ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உங்களால் முடியுமா? பூங்காவில் மறைந்திருக்கும் நாயை கண்டுபிடித்தால் நீங்கள்தான் ஜீனியஸ்.!

உங்களால் முடியுமா? பூங்காவில் மறைந்திருக்கும் நாயை கண்டுபிடித்தால் நீங்கள்தான் ஜீனியஸ்.!

ஆப்டிகல் இல்யூசன்

ஆப்டிகல் இல்யூசன்

Optical Illusion : புகைப்படத்தில் உள்ள நாயை உங்கள் உடனே கண்டுப்பிடிக்க முடியாது. அப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுப்பிடித்துவீட்டீர்கள் என்றால் நீங்கள் ஜீனியஸ் தான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு இணையத்தைப் பொழுதுபோக்கு அம்சத்திற்காக மட்டுமில்லாமல் சில அறிவுப்பூர்வ விஷயங்களுக்கும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவற்றில் முக்கியமானது தான் ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிகல் இல்யூசன். ஆம் அறிவுத்திறனைச் சோதிக்கும் வகையில் மூளைக்கும், கண்களுக்கும் சவால் விடும் வகையிலான பல ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் சமீப காலங்களாக வைரலாகிறது.

குறிப்பிட்ட வினாடிகளுக்குள் புகைப்படத்தில் மறைந்திருக்கும் விஷயங்களை நீங்கள் கண்டறிந்துவிட்டால், உங்களின் ஆளுமைத்திறன் மற்றும் எந்த அளவிற்கு மூளையின் செயல்பாடு உள்ளது என்பதை நீங்களே சோதித்துக் கொள்ளலாம். தற்போது நீண்ட காலத்திற்குப் பிறகு, மற்றொரு புதிரான மற்றும் சற்று சவாலான ஆப்டிகல் மாயை இணையத்தில் வைரலாகி வருகிறது. வாருங்கள் நாமும் புதிர் விளையாட்டில் என்ன உள்ளது என இங்கே தெரிந்துக் கொள்வோம்.

IQ திறனைச் சோதிக்கும் ஆப்டிகல் இல்யூசன்:

நமக்கு முன்னால் பூங்கா ஒன்று தெரிகிறது. இலையுதிர் காலம் என்பதால் ஆங்காங்கே இலைகள் கொட்டிக்கிடக்கிறது. அதற்கு நடுவில் தான் நாய் ஒன்று உள்ளது. இதை நீங்கள் பார்த்தவுடன் கண்டுபிடித்துவிட்டீர்கள்? என்றால் நீங்கள் ஆளுமைத்திறன் உடையவர்கள் என அர்த்தம். ஒரு வேளை உங்களுக்கு இதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் உங்களின் ஐக்யூ( IQ) திறனை நீங்கள் இன்னமும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்லையென்றால் இதோ சில டிப்ஸ்கள் உங்களுக்காக இங்கே கொடுக்கிறோம். இதன் உதவியோடு கண்டுபிடியுங்கள்.

Also Read : ஒரு மாணவன், ஒரு ஆசிரியர்... ஒரே ஒரு மாணவனுக்காக இயங்கும் பள்ளி... எங்கு தெரியுமா?

டிப்ஸ் 1 : முதலில் பூங்காவில் உள்ள அனைத்து இடங்களையும் நன்கு உற்றுப்பாருங்கள். மரத்திற்கு அருகில், இலைகளுக்கு நடுவில் என அனைத்து இடங்களிலும் தேடிப்பாருங்கள். இப்போது கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்லையென்றால் இதோ இன்னொரு டிப்ஸ்.

டிப்ஸ் 2 :  பூங்காவில் உள்ள மரத்தின் தண்டுக்கு கீழே நன்றாக பார்க்கவும். நிச்சயம் நீங்கள் நாயைக் கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறோம். இல்லையென்றால் உங்களுக்கான பதிலை நாங்கள் இங்கே கூறுகிறோம்.

பதில் :  மரத்தின் தண்டுக்கு கீழே உள்ள புகைப்படத்தின் மையப்பகுதியில், இலைகளுக்கு நடுவில் ஒரு கோல்டன் ரெட்ரீவர் இன நாய் தரையில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

நிச்சயம் புகைப்படத்தில் உள்ள நாய் மற்றும் இலைகள் ஒன்றாக இருப்பதால், முதல் முறையே நிச்சயம் யாராலும் கவனித்திருக்க முடியாது. உங்களின் ஆளுமைத்திறன் நன்றாக இருந்தால் மட்டுமே உங்களின் பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடியும்.

இதுபோன்று உங்களின் ஆளுமைத்திறனை நீங்களே சோதிக்க வேண்டும் என்று நினைத்தால், இணையத்தில் வைரலாகும் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்களின் மூலம் சோதித்துக் கொள்ளவும். நீங்கள் மட்டுமில்லை உங்களது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து புதிர் விளையாட்டை விளையாடுங்கள்.

First published:

Tags: Game, Optical Illusion, Quiz