Home /News /trend /

நீங்கள் பார்க்கும் முதல் உருவம் உங்கள் காதல் வாழ்க்கையை குறிக்கும்..

நீங்கள் பார்க்கும் முதல் உருவம் உங்கள் காதல் வாழ்க்கையை குறிக்கும்..

காட்சி படம்

காட்சி படம்

உங்களுக்கு முதன்முதலில் தோன்ற கூடிய உருவத்தின் மூலம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அறிய முடியும்.

நமது மூளையின் செயல்பாடு மிகவும் விசித்திரமானது. நாம் ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கும்போதே வேறு சிலவற்றை பற்றி அந்த நேரத்தில் நினைத்து கொண்டு அதை செய்ய வேண்டும் என்கிற ஆவலை தூண்டும் அளவிற்கு நமது மூளையின் திறன் உள்ளது. பல நேரங்களில் ஒரே சமயத்தில் இரண்டு வேலைகளை செய்யும் அளவிற்கு நாம் திறமை வாய்ந்தவராக மாறி விடுகிறோம். இவை அனைத்திற்கும் நமது மூளை தான் முக்கிய காரணமாக உள்ளது. எப்படி இந்த அளவிற்கு மனித மூளை வேலை செய்கிறது என்பதை பற்றி, பல ஆய்வுகள் இன்றளவும் நடத்தப்பட்டு வருகிறது.

அதே போன்று நமது மூளையின் செயல்பாடுகளை வைத்து தான் செயற்கை நுண்ணறிவு போன்ற அதி நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம். எனினும் அவை மனித மூளை அளவிற்கு ஈடாகாது. நமது மூளை எந்த அளவிற்கு திறனாக வேலை செய்கிறதோ அதை பொறுத்து தான் நாம் எந்த அளவிற்கு புத்திசாலியாக உள்ளோம் என்பதை கணக்கிட முடியும். இதை அறிய பல வழிகள் உள்ளன. மூளையின் செயல்பாட்டை சில படங்களை வைத்து கண்டுபிடிப்பது உண்டு. அந்த வகையில் இந்த பதிவில் காட்டப்படும் படத்தில் உங்களுக்கு முதன்முதலில் தோன்ற கூடிய உருவத்தின் மூலம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அறிய முடியும்.

ஆப்டிகல் இலுஷன் :

ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இலுஷனை உண்மையில் இல்லாத ஒன்றைக் காண நம் கண்களையும் மூளையையும் ஏமாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்ட முறையாகும். ஆப்டிகல் இலுஷன் பல நூற்றாண்டுகள் பழமையான முறை என்றாலும், அவை இப்போது நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ஒன்றாக இருந்து வருகிறது. அதன்படி, இந்த பதிவில் காட்டப்படும் படத்தை ஒரு முறை பாருங்கள். இதில் உங்களுக்கு முதலில் தோன்றும் உருவத்தை வைத்து உங்களை பற்றி நீங்களே புரிந்து கொள்ள முடியும்.

பெண்ணுக்கு தோன்றும் ஆண் :

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து, இந்த படத்தை பார்க்கும் போது நீங்கள் முதலில் ஆணின் உருவத்தை கவனித்திருந்தால், நீங்கள் ஒரு காதல் துணையைத் தேடுகிறீர்கள் அல்லது பாலியல் ஆசை அதிகமாக கொண்டுள்ளீர்கள் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், நீங்கள் ஏற்கனவே ஒருவருடன் டேட்டிங் உள்ளீர்கள் என்றால், உங்கள் துணையுடன் நீங்கள் ஆழமான தொடர்பை உணருப்பவராக இருப்பீர்கள். மேலும் உங்கள் இருவருக்குள்ளும் உள்ள உறவு சிறப்பாக உள்ளது என்பதை இது குறிக்கிறது.



also read : இந்த படத்தில் நீங்கள் காணும் முதல் விஷயம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை குறிக்கும்!

ஆணுக்கு தோன்றும் பெண் :

நீங்கள் ஒரு ஆணாக இருந்து, முதலில் ஒரு பெண்ணின் உருவத்தை இந்த படத்தில் பார்த்தால், நீங்கள் ஒரு துணையை நேசிக்க விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். மேலும் உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக அமைய பல விஷயங்களை செய்ய முயற்சி செய்வீர்கள்.

ஆணுக்கு தோன்றும் ஆண் :

நீங்கள் ஒரு ஆணாக இருந்து, முதலில் உங்களுக்கு ஆணின் உருவம் முதலில் தோன்றினால், மற்ற ஆண்களுடனான உங்கள் உறவை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை குறிக்கிறது. மேலும் உங்கள் ஆண் நண்பர்களுடன் அன்பாக பழகும் குணம் கொண்டவர் என்பதையும் இது உணர்த்துகிறது.

பெண்ணை கவனிக்கும் பெண் :

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து, இந்த படத்தை பார்க்கும்போது உங்களுக்கு முதன்முதலில் ஒரு பெண்ணின் உருவத்தை பார்த்தால் உங்கள் மீது நீங்கள் அதிக நம்பிக்கை கொண்டவராக இருப்பதை காட்டுகிறது. மேலும் மற்றவர்களை ஈர்க்கும் நேர்மறை ஆற்றலை நீங்கள் எப்போதும் வெளிப்படுத்துவீர்கள் என்பதையும் உணர்த்துகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி