ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்த போட்டோவில் நிஜமாகவே சிறுத்தை மறைந்திருக்கிறதா.? முடிந்தால் கண்டுபிடியுங்கள்.!

இந்த போட்டோவில் நிஜமாகவே சிறுத்தை மறைந்திருக்கிறதா.? முடிந்தால் கண்டுபிடியுங்கள்.!

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical Illusion | ஆப்டிகல் இல்யூஷன்களுக்கே டப் கொடுக்கும் விதமாக புகைப்படை கலைஞர் ஒருவர் சுற்றுப்புறத்தோடு கணகச்சிதமாக பொருந்தியிருக்கக்கூடிய சிறுத்தையை படம் பிடித்து காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் இதுவரை பலவகையான ஆப்டிகல் இல்யூஷன் மற்றும் பிரெயின் டீசர் சம்பந்தப்பட்ட படங்கள், ஓவியங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்திருக்கிறோம். அதில் பெரும்பாலானவற்றை முதல் பார்வையிலேயே நீங்கள் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் ஆப்டிகல் இல்யூஷன்களுக்கே டப் கொடுக்கும் விதமாக புகைப்பட கலைஞர் ஒருவர் சுற்றுப்புறத்தோடு கணகச்சிதமாக பொருந்தியிருக்கக்கூடிய சிறுத்தையை படம் பிடித்து காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஹேமந்த் தாபி என்ற புகைப்பட கலைஞர், 2019 ஆம் ஆண்டு வனப்பகுதியில் உலவிக் கொண்டிருந்த விலங்குகள் மற்றும் பறவைகளை படம் எடுத்துள்ளார். அப்போது அவருக்கே அதிர்ச்சி தரக்கூடிய வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதுதொடர்பான போட்டோவை சுற்றுச்சூழல் ஆர்வலர் பெல் லாக் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் "இதை யாரோ எனக்கு அனுப்பி சிறுத்தையைக் கண்டுபிடிக்கச் சொன்னார்கள். சிறுத்தையைக் கண்டுபிடிக்கும் வரை இது ஒரு நகைச்சுவை என்று நான் நம்பினேன். உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?" என கேள்வி எழுப்பியுள்ளார். அந்த போட்டோவை பார்க்கும் போது மண் குவியலும், மரம் ஒன்றும் மட்டுமே நமது கண்ணுக்குத் தென்படுகிறது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த போட்டோவை பார்க்கும் பலரும் கூட, அங்கு எந்த சிறுத்தையும் இல்லை என்றே கமெண்ட் செய்துள்ளனர்.

ட்விட்டர் யூஸரில் ஒருவர் "யாராவது எனக்கு பதில் சொல்லுங்கள். இனி இந்த குப்பையையே பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும்" எனத் தெரிவித்துள்ளார். மற்றொருவர், "சிறுத்தையைக் கண்டுபிடிக்க எனக்கு அதிக நேரம் ஆனது" என பதிவிட்டுள்ளார். மூன்றாவது நபரோ "எனக்கு வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே ஆனது” என பதிவிட்டுள்ளார்.

Also Read : மான்கள் கூட்டத்தில் மறைந்திருக்கும் ஒரே ஒரு மயில் - முடிந்தால் 15 வினாடிகளில் கண்டுபிடியுங்கள்.!

ட்விட்டர்வாசிகளுக்கு மட்டுமல்ல முதன் முதலில் இந்த காட்சியைப் பார்த்த புகைப்பட கலைஞர் ஹேமந்த் தாபியே, இரண்டு மீட்டர் தூரத்தில் சிறுத்தை இருந்ததை தான் பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். தான் வேறு ஒரு சிறுத்தையை பார்த்து புகைப்படம் எடுக்கத் தயாரான போது, தனக்கு வெறும் 7 அடி தூரத்தில் இந்த சிறுத்தை படுத்திருப்பதை பார்த்து மிரண்டுவிட்டாராம். சிறுத்தை அங்கு இருப்பதை அதன் வால் அசைவை வைத்து தான் கண்டுபிடித்துள்ளார், நீண்ட நேரமாக அங்கு அவர் இருந்திருந்தாலும் முதல் பார்வையில் அவரால் சிறுத்தை இருப்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

Also Read : வேலை செய்யும் இடத்திற்கே போய் அப்பாவுக்கு மகள் கொடுத்த சர்ப்ரைஸ்... வைரல் வீடியோ.!

ஆனால் புறச்சூழ்நிலைக்கு ஏற்றார் போல் சிறுத்தை பக்காவாக மேட்ச் ஆகியுள்ளதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சிறுத்தை என்ன பச்சோந்தியா?, பாம்பா? சூழ்நிலையில் கலந்து மறைந்து போக என நீங்கள் நினைப்பது எங்களுக்குத் தெரிகிறது. ஆனால் பலரும் மண் குவியல், குப்பை, காலி இடம் என நினைக்கும் பகுதியில் தான் சிறுத்தை ரிலாக்ஸாக படுத்துக்கொண்டிருக்கிறது.

மரத்திற்கு பின்புறம் இருக்கும் மணல் குவியலுக்கு கீழ் பகுதியில் பார்வையை செலுத்துங்கள். இப்போது கண்களுக்கு சிறுத்தை தென்படும், இல்லையெல் கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்..

Published by:Selvi M
First published:

Tags: Leopard, Optical Illusion, Trending