்ணாடி ஒளிந்து உள்ளது. இப்போது தெரிகிறதா கண்ணாடி எங்கே என்று!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Optical Illusion, Trending, Viral