ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மகுடிக்கு மயங்காத பாம்பு.. 8 வினாடிகளில் இந்த படத்தில் இருக்கும் பாம்பை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி

மகுடிக்கு மயங்காத பாம்பு.. 8 வினாடிகளில் இந்த படத்தில் இருக்கும் பாம்பை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical Illusion | இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பு எங்கு உள்ளது என்பதை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் என்பது மிகவும் சுவாரஸ்யமான புதிர்களை கொண்டவை. இது ஒருவரின் மனதை குழப்பும், மற்றும் ஆழமாக கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. அதே போன்று, இது மூளையின் யதார்த்த உணர்வுக்கு சவால் கொடுக்கும் வகையில் இருக்க கூடியவை. உடல், உடலியல் மற்றும் அறிவாற்றல் மாயைகள் உட்பட பல்வேறு ஆப்டிகல் மாயைகளை நீங்கள் இணையத்தில் பார்த்திருக்கலாம். இந்த ஆப்டிகல் மாயை புதிர்கள் உங்கள் மூளைக்கு வேலை தருபவையாக கருதப்படுகிறது. ஒரு ஆராய்ச்சியின் படி, ஆப்டிகல் மாயைகள் என்பது ஒரு வகையான மனோ பகுப்பாய்வு முறையாக கூறப்படுகிறது.

ஒரு விஷயங்களை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு சாதாரண மனித மூளை என்பது பல்வேறு கோணங்களில் இருந்து விஷயங்களை பார்க்க முடியும். அவை ஒவ்வொன்றிலிருந்தும் வேறுபட்ட கருத்தை உருவாக்கும் என்பது தான் அறிவியல் கூறும் உண்மை.

ஆப்டிகல் இல்யூஷன் ஏன் ஏற்படுகிறது?

ஆப்டிகல் இல்யூஷன் விளைவு என்பது மனித புற பார்வை (human peripheral vision) என்று அழைக்கப்படுகிறது. அதாவது, நீங்கள் நேரடியாகப் பார்க்கும் விஷயங்கள் உங்களுக்கு எளிதாகத் தெரியும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும், ஆனால் நீங்கள் கீழே பார்த்து மற்றொன்றில் கவனம் செலுத்தும்போது, ​​​​நீங்கள் தேடும் ஒன்று மறைந்துவிடும். இதை போன்றது தான் ஆப்டிகல் மாயையும். பொதுவாக மனிதர்களுக்கு நல்ல புறப் பார்வை இல்லை. இதனால் தான் ஒளியியல் மாயைக்கு நமது மூளை குழப்பம் அடைகிறது.

இந்த வகையினான ஒரு புத்திசாலித்தனமான புதிரை தான் நாம் இன்று பார்க்க போகிறோம். இது 1920களை சேர்ந்த படமாகும். இதில் ஒரு பாம்பாட்டியின் புகைப்படத்தை நீங்கள் காணலாம். இதில் உங்கள் கண்களுக்கு பாம்பு எங்கு உள்ளது என்பதை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்.

பாம்பு எங்கே?

இந்த படத்தில் பாம்பு எங்குள்ளது என்று அறிய படத்தை நன்கு உற்று பாருங்கள். பொதுவாக எல்லோருக்கும் பாம்பு வைக்கப்படும் கூடையின் மீது தான் கவனம் போகும். இது இயல்பு தான். என்றாலும், நீங்கள் நினைப்பது போன்று பாம்பு அங்கு இல்லை. இந்த ஒளியியல் மாயையின் தந்திரமான பகுதி, படத்தில் எங்காவது மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிப்பதாகும். மறைந்திருக்கும் பாம்பைக் கண்டறிவது உங்களுக்கு கடினமாக இருந்தால், உங்களுக்கு உதவ நாங்கள் இங்கே இருக்கிறோம்.

Also Read : இந்த படத்தில் ஒளிந்துள்ள புலிகளை 11 வினாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

இந்த படத்தில் பாம்பு எங்கு மறைந்திருக்கும் என கண்டுபிடிப்பது முதலில் கடினமாகத் தோன்றலாம். பாம்பை கண்டுபிடிக்க எங்கெங்கோ பார்க்க வேண்டியதில்லை. பாம்பாட்டியின் கைகளைப் பார்த்தால் மட்டும் போதும். இப்போது இந்த புதிருக்கான விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம். அவ்வளவு தான், இதற்கான விடை கண்டுபிடித்தாயிற்று.

நாளை வேறொரு ஆப்டிகல் மாயை புதிருடன் சந்திக்கலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Tamil News, Trending