Home /News /trend /

நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு எது..? உங்கள் ஆளுமை பண்பு குறித்து நாங்கள் சொல்கிறோம்! 

நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு எது..? உங்கள் ஆளுமை பண்பு குறித்து நாங்கள் சொல்கிறோம்! 

Optical illusion

Optical illusion

Optical illusion | இந்த புகைப்படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது எந்த விலங்கை என்பதை வைத்து நீங்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஆளுமை பண்புகள் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

    ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும், ஒளியியல் மாயை வெறும் புதிர் விளையாட்டு மட்டும் கிடையாது. அதனுள் மறைந்துள்ள மாய தோற்றங்களில் நீங்கள் முதலில் பார்க்கும் உருவங்களை வைத்து மனிதர்களின் குணாதிசயங்களை எடை போட முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஆப்டிக்கல் இல்யூஷன் படம் ஒன்றை பார்த்த உடனேயே நம் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ, அதைப் பொறுத்து நம்முடைய குணம் என்ன என்பது தீர்மானிக்கப்படுகிறது. நம்முடைய ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்களை எளிதாகத் தெரிந்து கொள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் முறை உதவுகிறது.

    ஆப்டிக்கல் இல்யூஷன்களை வைத்து உங்கள் நட்பைப் பற்றியும், உலகை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். நீங்கள் சுயநலமானவரா, நல்ல தலைவரா, ஆர்வம் மிக்க நபரா அல்லது பிறருக்கு உதவ விரும்புகிறீர்களா? என பல கேள்விகளுக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன்களை அடையாளம் காண்பதன் மூலமாக விடை பெறலாம்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தை வைத்து உங்களிடம் ஆதிக்கம் செலுத்தக்கூடியவராக காட்டும் ஆளுமை பண்புகளை அறிய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இடது மூளையை பயன்படுத்துபவர்கள் ஆதிக்கம் கொண்டவர்கள், பகுப்பாய்வு சிக்கல்களைத் தீர்ப்பவர்கள் மற்றும் தான் சொல்லும் விஷயங்கள் மட்டுமே சரி என வாதிட்டு நிரூபிக்க நினைப்பவர்கள், அதே நேரத்தில் வலது மூளையை அதிகம் பயன்படுத்துபவர்கள் ஆக்கப்பூர்வமான மற்றும் உள்ளுணர்வு கொண்ட நபர்கள். இதனைக் கொண்டு தி மைண்ட்ஸ் ஜர்னலில் உள்ள நிபுணர்கள் எந்த ஒரு நபரை உளவியல் ரீதியாக பகுப்பாய்வு செய்கின்றனர்.

    தற்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்யூஷனை நன்றாக உற்று நோக்குங்கள். அதில் நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு எது என்பதை வைத்து உங்களுடைய ஆளுமை பண்புகள் கணிக்கப்பட உள்ளன.



    வரிக்குதிரை அல்லது நிறைய வரிக்குதிரைகள்: 

    இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தில் நீங்கள் முதலில் பார்த்தது வரிக்குதிரையை என்றால், நீங்கள் கவர்ச்சியான, செல்வாக்கு மிக்க நபர், நகைச்சுவை உணர்வு கொண்டவர் மற்றும் சோர்ந்து போய் உட்கார உங்களுக்கு பிடிக்காது. உங்களின் அசாத்தியமான தகவல் தொடர்பு திறன் மற்றும் உங்கள் வெளிப்புற ஆளுமை ஆகியவற்றால் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் நீங்கள் தனிமையில் இருக்கும் போது பாதுகாப்பற்று இருப்பது போல் உணருவீர்கள்.



    சிங்கம்: 

    பெருமை மிக்க நபர், உங்கள் ஈகோ குறித்து நன்றாக அறிந்துவைத்துள்ளீர்கள். உங்கள் வலுவான விருப்பமும் உறுதியும் உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. நீங்கள் வித்தியாசமானவராக இருந்தாலும் அதற்காக என்றுமே கவலைப்பட்டது கிடையாது.



     

    சிங்கம் காட்டிற்கே ராஜாவாக அடையாளப்படுத்தப்படுகிறது, நீங்கள் முதலில் அதை தான் பார்த்தீர்கள் என்றால் நீங்கள் ஆதிக்கம் செலுத்த பயப்படாதவர் என்று அர்த்தம்.

    சிங்கம் ஒரு வலுவான, தனிமையான தலைவரைக் குறிக்கிறது, முதலில் அதைப் பார்த்தவர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்கள் மற்றும் சக்கரத்தை எடுக்க பயப்பட மாட்டார்கள். இருப்பினும், உங்கள் திறமையை நிரூபிக்கும் முயற்சியில், நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு திட்டத்திலும் ஒரு குழுவை நிர்வகிக்கும் போது சில விஷயங்களை பார்க்க தவறிவிடுவீர்கள்.

    Also Read : இந்த 5 தீவு நாடுகளையும் விசா இல்லாமல் இந்திய பாஸ்போர்ட் மூலம் சுற்றி பார்க்கலாம்!

    சிங்கம் மற்றும் வரிக்குதிரைகள்:

    இந்த ஆளுமை சோதனையில் முதல் பார்வையிலேயே சிங்கம் மற்றும் வரிக்குதிரைகளை கவனித்தவர்கள் சிறந்த தலைவர்களாக இருப்பார்கள். ஆதிக்கம் மற்றும் பணிவு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை எவ்வாறு உருவாக்குவது என்பதையும், மற்றவர்களுடன் சுய-உணர்தல் மற்றும் உறவுகளை பிணைப்பது பற்றியும் அறிந்திருப்பார்கள். இந்த ஆப்டிக்கல் இல்யூஷனில் வெறும் 5 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே சிங்கம் மற்றும் வரிக்குதிரைகள் ஆகியவற்றை முதல் பார்வையிலேயே பார்த்துள்ளனர்.



    வரிக்குதிரையின் மீது பறவை அமர்ந்திருப்பது:

    சிங்கத்தின் வலது கண்ணுக்குக் கீழே உள்ள வரிக்குதிரையின் மீது பறவை அமர்ந்திருப்பதை விரிவாகக் கவனித்த நபர்கள் எல்லா விஷயத்திலும் ஒழுக்கத்தை கடைபிடிக்க விரும்புவார்கள். செய்யும் காரியத்தில் ஒழுக்கம் இல்லாவிட்டால் நீங்கள் செய்யும் எதுவும் பயனளிக்காது என்று நம்பும் நபர்களாக இருப்பார்கள் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Optical Illusion, Trending

    அடுத்த செய்தி