இன்று இணையத்தில் மிகவும் வைரலாக கூடிய விஷயங்களில் ஒன்று தான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். நாம் பார்க்க கூடிய விஷயங்கள், பல நேரங்களில் வேறு சிலவற்றை போன்று தோன்றும் எண்ணத்தை இவை நமக்கு தரும். இது சாதாரணமாக எல்லா வகையான விஷயங்களின் மீது நமக்கு ஏற்பட கூடிய ஒரு மாய தோற்றம் தான். குறிப்பாக மனிதர்கள், உயிரற்ற பொருட்கள், சந்திக்க கூடிய பிரச்சனைகள்.. இப்படி ஏராளமான விஷயங்கள் இதில் அடங்கும்.
அதே போன்று தூரத்தில் இருந்து ஒரு விஷயத்தை பார்க்கும் போது நமது மூளைக்கு அது வேறு போன்று தோன்றும். அதுவே அருகில் வரும் போது வேறொன்று போன்று இருக்க கூடும். இதை தான் ஆப்டிகல் இலுஷன் என்று கூறுவார்கள். நமது மூளையானது ஒன்றுடன் தொடர்புடைய மற்ற விஷயங்களை ஒப்பிட்டு பார்த்து அதற்கேற்ப செயல்படும். எப்படி இந்த அளவிற்கு மனித மூளை வேலை செய்கிறது என்பதை பற்றி, பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் :
ஆப்டிகல் இல்யூஷன் என்கிற ஒளியியல் மாயை வைத்து நமது மூளையின் திறனை அறிந்து கொள்ள முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில் இந்த படத்தில் மறைந்துள்ள சில விஷயங்களை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை பார்ப்போம். இந்த படத்தில் உள்ள பீர் பாட்டில் குவியலில் ஒரு கோப்பை ஒளிந்துள்ளது. இதை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க இயலாது தான் என்றாலும், கூடுதல் நேரத்தை எடுத்து கொண்டு கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம்.
பீர் பாட்டில் குவியல் :
ஸ்டோன்கேட் பப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த படம், பீர் பாட்டில் மத்தியில் கோப்பையைக் மறைத்து வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, படத்தில் மறைந்திருக்கும் யானையைக் கண்டுபிடிக்க பார்வையாளர்களுக்கு சவால்விடும் ஆப்டிகல் மாயை வைரலானது. இது போன்ற தந்திரமான புதிரை ஒரு சதவீத மக்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். மனதை நெகிழ வைக்கும் இந்த படத்தை டிக்டாக் யூசரான ஹெக்டிக் நிக் என்பவர் பகிர்ந்தார்.
Also Read :
ஜீன்ஸ் பேண்ட்டில் ஏன் இந்த சிறிய பட்டன்கள்? பலருக்கும் தெரியாத காரணம்
இந்த படத்தில் மறைந்துள்ள கோப்பையை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க இயலாது என்பது தான் இதில் சவாலே! காரணம், இந்த படத்தில் எண்ணற்ற பீர் பாட்டில்கள் குவிந்து உள்ளது. எனவே இது அதிக அளவிலான குழப்பத்தை தரும். நீங்கள் ஒரு 30 நிமிடம் எடுத்து கொண்டு இதில் கோப்பையை தேடினாலும் கண்டுபிடிப்பது கடினம் தான். எனவே இதற்கான விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம்.
இந்த படத்தின் வலது புறத்தின் நடுவில் தான் நீங்கள் தேடி கொண்டு இருந்த கோப்பை ஒளிந்துள்ளது. இப்போது தெரிகிறது இது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது என்று! இதே போன்ற பல ஆப்டிகல் மாயை இன்றளவும் இணையத்தில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. ஒவ்வொன்றின் கடின தன்மையை பொறுத்து தான் இவை வைரலாகி விடுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.