ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நல்லா பாருங்க.. மறைந்திருக்கும் பனிமனிதனை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? 

நல்லா பாருங்க.. மறைந்திருக்கும் பனிமனிதனை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? 

ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆப்டிக்கல் இல்யூஷன்

Optical illusion | பெரும்பாலான ஆப்டிக்கல் இல்யூஷன்களில் மறைந்திருக்கக்கூடிய புதிரை வெறும் ஒரு சதவீதத்தினர் மட்டுமே கண்டுபிடித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதே, அது எவ்வளவு கடினமானது என்பதை உணர்த்துகிறது. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தினமும் புதிது, புதிதாக ஆப்டிக்கல் இல்யூஷன்களை அறிமுகப்படுத்தினாலும் அதன் மீதான தேடலும், புதிரைத் தீர்ப்பதற்கான ஆவலும் நெட்டிசன்களிடம் துளியும் குறைவது இல்லை. இதற்கு காரணம் காலம் காலமாக நாம் விளையாடி வந்த புதிர் விளையாட்டுக்களை விட கூடுதல் சுவாரஸ்யமும், கண்ணுக்கும் மூளைக்கும் தீவிரமாக வேலை கொடுக்கக்கூடியதாக இருப்பதுமே ஆகும். பெரும்பாலான ஆப்டிக்கல் இல்யூஷன்களில் மறைந்திருக்கக்கூடிய புதிரை வெறும் ஒரு சதவீதத்தினர் மட்டுமே கண்டுபிடித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதே, அது எவ்வளவு கடினமானது என்பதை உணர்த்துகிறது.

  ஆப்டிக்கல் இல்யூஷன்களைப் பொறுத்தவரை கொடுக்கப்பட்டுள்ள ஓவியம் அல்லது புகைப்படத்திற்குள் நன்றாக மறைந்துள்ள ‘கண்டுபிடி, கண்டுபிடி’ டைப்பிற்கு எப்போதுமே நல்ல மவுசு உண்டு. என்ன தான் மனோதத்துவ நிபுணர்கள் ஆப்டிக்கல் இல்யூஷனில் உள்ள புதிர்களை வைத்து அந்த நபர் எப்படிப்பட்டவர் என்பதை கணிக்கலாம், அவருடைய மூளையின் செயல்திறன் மற்றும் கண்பார்வை திறனை மதிப்பிடலாம் என்றாலும், விடையைக் கண்டுபிடிப்பதில் உள்ள அலாதி குஷிக்காகவே இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்புகின்றனர்.

  தற்போது உங்களுடைய ஆர்வத்தை தூண்டக்கூடிய மிகவும் சவாலான ஒரு புதிரைத் தான் இந்த முறை கொண்டுவந்துள்ளோம். மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்யூஷனை நன்றாக உற்றுப்பார்த்துவிட்டு, களத்தில் இறங்கலாமா?, வேண்டாமா? என முடிவு செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் கடைசியில் நாங்கள் காட்ட உள்ள விடையைப் பார்த்து நீங்கள் மிரண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

  மேலே கிறிஸ்துமஸ் டெக்கரேஷன் சம்பந்தப்பட்ட படம் ஒன்று காண்பிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பனி மனிதன் ஒருவர் மறைந்துள்ளார். அதனை சரியாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான இன்றைய சவாலாகும். படம் முழுவதும் உங்கள் கண்களுக்கு வெள்ளை, பச்சை, மஞ்சள், நீலம் என விதவிதமான நட்சத்திர வடிவ டிசைன்கள் தெரிகிறதா?. இதில் உள்ள ஒரு டிசைனுக்குள் தான் பனிமனிதன் மறைந்துள்ளதாக குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய அளவிலான வெள்ளை நிற டிசைன்களை நன்றாக உற்றுப்பாருங்கள்... ஒருவேளை உங்கள் கண்களுக்கு ஸ்னோமேன் உருவம் தென்படவும் வாய்ப்புள்ளது.

  நீங்கள் அதை கண்டுபிடித்தீர்களா?... ஆம், இது மிகவும் குழப்பமான புதிராகத் தான் இருக்கும். சிலர் படத்தில் பனிமனிதனின் உருவம் எங்குமோ இல்லை வேண்டுமென்றே நம்மை அலைய வைக்கிறார்கள் என்று கூட நினைத்திருக்கக்கூடும். ஆனால் உண்மை என்னவெனில் பனிமனிதன் யார் கண்களுக்கும் எளிதில் புலப்படாத வகையில் மறைந்திருக்கிறார். விடையைக் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்காக நாங்களே விடையைத் தெரிவிக்கிறோம்.

  Read More: இந்த புகைப்படத்தில் இருப்பது எறும்பின் முகம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

  மேல் வரிசையில் வலதுபுறமாக உள்ள மூன்றாவது வெள்ளை நிற டிசைனை நன்றாக உற்றுப்பாருங்கள். நட்சத்திரத்தின் நடுப்பகுதியில் இருந்து வரையப்பட்டுள்ள டிசைன் பிற டிசைன்களை விட சற்றே மாறியிருப்பதை நீங்கள் காணலாம், இப்போது அதனை நீங்கள் நன்றாக உற்றுப்பார்த்தால், வெள்ளை நிறத்திலான ஸ்னோமேன் உருவத்தை பார்க்கலாம். விடையைக் கண்டுபிடித்தவர்கள் அதனை எப்படி கண்டுபிடித்தீர்கள், எவ்வளவு நேரம் ஆனது என்பதை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்...

  Published by:Srilekha A
  First published:

  Tags: Optical Illusion, Trending