Home /News /trend /

15 வினாடிகள் தான் டைம்... இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை கண்டுபிடிக்க முடியுமா?

15 வினாடிகள் தான் டைம்... இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை கண்டுபிடிக்க முடியுமா?

ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆப்டிக்கல் இல்யூஷன்

Optical Illusion | ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் உள்ள புதிர்களை கண்டறிய மனித மூளை எந்த அளவுக்கு துரிதமாக செயல்படுகிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர். எந்தவொரு விஷயத்தையும் ஆழமாக உள்வாங்கும் திறனை ஊக்குவிப்பதாகவும் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் அமைகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நம்மை சுற்றியுள்ள இயற்கையை நாம் எந்த அளவுக்கு ரசிக்கிறோம், எந்த அளவுக்கு கூர்ந்து கவனிக்கிறோம் என்பதை சோதித்து பார்க்கும் வகையிலும் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் வர தொடங்கியுள்ளன. பொதுவாக நம் மூளையின் செயல் திறனை எடை போடும் வகையில் புதிர்களை கொண்டதாக ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் அமைந்திருக்கும்.

இந்தச் செய்தியில் உள்ள படத்திலும் நமது புத்திகூர்மையை சோதனை செய்யும் புதிர் அடங்கியுள்ளது. ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் உள்ள புதிர்களை கண்டறிய மனித மூளை எந்த அளவுக்கு துரிதமாக செயல்படுகிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர். எந்தவொரு விஷயத்தையும் ஆழமாக உள்வாங்கும் திறனை ஊக்குவிப்பதாகவும் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் அமைகின்றன.

நீங்களும் உங்கள் மூளையின் செயல் திறன் மற்றும் புத்திகூர்மையை பரிசோதனை செய்து பார்க்க தயாரா? அப்படி என்றால் இந்தப் படத்தில் மறைவாக இருக்கும் சிங்கம் எங்கு உள்ளது என்பதை 5 நொடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.



படத்தை உன்னிப்பாக கவனிக்கவும்:

ஆப்ரிக்க காட்டுப் பகுதியில் சூரிய உதயம் கொண்ட ஒரு அழகிய காலைப் பொழுது இந்தப் படத்தில் தென்படுகிறது. உலக அளவில் பிரபலம் கொண்ட புகைப்படதாரர் மார்க் டிரைடேல், தான்சானியாவுக்கு பயணம் செய்யும் வழியில் இந்த புகைப்படத்தை எடுத்திருக்கிறார்.

Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடித்தால் நீங்கள் தான் ரியல் ஜீனியஸ்!

இந்தப் படத்தில் ஓர் ஆண் சிங்கம் இரை தேடி காத்துக் கொண்டிருக்கிறது. ஏதேனும் விலங்குகள் சிக்கினால் சட்டென்று வேட்டையாடும் வகையில் தயார் நிலையில் உள்ளது. இந்த சிங்கத்தை நீங்கள் 5 நொடிகளில் கண்டறிய வேண்டும். பொதுவாக வேட்டையாடும் மிருகங்கள் வெட்ட வெளியில் காத்துக் கொண்டிருக்காது.

ஏதேனும் மறைவான பகுதியில் ஒளிந்து கொண்டு தனக்கான இரை எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கும். சரி நீங்கள் சிங்கத்தை கண்டுபிடித்துவிட்டீர்களா, இல்லையா? கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கான ஹிண்ட் இதோ.

Also Read : ”இது ஆப்பிளா.? இல்லை கேக்கா.? - வீடியோ முடிவதற்குள் கண்டுபிடியுங்கள்.!

உங்களுடைய கண்ணோட்டத்தில் இல்லாமல் ஒரு சிங்கத்தினுடைய கண்ணோட்டத்தில் இருந்து இந்த புகைப்படத்தை ஆழமாகப் பார்க்கவும். எந்த இடத்தில் மறைந்து இருந்தால் அவ்வழியாக வரும் இரைகளை பாய்ந்து வேட்டையாட முடியும் என்று சிந்திக்கவும். இனியும் விடை காண முடியாதவர்களுக்காக விடை இதோ.



படத்தில் உள்ள பெரும் குன்று ஒன்றில் சிங்கம் தன் கம்பீரத் தோரணையுடன் காத்துக் கொண்டிருக்கிறது. அதனுடன் சில பெண் சிங்கங்களும் இருக்கின்றன. குன்றின் மீது நின்று கொண்டிருந்தாலும் இரையை கண்டு விட்டால் சட்டென்று தாவி குதித்து செல்லும் வகையில் தான் சிங்கம் காத்துக் கொண்டிருக்கிறது. இப்போது நீங்கள் விடையை தெரிந்து கொண்டால் இதே படத்தை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி புதிர் கேள்வி கேட்கலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Lion, Optical Illusion, Trending

அடுத்த செய்தி