ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும், ஒளியியல் மாயை வெறும் புதிர் விளையாட்டு மட்டும் கிடையாது. அதனுள் மறைந்துள்ள மாய தோற்றங்களில் நீங்கள் முதலில் பார்க்கும் உருவங்களை வைத்து மனிதர்களின் குணாதிசயங்களை எடை போட முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஆப்டிக்கல் இல்யூஷன் படம் ஒன்றை பார்த்த உடனேயே நம் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ, அதைப் பொறுத்து நம்முடைய குணம் என்ன என்பது தீர்மானிக்கப்படுகிறது.
நம்முடைய ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்களை எளிதாகத் தெரிந்து கொள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் முறை உதவுகிறது. மூளைக்கு வேலை கொடுப்பது மட்டுமின்றி நமது ஆளுமை திறன்களையும் அறிந்து கொள்ளும் பல ஆப்டிக்கல் இல்யூஷன்களை இதற்கு முன்பு நாம் பார்த்துள்ளோம். இந்த முறையும் அப்படிப்பட்ட ஒரு ஆப்டிக்கல் இல்யூஷனை தான் நாங்கள் உங்களுக்கு கொண்டு வந்துள்ளோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்யூஷனில் முதலில் உங்கள் கண்களுக்கு தெரிவது என்ன என்பதை வைத்து, மக்கள் உங்களைப் பற்றி முதலில் என்ன கவனிக்கிறார்கள் அல்லது உங்களிடம் மிகவும் கவனிக்க வேண்டிய தன்மை எது என்பதை பற்றி நீங்கள் அறிந்துகொள்ளலாம். மேலும் இந்த படம் உங்களைப் பற்றிய உள்ளார்ந்த ஆளுமைப் பண்புகளையும், உங்களைப் பற்றி என்ன கவனிக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தும் திறனையும் கொண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியம் ஓலெக் ஷுப்லியாக் என்பவரால் வரையப்பட்டது. இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்கள் வரைவது இவரது பொழுதுபோக்கு. இந்த ஓவியத்தில் குதிரை, இசைக்கலைஞர் மற்றும் தலை ஆகிய மூன்று விஷயங்களை கவனிக்கும் படி ஓவியர் தமது கை வண்ணத்தை காட்டியுள்ளார். இதில் நீங்கள் முதலில் எதைப் பார்க்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Also Read : பலரை குழப்பிய புகைப்படம்... இந்த திருமண உடையில் மறைந்திருக்கும் உருவம் என்ன தெரியுமா.?
ஆப்டிக்கல் இல்யூஷன் பகுப்பாய்வு:
குதிரை: படத்தில் நீங்கள் முதலில் குதிரையைப் பார்த்திருந்தால், உங்களை தொடர்பு கொள்ளும் மனிதர்கள் உங்களிடம் முதலில் கவனிப்பது உங்கள் கண்களை தான். மேலோட்டமாக பார்க்கும் போது நீங்கள் அணுக முடியாத நபராக தோன்றலாம், ஆனால் உங்களுடன் பழகி பார்த்தால் உங்களைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்வார்கள்.
Also Read : ஒரு பெண்ணை டேட் செய்கிறேன் , நான் ஒரு 'Gay' என வெளிப்படையாக அறிவித்த டென்னிஸ் வீராங்கனை
இசைக்கலைஞர்: நீங்கள் முதலில் இசைக்கலைஞரைக் கவனித்திருந்தால், மக்கள் நீங்கள் ஒரு நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பதை முதல் சந்திப்பிலேயே உணர்ந்து கொள்வார்கள். சின்ன, சின்ன பேச்சால் கூட மக்களை சிரிக்கவைக்ககூடியவர். உங்களை பிறர் பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்காதீர்கள் மற்றும் பிறர் உங்களை குறைவாக எடை போடவும் இடம் தராதீர்கள்.
Also Read : ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் மறைந்திருக்கும் பூவை கண்டுபிடிக்க முடியும்... நீங்கள்?
தலை: நீங்கள் முதலில் தலையைப் பார்த்தால், மக்கள் முதலில் கவனிப்பது உங்களுடைய வரவேற்பு மற்றும் உபசரிப்பாக தான் இருக்கும். வீட்டிற்கு வந்தவர்களை இன்முகத்துடன் கைகுலுக்கி வரவேற்பதை பார்க்கும் போது, விருந்தினர்கள் ஏதோ சொந்த வீட்டிற்கு வந்ததைப் போல நெகிழ்ச்சியாக உணர வைப்பீர்கள். அதேபோல் பிறர் பேசுவதை பொறுமையுடன் காது கொடுத்து கேட்கக்கூடிய நபர். இந்த குணநலன்களால் மக்கள் எப்போதும் உங்களைச் சுற்றி இருக்க விரும்புவார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.