சமீப நாட்களாக ஆப்டிக்கல் இல்யூஷன் தொடர்பான செய்திகள் மற்றும் இமேஜ்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. கண்களுக்கும், மூளைக்கும் சவால் விடும் வகையில் இருக்கும் பல ஆப்டிகல் இல்யூஷன்களை நீண்ட நேரம் பார்த்து, ஆராய்ந்து பதிலை அதாவது அதில் மறைந்திருக்கும் மற்றொரு உருவத்தை கண்டுபிடிப்பதால் நெட்டிசன்களுக்கு நல்ல ஒரு பொழுதுபோக்காக இருந்து வருகின்றன.
பொதுவாக மேலோட்டமாக பார்த்தால் ஒரு உருவமாகவும் கண்கள் மற்றும் மூளையை கசக்கி உற்று பார்த்தால் வேறு ஒரு உருவம் அல்லது விஷயம் அதில் மறிந்திருப்பது கண்களுக்கு புலப்படும் இமேஜ்கள் ஆப்டிகல் இல்யூஷன்கள் என குறிப்பிடப்படுகின்றன. அந்த வகையில் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் முதலில் பார்க்கும் விஷயங்கள் அல்லது உருவங்களை வைத்து உங்களது கேரக்டர் எப்படிப்பட்டது என்பதை சொல்லி விட முடியும்.
கீழ்காணும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று பாருங்கள்!
ஒரு நாயின் வால் தெரிகிறதா.? ஆனால் இந்த இமேஜிற்குள் ஒரு நாயின் முகமும் ஒளிந்திருக்கிறது. நன்றாக உற்று பாருங்கள்.. நாயின் முகத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று.. கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் உண்மையில் நீங்கள் செம்ம ஷார்ப் தான், அட போப்பா நாயோட வால் மட்டும் தான் எனக்கு தெரிகிறது என்று சலித்து கொள்ளாதீர்கள். இப்பொது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அதே இமேஜில் நாய் வாலின் பின்பகுதி டார்க் செய்யப்பட்டிருக்கிறது. இப்பொது பாருங்கள் உங்களுக்கு டார்க் செயயப்பட்ட பகுதி ஒரு நாயின் முகம் போல் தெரியும்.
நீங்கள் முதலில் நாயின் வாலை மட்டுமே பார்த்தீர்கள் உங்களால் நாய் முகத்தை கண்டறிய முடியவில்லை என்றால் நீங்கள் எப்போதும் மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் ஒதுங்கியே இருப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமானவரிகளை தவிர பிறரை அவ்வளவு எளிதில் நம்ப மாட்டீர்கள். அதுவே நீங்கள் நாயின் முகத்தை முதலில் பார்த்திருந்தால் நீங்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் மற்றும் சூப்பர் ஃபிரெண்ட்லி வகையை சேர்ந்தவர். மேலும் எப்போதும் எல்லோரையும் உங்களை கவனிக்க வைத்து கொண்டே இருப்பீர்கள் என்று அர்த்தம்.
இந்த வித்தியாசமான ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை கண்ட ஒரு யூஸர் இது எனக்கு மிகவும் சுவாரஸ்யமானது என்று குறிப்பிட்டு உள்ளார். மற்றொரு யூஸர் நீங்கள் ஒரு இமேஜில் மறைந்திருக்கும் 2 விஷயங்களை அடுத்தடுத்தது பார்த்தால் என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பி உள்ளார். பல யூஸர்கள் நிச்சயமாக முதல் பார்வையில் எங்களால் நாயின் முகத்தை பார்க்க முடியவில்லை.
ஏனென்றால் நாய் வாலின் பின்பகுதி நிழல் தெரிந்தாலும் வால் தான் ஹைலைட்டாக தெரிகிறது. அந்த நிழலையும் சேர்த்து டார்க்காக்கி பார்க்கும் போது தான் மறைந்திருக்கும் நாயின் முகம் தெரிகிறது. இது சற்று கடினமான இமேஜ் என்று குறிப்பிட்டு உள்ளனர். நீங்கள் இந்த ஆப்டிக்கல் இமேஜில் எதை முதலில் பார்த்தீர்கள் நாயின் முகமா அல்லது நாயின் வாலா..?
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.