Home /News /trend /

ஒரு சதவீதம் பேர் மட்டுமே வெற்றி.. இந்த படத்தில் ஒட்டகச்சிவிங்கியை கண்டுபிடிக்க முடிகிறதா?

ஒரு சதவீதம் பேர் மட்டுமே வெற்றி.. இந்த படத்தில் ஒட்டகச்சிவிங்கியை கண்டுபிடிக்க முடிகிறதா?

ஆப்டில் புகைப்படம்

ஆப்டில் புகைப்படம்

Optical Illusion | சோசியல் மீடியாவை அவ்வப்போது சில விஷயங்கள் ஆட்டிப்படைப்பது உண்டு. குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன் பற்றிய படங்கள் தாறுமாறு வைரலாகி வருகின்றன.

    சோசியல் மீடியாவை அவ்வப்போது சில விஷயங்கள் ஆட்டிப்படைப்பது உண்டு. குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன் பற்றிய படங்கள் தாறுமாறு வைரலாகி வருகின்றன. மூளையை கசிக்கிப் பிழிந்து, கண்களை நன்றாக உற்றுநோக்கி கண்டுபிடிக்க வேண்டிய புதிர்களைக் கொண்ட ஆப்டிக்கல் இல்யூஷன்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்திழுந்து வருகின்றன.

    பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் ஆப்டிக்கல் இல்யூஷனில் மறைந்திருக்கும் விஷயத்தை கண்டுபிடிப்பது என்பது பூங்காவில் ஜாலியாக ஒரு வாக்கிங் செல்வது போன்றது தான் என்றாலும், கொஞ்சம் அதற்காக மெனக்கெட்டு நேரத்தையும், மூளையையும் நீங்கள் செலவழிக்க வேண்டி வரும். அப்படி உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி மறைக்கப்பட்டுள்ள வடிவம் அல்லது புகைப்படத்தை கண்டுபிடித்துவிட்டால், அதன் மூலம் கிடைக்கும் உற்சாகமும், புத்துணர்ச்சியும் அளவிட முடியதாது. அதனால் தான் பலருக்கும் இந்த புதிர் விளையாட்டு பலரையும் தன்வசப்படுத்தி வருகிறது.

    ஆப்டிக்கல் இல்யூஷனில் மறைத்திருக்கும் வடிவங்கள், பார்வையாளர்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கும் வகையில் பொதுவான வண்ணம் மற்றும் வடிவமைப்பு கொண்டு இருக்கும். இதனால் தான் இந்த புதிர் விளையாட்டு மூளைக்கும், கண்ணுக்குமான உடற்பயிற்சியாக பார்க்கப்படுகிறது.



    இன்று, மிகவும் சுவாரஸ்யமான ஆப்டிக்கல் இல்யூஷன் ஒன்றை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். @jack.sglt என்ற டிக்டாக் யூஸர் பகிர்ந்துள்ள சவால் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தில், பச்சை நிறத்தில் ஒட்டகச்சிவிங்கி ஒளிந்திருப்பதாக டிக்டாக்கர் தெரிவித்துள்ளார். இந்தப் படம் உங்களின் ஸ்பாட்டிங் திறமையை சோதிக்கும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். "உங்கள் கண்களை நகர்த்தினால் படத்தில் ஒரு உருவம் இருப்பதை நீங்கள் உணரலாம்” என பதிவிட்டுள்ளார்.

    உங்களுடைய கண்களை நகர்த்துவதன் மூலம், பச்சை பசுமைக்கு நடுவில் மறைந்திருக்கும் ஒட்டகச்சிவிங்கியை எளிதில் கண்டுபிடிக்க முடியும். எனவே இப்போது உங்களுக்கான சவால் மறைந்திருக்கும் ஒட்டகச்சிவங்கியை கண்டுபிடிப்பது ஆகும். இந்த பச்சை வண்ண இலைகள் மற்றும் தாவரங்களுக்கு நடுவே மறைத்திருக்கும் ஒட்டகச்சிவிங்கியை கண்டுபிடிப்பது எளிதான காரியமா? என நீங்கள் கேட்கலாம்.

    'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை போலவே நிஜத்தில் ஒரு சம்பவம்! க்ளைமேக்ஸ் தான் வேற

    ஆனால் டிக்-டாக்கர் நீங்கள் ஒட்டகச்சிவிங்கியை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அதன் கண்களை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதுவரை இந்த பச்சை வண்ணத்திற்குள் மறைத்திருக்கும் ஒட்டகச்சிவிங்கியை ஒரு சதவீதம் பேர் மட்டுமே கண்டறிந்துள்ளனர்.

    இப்போது நீங்கள் உங்கள் கண்களை மையப்படுத்தாமல் ஆப்டிகல் மாயையைப் பார்த்தால், ஒரு ஒட்டகச்சிவிங்கி திரையில் தோன்றும், உங்கள் மூக்கை படத்தின் மையத்தில் வைத்து, உங்கள் தலையை மெதுவாக நகர்த்திப் பாருங்கள். மறைக்கப்பட்ட ஒட்டகச்சிவிங்கியை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள்.

    மேலும் ஆப்டிக்கல் இல்யூஷனுக்குள் மறைந்திருக்கும் ஒட்டகச்சிவிங்கியை கண்டுபிடிக்க ஒரு சதுரத்தையும் காட்டுகிறார். ஆனால் அதற்குள் மறைந்திருக்கும் உருவத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என பெரும்பாலான நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர். உங்கள் கண்களுக்கு ஒட்டகச்சிவிங்கி தெரிந்தால் கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Optical Illusion

    அடுத்த செய்தி