ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்ற படங்கள் நாளுக்கு, நாள் பிரபலம் அடைந்து கொண்டே வருகிறது. ஏனென்றால், மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சிந்தனைத் திறனுக்கும் இது விருந்து அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் உழைத்து உடலும், மனமும் சோர்ந்து போய் இருக்கும் சமயங்களில் மனதுக்கு புத்துணர்ச்சி தருவதாக இந்த புதிர் விளையாட்டு மாறி வருகிறது.
பல தோற்றங்களையும், கோணங்களையும் கொண்டுள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் உருவங்களை அல்லது புதிர்களை நீங்கள் கண்டுபிடிக்கும் பொழுது மனதுக்கு சாதனை உணர்வு ஏற்படுகிறது. குறிப்பாக, குறிப்பிட்ட கால வரையறைக்கு உள்ளாக இதை நீங்கள் செய்து முடிக்கும்போது நமது மூளை செயல்திறன் எவ்வளவு வேகமாக இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
அபடியொரு புதிர் தான் இன்றைய படத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்தப் புதிருக்கு 32 நொடிகளில் நீங்கள் விடையை கண்டுபிடித்து விட வேண்டும் என்று சவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. படத்தில் நரி ஒன்று தனது இரையை பிடிப்பதற்காக மரத்தில் ஏறுவதைப் போன்றும், மரக் கிளைகளில் சில பறவைகள் அமர்ந்து இருப்பதைப் போலவும் காட்சி அமைந்துள்ளது. ஆனால், இதே படத்தில் வேறு பல விலங்குகளின் தோற்றங்களும் மறைந்துள்ளன. அதைத் தான் நாம் இப்போது கண்டுபிடிக்க வேண்டும்.
மொத்தம் எத்தனை விலங்குகள்
இந்தப் படத்தில் எங்கெங்கு விலங்குகள் இருக்கின்றன என்பதை கண்டுபிடிக்க நரிக்கு நாம் உதவி செய்ய வேண்டும். அதிலும் நீங்கள் குழப்பம் அடையாமல் இருக்க, மொத்த விலங்குகளின் எண்ணிக்கை 16 என்பதை இப்போதே குறிப்பிட்டு சொல்லி விடுகிறோம்.
ஆனால், ஒரு விலங்குக்கு 2 நொடி என்ற அடிப்படையில் 16 விலங்களையும் நீங்கள் 32 நொடிகளில் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் உங்கள் மூளையின் செயல்திறன் 129-க்கு மேல் என்று அர்த்தம் ஆகும்.
இது 1872-ல் வந்த படம்
செய்தியில் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது பெயிண்டிங் செய்யப்பட்ட படம் ஆகும். இது கடந்த 1872ஆம் ஆண்டில் அமெரிக்க ஓவியர்களால் வரையப்பட்டது ஆகும். அதாவது, படம் வந்து 150 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் புதிருக்கு விடை காணும் சவால் அவ்வபோது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
Also Read : பாலியல் தொழிலில் அனுபவம்... Linkedin சுயவிவரத்தில் பெண் பதிவிட்ட தகவலால் சூடான விவாதம்
குறிப்பிட்ட கால வரையறைக்கு உள்ளாக விலங்குகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்களின் வசதி கருதி சில குறிப்புகளை இங்கே தருகிறோம். முதலில் நரியின் கண் பார்வை எங்கு செல்கிறது என்று பாருங்கள். அங்கு குதிரை, ஆடு மற்றும் பறவைகள் ஆகியன இருக்கின்றன. அதேபோல படத்தில் கிடா, கரடி ஆகியவையும் இருக்கின்றன. மரத்தின் 3-ஆவது கிளையில் 3 மனித உருவங்கள் தென்படுகின்றன. இதேபோல, படத்தின் வலது பக்கத்திலும் விலங்குகள் இருக்கின்றன.
வனத்தின் நிலப் பரப்பிலும் விலங்குகளின் உருவங்கள் தென்படுகின்றன. இன்னமும் கூட விடையை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்காக படத்தில் எங்கெங்கு உயிரினங்கள் இருக்கின்றன என்பது வட்டமிட்டுக் காட்டபட்டுள்ளது கீழே பாருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Optical Illusion