Home /News /trend /

நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு எது? உங்கள் பர்சனாலிட்டியை சொல்லும் புகைப்படம்..

நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு எது? உங்கள் பர்சனாலிட்டியை சொல்லும் புகைப்படம்..

ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆப்டிக்கல் இல்யூஷன்

Optical Illusion : நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை இந்த படத்தை வைத்தே சொல்லிவிடலாம்.

நாம் பார்க்க கூடிய விஷயங்கள், பல நேரங்களில் வேறு சிலவற்றை போன்று தோன்றலாம். மனிதர்கள், பொருட்கள், சந்திக்க கூடிய பிரச்சனைகள். இப்படி ஏராளமான விஷயங்கள் இதில் அடங்கும். தூரத்தில் இருந்து பார்க்கும் போது நமது மூளைக்கு அது வேறு போன்று தோன்றும். அதுவே அருகில் இருக்கும் போது வேறொன்று போன்று இருக்க கூடும்.

பொதுவாக இதை ஆப்டிகல் இலுஷன் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். நமது மூளையானது ஒரே நேரத்தில் பல வித விஷயங்களை நினைத்து கொண்டே இருக்கும். அதே போன்று முன் எப்போதோ பார்த்த ஒன்று நமது ஆழ் மனதில் ஓரமாக இருக்க கூடும்.

அதே போன்ற ஒன்று நடக்கும் போது அதனுடன் ஒப்பிட்டு பார்த்து நமது மூளை இது தான் அது என்று சைகை காட்டும். எப்படி இந்த அளவிற்கு மனித மூளை வேலை செய்கிறது என்பதை பற்றி, பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பேற்பட்ட மனித மூளையின் செயல்பாடுகளை வைத்து தான் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர்.மேலும் இந்த வகை ஆப்டிகல் இலுஷன் முறைகள் பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த பதிவில் காட்டப்படும் படத்தில் உங்களுக்கு முதன்முதலில் தோன்ற கூடிய காட்சி உங்களின் ஆளுமை திறனை வெளிப்படுத்தும். இது குறித்து இனி விரிவாக தெரிந்து கொள்வோம்.

ஆப்டிகல் இலுஷன் :

ஆப்டிகல் இலுஷன் என்கிற ஒளியியல் மாயை வைத்து பலவற்றை அறிந்து கொள்ள முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதை வைத்து உங்களின் ஆளுமைப் பண்பை அறிந்து கொள்ளவும் முடியும். இந்த கறுப்புத் தாளில் வரையப்பட்ட ஓவியம், உற்றுப் பார்த்தால் இரண்டு விலங்குகள் இருப்பது போன்று தெரியும். இது மிகவும் வைரலான ஒரு ஆப்டிகல் இலுஷன் படமாகும். நீங்கள் இதில் முதலில் பார்க்கும் விலங்கு உங்கள் ஆளுமை பற்றி நிறைய சொல்கிறது.



also read : இந்த படத்தில் என்ன தெரிகிறது? நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நொடியில் கண்டுபிடித்துவிடலாம்...

சிலர் இந்த படத்தில் ஒரு முயல் படத்தை பார்க்க கூடும். அதே போன்று ​​ஒரு வாத்து உருவத்தையும் பார்க்க முடியும். சில சமயங்களில், இந்த இரண்டு விலங்குகளையும் பார்க்க முடியும். ஆராய்ச்சியின் படி, வாத்து மற்றும் முயலின் உருவத்தை மாற்றி மாற்றி பார்க்கும் போது, அவர்களின் மூளை வேகமாக வேலை செய்கிறது என்று அர்த்தமாகும். மேலும் யாராவது இதை மிக விரைவான வேகத்தில் செய்ய முடிந்தால், அவர்கள் அணுகுமுறையில் ஆக்கப்பூர்வமானவர்கள் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.

அதன்படி, இரண்டு விலங்குகளையும் பார்க்கக்கூடியவர்கள் சிறந்த படைப்பு திறன்களைக் கொண்டுள்ளனர் என்று அர்த்தமாகும். மேலும் பலரால் வாத்து உருவத்தை எளிதாக பார்க்க முடியும். ஆனால் முயலை பார்ப்பது கடினமான ஒன்றாக இருக்கும். இந்த முயல், வாத்து ஆப்டிகல் இலுஷன் படம் Fliegende Blätter என்கிற ஒரு ஜெர்மன் பத்திரிகையில் 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. வெளியிட்ட சிறிது காலத்திலேயே இந்த ஆப்டிகல் இலுஷன் படம் பிரபலமானது. தற்போது இது பல உளவியலாளர்களால் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Optical Illusion

அடுத்த செய்தி