ஆப்டிக்கல் இல்யூஷன் (Optical illusion) எனப்படும், மாயத் தோற்றங்களை உள்ளடக்கிய படம் ஒன்றை முன்வைத்து மனிதர்களின் குணாதிசயங்களை எடை போட முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஆப்டிக்கல் இல்யூஷன் படம் ஒன்றை பார்த்த உடனேயே நம் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ, அதைப் பொறுத்து நம்முடைய குணம் என்ன என்பது தீர்மானிக்கப்படுகிறது. நம்முடைய ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்களை எளிதாகத் தெரிந்து கொள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் முறை உதவுகிறது.
ஆப்டிக்கல் இல்யூஷன்களை வைத்து உங்கள் நட்பைப் பற்றியும், உலகை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். நீங்கள் சுயநலமானவரா, நல்ல தலைவரா, ஆர்வம் மிக்க நபரா அல்லது பிறருக்கு உதவ விரும்புகிறீர்களா? என பல கேள்விகளுக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன்களை அடையாளம் காண்பதன் மூலமாக விடை பெறலாம்.
Read More : இந்த படத்தில் உங்களுக்கு எத்தனை குதிரைகள் தெரிகிறது ?
இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் படத்தில் இரண்டு உருவங்கள் மறைந்துள்ளன. அதில் உங்களது கண்ணுக்கு என்ன தெரிகிறது என்பதை வைத்தே நீங்கள் பாரம்பரியமானவரா அல்லது விசுவாசமான நபரா என்பதை கண்டறிய முடியும்.
ஆப்டிக்கல் இல்யூஷனில் பெரும்பாலானோருக்கு முதலில் இரண்டு குடிசை வீடுகள், பறவைகள், மரங்கள் ஆகியவை தான் கண்ணுக்கு தெரியும். அப்படிப்பட்டவர்கள் நகரத்தின் அவசர கதியிலான பரபரப்பு வாழ்க்கைக்கு பதிலாக அமைதியான எளிய வாழ்க்கை முறையை விரும்புவார்கள். யானையை முதலில் பார்ப்பவர்கள், தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உண்மையான விசுவாசியாகவும், மரியாதையுடனும் இருப்பார்கள். அவர்கள் பிறரது கருத்துக்களை மதித்து கேட்பவர்களாகவும், நட்பு, சிந்தனை மற்றும் பிறர் மீது அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பிறரால் மிகவும் விரும்பப்படக்கூடியவர்களாகவும், மரியாதைக்குரியவர்களாகவும் இருப்பார்கள்.
ItsMeFuzz என்ற இணையதளத்தின் இந்த ஆப்டிக்கல் இல்யூஷனுக்கு ஒரு பிரபல டிக்-டாக்கர் விளக்கம் அளித்து பகிர்ந்த வீடியோ, 4 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. ஆப்டிக்கல் இல்யூஷனுக்கு பின்னால் மறைக்கப்பட்டுள்ள படங்களையும், அதற்கான அர்த்தத்தையும் தெளிவாக அந்த வீடியோ விளக்கியுள்ளது.
நீங்கள் உண்மையில் இரண்டு பூனைகளை முதலில் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் காதல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக அர்த்தம். அதேசமயம் முதலில் பார்த்ததுமே உங்கள் கண்களுக்கு பூனைகள் உடனடியாகத் தெரிந்தால், "உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் மிகவும் வலுவான தொடர்பு" வைத்திருப்பவர் என்று பொருள்.
நீங்கள் முதலில் பார்ப்பது முழு நாயின் தலையை என்றால், நீங்கள் மிகவும் உதவிகரமான நபர் என்று அர்த்தம். நண்பர்கள் தங்களது கவலைகளை சொல்லி தோளில் சாய்ந்து அழக்கூடிய அளவிற்கு உண்மையானவர் என டிக்-டாக் பிரபலம் தெரிவித்துள்ளார். இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Optical Illusion, Trending, Viral