Home /News /trend /

உங்கள் மூளைக்கு சவால்.. காபி கொட்டைகளுக்கு நடுவில் மனித முகம்.. ஒரு நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா?

உங்கள் மூளைக்கு சவால்.. காபி கொட்டைகளுக்கு நடுவில் மனித முகம்.. ஒரு நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா?

ஆப்டிகல் புகைப்படம்

ஆப்டிகல் புகைப்படம்

Optical illusion | அதே காபி கொட்டை  நிறத்தில் மனித முகமும் இருப்பதால் உங்களுக்கு கண்கட்டு வித்தை போல இது அமையக் கூடும்.

    நம் மூளைக்கும், சிந்தனைத் திறனுக்கும் சவால் விடும் வகையில் அமைவது தான் ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத் தோற்றப் படங்கள். குறிப்பாக, இடதுபக்க மூளை அதிகம் வேலை செய்யக் கூடிய மனிதர்கள், எதையும் தீர ஆராயக் கூடியவர்களாக, யதார்த்த சிந்தனை கொண்டவர்களாக இருக்கின்றனர். அதுவே, வலதுபக்க மூளை வேலை செய்யக் கூடிய நபர்கள் ஆர்வம் மிகுந்தவர்களாகவும், உள்ளார்ந்து சிந்திக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.

    எனினும், நமது சிந்தனைத் திறன் எப்படியானது, நாம் எந்த அளவுக்கு புத்திக்கூர்மை உடையவராக இருக்கிறோம் என்பதை பரிசோதிக்கக் கூடியதாக ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் இருக்கின்றன. என்னதான், ஆய்வு மனப்பான்மை கொண்டவராக நாம் இருந்தாலும், நம்மை குழப்பத்திற்கு உள்ளாக்குவதாக ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் அமைந்து விடும்.

    இந்த செய்தியில் காஃபி கொட்டை  நிறைந்துள்ள படம் ஒன்று உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய அனைத்து காஃபி கொட்டைகளுமே ஒரே நிறம் மற்றும் ஒரே மாதிரியான வடிவங்களைக் கொண்டுள்ளன. ஆனால், இந்த  காபி கொட்டைகளுக்கு நடுவே மனிதனின் முகம் ஒன்றும் ஒளிந்துள்ளது. அதே காபி கொட்டை  நிறத்தில் மனித முகமும் இருப்பதால் உங்களுக்கு கண்கட்டு வித்தை போல இது அமையக் கூடும்.



    வலதுபக்க மூளைத் திறன் கொண்டவர்களால் இயலும்…

    வலதுபக்க மூளை சுறுசுறுப்பாக உள்ள நபர்கள் இந்தப் படத்தைப் பார்த்ததும் ஒரு நிமிடத்திற்கு உள்ளாக மனித முகத்தை கண்டறிய முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மனித முகத்தை கண்டறிவதில் உங்களுக்கு மிகுந்த சவால் நிலவுகிறது என்றால், உங்களுக்கான ஹிண்ட் ஒன்றை தருகிறோம். அதாவது, நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் முகம், இந்தப் படத்தின் அடிப்பகுதியில் இருக்கிறது.

    Also Read : 630 அடி ஆழத்தில் பூமிக்கு கீழே மறைந்து இருந்த காடு! அரிய உயிரினங்களின் தாயகம்

    உங்கள் புத்திக்கூர்மை எப்படியானது

    படத்தைப் பார்த்த 3 விநாடிகளில் உங்களால் மனித முகத்தை கண்டறிய முடிந்தது என்றால், உங்கள் வலதுபக்க மூளை மிக நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். 3 நொடிகளில் இருந்து ஒரு நிமிடத்திற்கு உள்ளான கால அளவில் நீங்கள் மனித முகத்தை தெரிந்து கொண்டீர்கள் என்றால் உங்கள் வலதுபக்க மூளை நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது என்று அர்த்தமாம்.

    3 நிமிடத்தை தாண்டியும் கூட உங்களால் இந்தப் படத்தில் மனித முகத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்கள் சிந்தனைத் திறன் போதுமான அளவுக்கு வேலை செய்யவில்லை என்றே அர்த்தம். உங்கள் சிந்தனைத் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இதேபோன்ற வேறுபல ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் சமூக வலைதளங்களில் நிறைந்துள்ளன. அவற்றில் உள்ள புதிரை கண்டுபிடிப்பதன் மூலமாக உங்கள் சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Optical Illusion

    அடுத்த செய்தி