Home /News /trend /

சான்ஸே இல்ல... கீழே உள்ள படத்தில் இருந்து ரிமோட்டை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

சான்ஸே இல்ல... கீழே உள்ள படத்தில் இருந்து ரிமோட்டை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

Trending

Trending

Optical illusion | இன்றைய ஆப்டிக்கல் இல்யூஷனில் வீட்டில் சிதறிக்கிடக்கும் பொருட்களுக்கு நடுவே மறைந்திருக்கும் ரிமோட்டை, 20 வினாடிகளுக்குள் கண்டுபிடிப்பதற்கான சவாலை நாங்கள் உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்.

    ‘இந்த ரிமோட் எங்க தான் போச்சு?’ இந்த குரலை ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் கேட்டிருப்போம். ஏனென்றால் ஒரு வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் பொருளாக டி.வி. ரிமோட் உள்ளது. என்ன தான் வீட்டில் உள்ள சுத்தமாகவும், அழகாக அடுக்கியும் வைத்தாலும் ரிமோட்டை மட்டும் எடுத்த இடத்தில் வைக்க வேண்டும் என்ற பழக்கம் யாருக்கும் கிடையாது.

    எனவே இன்றைய ஆப்டிக்கல் இல்யூஷனில் வீட்டில் சிதறிக்கிடக்கும் பொருட்களுக்கு நடுவே மறைந்திருக்கும் ரிமோட்டை, 20 வினாடிகளுக்குள் கண்டுபிடிப்பதற்கான சவாலை நாங்கள் உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். நீங்கள் வெற்றி பெற்றால், சரியாக ரிமோட்டை கண்டுபிடித்த 1% நபர்களில் நீங்களும் ஒருவர் என பெருமை கொள்ளலாம். இந்த ஆப்டிக்கல் இல்யூஷனை இங்கிலாந்தை தளமாகக் கொண்ட நிறுவனமான ScS வெளியிட்டுள்ளது.

    ஆப்டிக்கல் இல்யூஷன் வகைகள்:

    பொதுவாக ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயைகள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    - நேரடி இல்யூஷன்கள்

    - உடலியல் இல்யூஷன்கள்

    - அறிவாற்றல் இல்யூஷன்கள்

    உளவியலாளர்களின் கூற்றுப்படி, ஆப்டிக்கல் இல்யூஷன்கள் என்பது மூளையின் காட்சி அமைப்பு யதார்த்தத்தையே பொய் என காட்டுகிறது. இன்று நாம் பார்க்கப்போகும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மூலமாக நாம் எந்த சோதனையும் செய்யப்போவது இல்லை, உங்களைப் பற்றிய எந்த ஆளுமையை பற்றிய ஆராயப்போவதில்லை மாற்றாக உங்கள் மூளைக்கும் கண்களுக்கும் ஒரு ஜாலியான உடற்பயிற்சியை கொண்டு வந்துள்ளோம்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்யூஷனைப் கண்டுபிடிப்பதற்கான அடிப்படை விதிகள் என்னவென்றால், படத்தைப் பார்ப்பதற்கு முன் 5 வினாடிகள் கண்களை மூடிக்கொள்ளுங்கள், அனைத்து பின்னணி இரைச்சலிலிருந்தும் உங்கள் மனதை அமைதியாக்குங்கள். கண்களைத் திறந்து படத்தை 20 வினாடிகள் மட்டுமே உற்றுப்பாருங்கள். அதன் பின்னர் விடையை கண்டுபிடிக்க முயலுங்கள்.



    படத்தில் நீங்கள் பல பொருட்கள் சிதறிக்கிடப்பதை பார்க்கலாம். சோபா செட்கள், நாற்காலிகள், மெத்தைகள், செடிகள், குவளைகள் மற்றும் விளக்குகளை படத்தில் காணலாம். படத்தில் கம்பளங்கள், கண்ணாடிகள், டார்சுகள் மற்றும் பலவற்றையும் நீங்கள் கவனிக்கலாம் ஆனால் ரிமோட்டைப் பார்த்தீர்களா?

    Also Read : இந்த படத்தில் நீங்கள் எந்த முகங்களை முதலில் பார்த்தீர்கள் - உங்கள் ஆளுமையை தெரிந்துகொள்ளுங்கள்!

    உங்களில் பலர் 20 வினாடிகளுக்குள் ரிமோட்டைக் கண்டுபிடிப்பிடித்து விடலாம் என நினைக்கலாம். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, முதலில் மேலே இருந்து கீழே சிதறிக்கிடக்கும் பொருட்களை நோட்டமிடுங்கள். கடைசியாக படத்தின் நடுப்பகுதியை பாருங்கள்.

    Also Read : ஒரு சதவீதம் பேர் மட்டுமே வெற்றி.. இந்த படத்தில் ஒட்டகச்சிவிங்கியை கண்டுபிடிக்க முடிகிறதா?

    இந்த தந்திரத்தைப் பயன்படுத்தி அதிகபட்ச மக்கள் ரிமோட்டைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் செய்யவில்லை என்றால், உண்மையில் ஆப்டிகல் இல்யூஷனை பார்க்க தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம். பரவாயில்லை உங்களுக்கு இப்போது விடையை நாங்களே சொல்கிறோம். ரிமோட் நடுவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள மரச்சாமான்களின் அடிப்பகுதியில் உள்ளது. இப்போதும் நீங்கள் அதனை கண்டுபிடிக்கவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வட்டமிடப்பட்ட படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.



    இதுவரை சரியாக ரிமோட்டை 1% நபர்கள் தான் 20 வினாடிகளுக்குள் கண்டுபிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Selvi M
    First published:

    Tags: Optical Illusion, Trending

    அடுத்த செய்தி