Home /News /trend /

பூவுக்குள் ஒளிந்திருக்கும் முகங்கள் எல்லாம் அதிசயம்... கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் முகங்கள் எல்லாம் அதிசயம்... கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் முகங்கள் எல்லாம் அதிசயம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் முகங்கள் எல்லாம் அதிசயம்

Optical Illusion | ஒரு சிலருக்கு உடனடியாக பூக்களில் எந்த இடத்தில் முகங்கள் இருக்கின்றன என்பது எளிதாக கண்டு கொள்ள முடியும்.

    சமீபகாலமாக, சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் தலை சுற்ற வைக்கும் வகையிலான ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு ஓவியத்தில் மறைத்திருக்க வேண்டியதை கண்டுபிடிப்பதாகட்டும் அல்லது அதில் உள்ள புதிருக்கு தீர்வு தருவதாகட்டும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் எப்போதுமே நம் கவனத்தை ஈர்ப்பவையாகவே அமைகின்றன. புதிர்கள், மைண்ட் கேம்கள் மற்றும் சுடோகு போன்றவற்றைத் தீர்ப்பதில் உள்ள சுவாரயங்களை விட ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மூளைக்கு சிறந்த சவாலாக உள்ளன. ஆப்டிக்கல் இல்யூஷன் புதிர்கள் அனைத்துமே திறமையாளர்களால் வடிவமைக்கப்பட்ட படங்கள் மற்றும் ஓவியங்கள் ஆகும்.

    நம்முடைய ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்களை எளிதாகத் தெரிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஆப்டிக்கல் இல்யூஷன். ‘இருக்கு ஆனா இல்ல’ என்று கூறுவது போல, ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும். அதே போல இங்கே ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் (மாயை) புகைப்படம் உள்ளது.

    இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் புகைப்படத்தை சாதாரண வரைப்படம் போலத்தான் தெரிகிறது. இங்கிருக்கும் பூக்கள் அனைத்துமே அழகாக பெயின்ட் செய்யப்பட்ட பூக்களாக சாதாரணமாக பார்க்கும்போது தோன்றும். ஆனால் இதில் வேறு சில உருவங்கள் மறைந்து இருக்கிறது. உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

    பொதுவாக ஆப்டிகல் இல்யூசன் என்பது டிஜிட்டலாக உருவாக்கலாம் அல்லது கைகளால் வரையலாம் ஆனால் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படம் கைகளால் பெண் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



    பெரும்பாலான விஷயத்தை நாம் கண்களால் பாக்கும் போது அதை அது உண்மையாகத்தான் தெரியும். ஆனால் இந்த புகைப்படத்தில் இருக்கும் பூக்களை பார்க்கும் பொழுது பூக்களாக தெரிவது உண்மைதான் என்றாலும் புகைப்படத்தில் வேறு சில உருவங்களும் மறைந்துள்ளன. நீங்கள் ஒரு விஷயத்தைப் பார்த்த பொழுது அதில் உள்ள தகவலை நீங்கள் புலன்கள் புரிந்து கொண்டு, மூளைக்கு தகவல் அனுப்பும். உங்கள் புரிதலுக்கு ஏற்பத்தான் மூளை தகவலை வகைப்படுத்தி, உலகத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டும்.

    Also Read : போதை பழக்கத்தை கைவிட ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட நபருக்கு நேர்ந்த விபரீதம்

    அதேபோலத்தான் மேலே உள்ள வரைபடத்தில் ஒரு கிளையில் சில பூக்கள் மட்டும் இலைகள் இருக்கின்றன. நீங்கள் என்ன தகவலை பார்க்க விரும்புகிறீர்களோ அதை தான் உங்களுடைய புலன்கள் உங்கள் மூளைக்கு அனுப்புகிறது. ஆனால் கூர்ந்து கவனிக்கும் பொழுது இந்த புகைப்படத்தில் வேறு சில உருவங்களும் தென்படும்.

    ஒரு சிலருக்கு உடனடியாக பூக்களில் எந்த இடத்தில் முகங்கள் இருக்கின்றன என்பது எளிதாக கண்டு கொள்ள முடியும் ஒரு சிலர் கொஞ்சம் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும்.

    உங்களுக்கு இப்பொழுதும் முகம் தெரியவில்லை என்றால் நீங்கள் இந்த புகைப்படத்தில் பூக்கள், கிளையைத் தவிர வேறு எதுவும் இல்லை என்ற முடிவுக்குக்கூட வரலாம். ஆனால் இறுதியாக ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்!

    உங்களுக்கான ஒரு சிறிய க்ளூ: இந்த படத்தில் மொத்தம் ஆறு முகங்கள் உள்ளன.

    இப்போதும் கண்டறிய முடியவில்லையா? முகங்கள் கீழே உள்ள படத்தில் எந்த இடத்தில் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
    Published by:Vijay R
    First published:

    Tags: Optical Illusion

    அடுத்த செய்தி