Home /News /trend /

Optical Illusion: இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் கரடியை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

Optical Illusion: இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் கரடியை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

Optical Illusion சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வரும் ஆப்டிக்கல் இல்யூஷன் பற்றி பார்க்கப்போகிறோம். தற்போது ஒரு ரெட்ரோ புதிர்,

Optical Illusion சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வரும் ஆப்டிக்கல் இல்யூஷன் பற்றி பார்க்கப்போகிறோம். தற்போது ஒரு ரெட்ரோ புதிர்,

Optical Illusion சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வரும் ஆப்டிக்கல் இல்யூஷன் பற்றி பார்க்கப்போகிறோம். தற்போது ஒரு ரெட்ரோ புதிர்,

  ஆப்டிக்கல் இல்யூஷன் சம்பந்தமான போட்டோ மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வைரலாவது உண்டு. மாய தோற்றம் கொண்ட அந்த போட்டோ அல்லது வீடியோவில் மறைந்துள்ள விஷயங்களை வைத்து நம்முடைய ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்களை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம் போன்ற சவால்களும் விடுக்கப்படுகிறது.

  இன்று, சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வரும் ஆப்டிக்கல் இல்யூஷன் பற்றி பார்க்கப்போகிறோம். தற்போது ஒரு ரெட்ரோ புதிர், அதாவது ஒரு ஓவியத்தை வெறும் கண்ணால் பார்த்து அலசி, ஆராய்ந்து அதில் மறைந்திருக்கும் கரடியைக் கண்டுபிடிக்க உங்களுக்கு சவால் விடுகிறோம்.

  ப்ளேபஸ்ஸால் (Play buzz) என்ற தளத்தில் பகிரப்பட்டுள்ள பழமையான ஓவியத்தில் ஒரு வேட்டைக்காரர், பனி மூடிய காட்டிற்குள் முழங்காலை வளைத்தபடி கையில் துப்பாக்கியை தூக்கி பிடித்து, தனது இலக்கை நோக்கி காத்திருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த ஓவியத்தில் மறைத்திருக்கும் கரடியை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

  அந்த ஓவியத்தை பார்க்கும் போது கரடியை காணவில்லையே ஒருவேளை ஏமாற்றுவேலையாக இருக்குமோ என நீங்கள் நினைக்கலாம். இதுபோன்ற ‘இருக்கு ஆனா இல்ல’ என்ற மேஜிக் ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோக்களின் பலமே. நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேட்டைக்காரரின் போட்டோ உங்களை ஏமாற்றுவது போல் தோன்றலாம், ஆனால் உண்மையில் பின்னணியில் எங்கோ ஒரு பெரிய கிரிஸ்லி கரடி நிச்சயம் மறைந்திருக்கும், அதை கண்டுபிடிப்பது சாமானியமான காரியம் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

  நீங்கள் தேடும் கிரிஸ்லி கரடி ஊசி இலை மரத்திற்கு பின்னாலோ, பனிக்குவியலுக்கு பின்னாலோ மறைந்திருக்கலாம். கண்டுபிடிக்க முடியவில்லையா?, நன்றாக, உன்னிப்பாகப் பாருங்கள், வேட்டைக்காரருக்குப் பின்னால் நன்றாக ஊற்றுப்பாருங்கள். இன்னமும் தெரியவில்லையா?. சரி விடுங்க.., வேட்டைக்காரருக்கு பின்னால் இருக்கும் பிரவுன் கலர் பனிக்குவியலை நன்றாக உற்றுப்பார்த்தீர்கள் என்றால் அது தான் நீங்கள் தேடிய கிரிஸ்லி கரடி என்பது தெரிந்திருக்கும்.  அதன் நிறம் மரப்பட்டையுடனும், புசு புசு தோற்றம் பனியுடனும் ஒத்துப்போகும் படி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதனை பார்க்கும் போது மிருகம் மயக்கமடைந்து அல்லது இறந்துவிட்டதாகவோ தோன்றுகிறது. ஏனெனில் அதன் தலை வானத்தை நோக்கி கண்களை மூடியபடி உள்ளது.

  சமீபத்தில், க்யூப்ஸ் அடுக்கு பற்றிய மற்றொரு ஆப்டிக்கல் இல்யூஷன் வீடியோ வைரலானது. யூ-டியூப்பில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், ஒரு கன சதுரம் ஒரு தட்டையான மேற்பரப்பில் பல கனசதுரங்களை அடுக்கி வைத்துள்ளது போன்ற அமைப்பு காண்பிக்கப்படுகிறது. அதனை பார்க்கும் அனைவரும் கட்டையால் ஆன கனசதுரங்களை எப்படி இப்படி அடுக்க முடியும் என ஆச்சர்யப்படலாம்.  ஆனால், அதனை உருவாக்கிய மைக்கேல் செஷயர் மாயை விலக்கிய போது பார்வையாளர்கள் திடுக்கிட்டிருப்பார்கள். ஏனெனில் அவர் 3டி வேலைப்பாடு மூலமாக மூன்று வண்ண மரச்சதுரங்களைக் கொண்டு திகைக்க வைக்கும் ஆப்டிக்கல் இல்யூஷனை உருவாக்கியுள்ளார்.

  இதுகுறித்து செஷயர் கூறுகையில், “அறுகோணத்தில் அமைக்கப்பட்ட மூன்று வண்ண மரங்களை 3D கனசதுரத்தை போலத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆழத்தின் தோற்றம் ஏற்படுகிறது. பல அறுகோணங்கள் ஒன்றுடன் ஒன்று மற்றும் வெவ்வேறு அளவுகளில் 3D விளைவு பெரிதாக்கப்படுகிறது. பெரிய வெளிப்புற அறுகோணங்களைச் சேர்ப்பது மற்றொரு மாயமான வடிவத்துடன் கூடிய கனசதுரத்தை உருவாக்க உதவுகிறது. அது முழு வடிவமைப்பையும் இணைத்து சமநிலைப்படுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Optical Illusion, Trends, Viral

  அடுத்த செய்தி