Home /News /trend /

இந்த புகைப்படத்தில் காவலாளியின் தலையை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? 

இந்த புகைப்படத்தில் காவலாளியின் தலையை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? 

வைரல் புகைப்படம்

வைரல் புகைப்படம்

Optical Illusion | ரெடிட் தளத்தில் நிக்சோத்பாலடின் என்பவரல் ஷேர் செய்யப்பட்ட பகிரப்பட்ட இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. "குழப்பமான கண்ணோட்டம்" என்ற தலைப்பில் பகிரப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் ஆப்டிக்கல் இல்யூஷன் தொடர்பாக புதுப்புது சவால்கள் வைரலாகி வருகின்றன. நெட்டிசன்களும் தங்களது மூளையை கசக்கி பிழிந்து விடையை கண்டுபிடித்து வருகின்றனர். இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்ற படங்கள் பொழுதுபோக்கு அம்சமாகவும், சிந்தனைத் திறனை தூண்டும் விதமாகவும் அமைகின்றன.

இந்த இப்படங்களைக் கொண்டு உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை அறிய முடியும் என்றும் கூறுகின்றனர். அதாவது, ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்கு தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேற மாதிரியாகவும் தோன்றும். இதை வைத்து உண்களுடைய குணாதிசயத்தை கண்டுபிடித்துவிடலாம்.

இதுவரை நாம் மறைந்திருக்கும் ரகசியங்களையும், இருக்கு ஆனா இல்லை என்பது போன்ற வித்தியாசமான மாயத்தோற்ற ஓவியங்களையும் உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம். தற்போது அனைவரது கண்களையும் ஏமாற்றக்கூடிய வித்தியாசமான ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.



நீங்கள் இப்போது பார்க்க கூடிய படம், எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆப்டில் இல்யூஷன் போல் தோன்றலாம். கீழே ஒரு மனிதனின் புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது நீல நிற காவலாளி உடையில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் நபரின் தலையில்லாத உடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ரெடிட் தளத்தில் நிக்சோத்பாலடின் என்பவரல் ஷேர் செய்யப்பட்ட பகிரப்பட்ட இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. "குழப்பமான கண்ணோட்டம்" என்ற தலைப்பில் பகிரப்பட்டுள்ளது.

படத்தை பார்த்த மாத்திரத்திலேயே உங்களுடைய கண்ணுக்கு என்ன தெரிகிறது நீல நிற சட்டை, பேண்ட் அணிந்த காவலாளி சேரில் கைகளைக் கட்டிக்கொண்டு உறங்குவது தெரிகிறதா?. உடனே அய்யய்யோ அவரது தலையைக் காணவில்லை என உங்களுக்குள் ஒரு பதற்றம் தொற்றிக்கொள்வதை தடுக்க முடியாது.

Read More : இந்த படத்தில் மறைந்திருக்கும் பூனையை கண்டுப்பிடிக்கவே முடியாதாம்..


ஒருவேளை காவலாளியின் முகத்தை பின்னால் இருக்கும் ஷட்டரை வைத்து எடிட் செய்து மறைத்து நம்மை முட்டாள் ஆக்க முயற்சிக்கிறார்கள் என்று கூட தோன்றலாம். ஆனால் உண்மை என்னவென்றால் நீல நிற உடையணிந்து இருக்கும் காவலாளி இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு, தலையை பின்னால் சாய்த்துவைத்து உறக்கிக் கொண்டிருக்கிறார். இதனை தூரத்தில் இருந்து புகைப்படம் எடுத்துள்ளதால் காவலாளிக்கு தலையில்லாதது போல் தெரிகிறது.

ரெடிட் தளத்தில் உள்ள யூஸர்கள் இந்த ஆப்டிக்கல் இல்யூஷனைப் பார்த்து வியந்து போயுள்ளனர். மேலும் புகைப்படக் கலைஞரின் திறமை மற்றும் அதற்காக அவர் செலவிட்ட நேரத்திற்காக பாராட்டி வருகின்றனர். , “அவர் அனைவரையும் பயப்படுத்திவிட்டார்... அருமையான வேலை” என பாராட்டுக்கள் குவிழ்ந்து வருகிறது.

நீங்கள் இன்னும் காவலாளியின் தலையைப் பார்க்க முடியாவிட்டால், அவரது கழுத்தின் மேல் பகுதி உண்மையில் அவரது கன்னம் மற்றும் வாயின் அடிப்பகுதியாகும். ஓய்வெடுப்பதற்காக அவரது தலையை பின்னோக்கி சாய்ந்து வைத்துள்ளார். அதனால்தான் இந்த புகைப்படம் பார்க்க தலையற்றது போல் உள்ளது. கண்ணுக்கும், மூளைக்கும் ஒரே நேரத்தில் சிறப்பாக வேலை வைக்கும் இந்த ஆப்டிக்கல் இல்யூஷனை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களையும் விடையை கண்டுபிடிக்க ஊக்கப்படுத்துங்கள்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Optical Illusion, Trending, Viral

அடுத்த செய்தி