முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இந்த ஓவியத்தில் எத்தனை முகங்கள் மறைந்திருக்கு..? சரியா கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி தான்..!

இந்த ஓவியத்தில் எத்தனை முகங்கள் மறைந்திருக்கு..? சரியா கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி தான்..!

ஆப்டிக்கல் படம்

ஆப்டிக்கல் படம்

Optical illusion : தற்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஜெனரலின் குடும்பம் பற்றிய ஓவியம், எல்லா காலங்களிலும் பிரபலமான ஆப்டிக்கல் இல்யூஷனாக இருந்து வந்துள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்கட்டு வித்தை போன்றது. ஆனால் அதனை நன்றாக உற்றுப்பார்த்து ஆராய்ந்தால் மட்டுமே அதனுள் மறைந்திருக்கும் விஷயங்களை கண்களால் காண முடியும். நீங்கள் ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியத்தை மேலோட்டமாக பார்த்தால் ஒரு உருவமும் கூர்ந்து கவனித்தால் அதிலேயே வேறு ஒன்றின் உருவமும் ஒன்றாக இணைந்திருப்பதை காண முடியும்.

‘நீங்கள் முதலில் பார்ப்பது எந்த விலங்கு?’, ‘இந்த படத்தில் எத்தனை குதிரைகள் உள்ளன?’ என சோசியல் மீடியாக்களில் மாய தோற்றம் கொண்ட ஓவியங்கள் அவ்வப்போது வைரலாவது உண்டு. சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன்களை நீங்கள் பார்க்கும் விதத்தை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர்?, உங்கள் குண நலன்கள் என்ன? என கணிக்க கூடிய வகையில் இருக்கும். சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும்.

ஒரு படத்தை முதலில் நீங்கள் கவனிக்கும் போது அலட்டிக் கொள்ள ஒன்றும் பெரிதாக இல்லையே என தோன்றலாம். அது தான் ஆப்டிக்கல் இல்யூஷன்களின் வெற்றியாகும். முதல் பார்வையில் உங்கள் கண்ணுக்குத் தெரியாத, நுட்பமான கூறுகள், அந்த ஓவியத்தை பல கோணங்களில் அலசி ஆராயும் போது, அதனுள் பல வடிவங்கள் மறைந்திருப்பதை நீங்கள் கண்டறிய முடியும்.

தற்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஜெனரலின் குடும்பம் பற்றிய ஓவியம், எல்லா காலங்களிலும் பிரபலமான ஆப்டிக்கல் இல்யூஷனாக இருந்து வந்துள்ளது. மெக்சிகன் கலைஞரான ஆக்டேவியோ ஒகாம்போவால் உருவாக்கப்பட்ட இந்த பிரமிக்க வைக்கும் ஓவியம் தன்னுள் மொத்தம் 9 முகங்களை மறைத்து வைத்துள்ளது.

நீங்கள் சிலவற்றை மிக எளிதாகவும், மற்றவற்றை உன்னிப்பாகப் பார்க்கும்போதும் கண்டறியலாம். சில முகங்களை உங்களால் அடையாளம் காணமுடியாமல் அல்லது கண்ணால் பார்க்க முடியாமல் கூட போகலாம். கீழே உள்ள படத்தைப் பார்த்து, நீங்கள் எத்தனை முகங்களைக் கண்டுபிடித்தீர்கள் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

புதிர் போடும் படங்கள்

ஓவியத்தில் உள்ள மிகப்பெரிய படத்தை நீங்கள் கண்டுபிடித்திருக்கலாம். அது ஜெனரலின் முகத்தை குறிக்கிறது. அதன் பின்னர் அவருடைய கண் பகுதியை நன்றாக உற்றுப்பார்த்தால் அதில் தொப்பி அணிந்த ஒரு முதியவர் ஊன்றுகோலுடன் நிற்பது தெரியும். அவரது உருவம் ஜெனரலின் மூக்கு, மீசை மற்றும் கீழ் முகத்திற்கான மாய தோற்றமாக மாறியுள்ளது. ஜெனரலின் காதுப்பகுதியில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் நிற்பது போன்ற மாயத்தோற்றத்தை நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம்.

ஜெனரல் முகத்தின் வலதுபுறத்தில் உள்ள மதில் சுவரில் ஒரு பெண்ணின் முகம் உள்ளது, அது ஜெனரலின் மனைவியாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. மதில் சுவர் வளைவின் மறுபுறம் புற்களுக்கு இடையில் ஒரு முகம், அலங்கார தூணுக்கு இடையில் 3 முகங்களை நீங்கள் காணலாம்.

கண்டுபிடிக்கப்பட்ட உருவங்களின் எண்ணிக்கையின் படி நீங்கள் எப்படிப்பட்டவர் என பார்க்கலாம்...

* தி மைண்ட்ஸ் ஜனரல் கணிப்பு படி, இந்த ஆப்டிக்கல் இல்யூஷனில் நீங்கள் 6 முகங்களைக் கண்டறிந்தால், நீங்கள் நல்ல, ஆனால் சராசரியான கண்காணிப்புத் திறன்களைக் கொண்டவர்கள்.

* நீங்கள் 7 முகங்களைக் கண்டறிந்தால், நீங்கள் சராசரியை விட அதிகமான கணிப்பு திறனைக் கொண்டவர்.

* நீங்கள் 8 முகங்களைக் கண்டால், நீங்கள் கவனிக்கும் நபர் என்பதையும், "உங்களைப் பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டும்" என்பதையும் இது குறிக்கிறது.

கடைசியாக, பதில்களைப் பார்க்காமலேயே 9 முகங்களையும் உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால், நீங்கள் சிறந்த கண்காணிப்புத் திறனைப் பெற்றிருக்கிறீர்கள், மேலும் ஆக்கப்பூர்வமாகவும் உள்ளுணர்வுடனும் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

First published:

Tags: Optical Illusion, Tamil News, Trending, Trending News