Home /News /trend /

இந்த படத்தில் மறைந்திருக்கும் கரடியை மட்டும் கண்டுபிடித்தால் நீங்க வேற லெவல்!

இந்த படத்தில் மறைந்திருக்கும் கரடியை மட்டும் கண்டுபிடித்தால் நீங்க வேற லெவல்!

ஆப்டிகல் புகைப்படம்

ஆப்டிகல் புகைப்படம்

Optical Illusion | நீங்கள் எதைக் கொடுத்தாலும் நாங்கள் சில நிமிடங்களில் அதை கண்டுபிடித்துவிடுவோம் என ஆர்வத்துடன் இருக்கும் உங்களுக்காக அசத்தலான ஆப்டிக்கல் இல்யூஷனை கொண்டு வந்திருக்கிறோம்.

    கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் நெட்டிசன்களின் தலையை சுற்றவைக்க கூடிய ஆப்டிக்கல் இல்யூஷன்கள் வைரலாகி வருகின்றன. ஆப்டிக்கல் இல்யூஷன்கள் எப்போதும் மூளை மற்றும் கண்களின் திறனை பரிசோதிக்க ஆப்டிக்கல் இல்யூஷன்கள் பயன்படுகின்றன. மேலும் அதனை நீங்கள் பார்க்கும் கோணம் மற்றும் கண்களுக்கு முதலில் புலப்படும் படங்களை வைத்து நீங்கள் என்ன மாதிரியான குணநலம் கொண்டவர், பிரச்சனைகளை கையாளும் திறன், ஊற்றுநோக்கும் பண்பு, கண்காணிப்பு திறன் உள்ளிட்ட பல விஷயங்களையும் கண்டறிய முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    மறைந்து கிடக்கும் ரகசியங்களை தோண்டி துருவி கண்டறிவதில் அனைவருக்குமே கொஞ்சம் ஆர்வம் அதிகமாக தான் இருக்கும். அதாவது ஆப்டிக்கல் இல்யூஷனைப் பொறுத்தவரை ஒரு ஓவியத்திற்குள் மிகவும் நுணுக்கமாக மறைந்திருக்கும் விலங்கு அல்லது வேறு உருவத்தை கண்டுபிடிப்பது மிகவும் சுவாரஸ்யமானது. அப்படி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது ஆர்வத்தையும் தூண்டும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.

    குறிப்பாக சில ‘இருக்கு ஆனா இல்ல’ வகையைச் சேர்ந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் உங்களது தலையையே சுற்றவைக்கும். ஏனெனில் அவற்றில் மறைத்திருக்கும் உருவத்தை பார்த்த முதல் பார்வையிலேயே கண்டுபிடிப்பது எளிதில் நடக்காத காரியமாகும். ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒருவர் இயக்கம், ஓவியத்தில் மறைந்திருக்கும் மற்றொன்றின் படம், முப்பரிமாண வடிவங்கள் மற்றும் பிற உருவகப்படுத்துதலை கவனிக்க வேண்டும். எளிமையாக சொல்வதென்றால் நீங்கள் ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியத்தை மேலோட்டமாக பார்த்தால் ஒரு உருவமும் கூர்ந்து கவனித்தால் அதிலேயே வேறு ஒன்றின் உருவமும் ஒன்றாக இணைந்திருப்பதை காண முடியும்.

    Also Read : 3.5 கோடி சம்பளம் - ஆனால் வேலையை தூக்கி எறிந்த Netflix ஊழியர்.. காரணம் என்ன தெரியுமா?

    நீங்கள் எதைக் கொடுத்தாலும் நாங்கள் சில நிமிடங்களில் அதை கண்டுபிடித்துவிடுவோம் என ஆர்வத்துடன் இருக்கும் உங்களுக்காக அசத்தலான ஆப்டிக்கல் இல்யூஷனை கொண்டு வந்திருக்கிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள், ஹாலிவுட் ஹாரர் படத்தில் வருவது போல் நீண்ட மரங்கள் நிறைந்த காட்டுக்குள் இருக்கும் அழகான மர வீடு தெரிகிறதா?. இதில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது பேயை அல்ல, இதற்குள் மறைந்திருக்கும் கரடியை தான் நீங்கள் கண்டுபிடிக்கப்போகிறீர்கள்.



    மறைந்திருக்கும் கரடியை கண்டுபிடிக்க முடிகிறதா?, நன்றாக சுற்றிப்பாருங்கள்... ஒருவேளை அது தரையில் கூட படுத்துக்கொண்டிருக்கலாம், இல்லை மரக்கிளைகளுக்கு இடையே மறைந்திருக்கலாம். நீங்கள் எளிதாக கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம், மர வீட்டிற்கு பின்புறம் உள்ள கிளைகளை நன்றாக உற்றுப்பாருங்கள். எவ்வளவு முயன்றும் முடியவில்லையா? சரி, விடையை நாங்களே கூறுகிறோம்.



    வீட்டிற்கு மேலே பாருங்கள். மரத்தின் கிளைகளில் மறைந்திருக்கும் கரடியின் முகத்தை நீங்கள் பார்க்கலாம். அனைவரும் முழு கரடி உருவம் எங்காவது மறைந்திருக்கும் என காத்திருந்த நிலையில், இப்படியொரு டுவிஸ்ட்டை இந்த ஆப்டிக்கல் இல்யூஷனை உருவாக்கியவர் வைத்திருக்கிறார். இதனால் நொந்து போன நெட்டிசன்கள் பலரும் விதவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

    ஒரு பயனர், நான் நிஜக்கரடியை தேடிக்கொண்டிருந்தேன் என பதிவிட்டுள்ளார். மற்றொருவர் இது சூப்பர் மார்க்கெட்டிற்குள் இருக்கும் எனது தந்தையை கண்டுபிடிப்பது உள்ளது என வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளார். நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி