ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்த படத்தில் மறைந்திருக்கும் பல்லியை 9 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

இந்த படத்தில் மறைந்திருக்கும் பல்லியை 9 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical illusion | வயது வித்தியாசம் இன்றி சிறுவர்கள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் வரை சோஷியல் மீடியாக்களில் பல தரப்பினரையும் கவரும் வைரல் விஷயமாக இருந்து வருகின்றன ஆப்டிகல் இல்யூஷன்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன்கள் என்பவை நமது அறிவுத்திறன், கவனிக்கும் திறன்களை மேம்படுத்தவும், IQ லெவலை அதிகரிக்கவும் உதவுகின்றன. நாள்தோறும் சோஷியல் மீடியாக்களில் பல ஆப்டிகல் இல்யூஷன்கள் வைரலாகி நெட்டிசன்களில் அறிவுத்திறனை சோதித்து வருகின்றன. பார்வை கூர்மை மற்றும் புத்தி கூர்மையை மேம்படுத்த உதவும் ஆப்டிகல் இல்யூஷன்கள் நம்மை கடுமையாக சோதித்தாலும் அது நமக்கு தரும் சுவாரசியம் காரணமாக வைரலாகி விடுகின்றன.

நம்மால் கண்டுபிடிக்க முடிந்தாலும் அல்லது முடியவில்லை என்றாலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அதை வைத்து சவால் விடுக்கலாம் என்பதால் எப்போதுமே ஆப்டிகல் இல்யூஷன்கள் அனைவராலும் விரும்பப்பட்டு வருகின்றன. ஒரு ஆப்டிகல் இல்யூஷனலில் மறைந்திருக்கும் விஷயங்களை நீங்கள் எத்தனை வினாடிகளுக்குள் கண்டுபிடிக்கிறோர்களோ அதைப் பொறுத்து விடுக்கப்படும் சவாலில் ஜெயிக்கலாம்.

மனித மூளையின் செயல்பாட்டை ஆய்வு செய்ய பல சமயங்களில் விஞ்ஞானிகள் ஆப்டிகல் இல்யூஷன்களை பயன்படுத்துகிறார்கள். தற்போது நாம் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜானது கண் பார்வை திறனை கூர்மையாக்க உதவும் சவாலை கொண்டுள்ளது. கீழ் நீங்கள் பார்க்க போகும் இமேஜில் ஒரு அழகான ரூமின் காட்சியை நீங்கள் காணலாம். இந்த ரூம் கட்டப்பட்டிருக்கும் விதத்தை பார்த்தால் குளிர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் ரூமை போல் இருக்கிறது. நேர்த்தியான ஃபர்னிச்சர்கள் இந்த ரூமிற்கு மேலும் அழகு சேர்க்கிறது

மேலே உள்ள அழகிய ஹால் ரூமின் இமேஜை பார்த்து விட்டீர்களா? எந்த பிரதேசமாக இருந்தாலும் வீடுகளில் பல்லி இருக்கும் அல்லவா? இந்த ரூமிலும் ஒரு பல்லி இருக்கிறது, அது உங்கள் கண்களுக்கு தெரிகிறதா? தெரியவில்லை என்றால் அந்த மறைந்திருக்குக்கும் பல்லியை வெறும் 9 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால். பயன்படுத்திய பழைய பொருட்கள், ஸ்கிரீன்கள் போன்றவற்றின் பின்னால் பல்லிகள் ஒளிந்து கொள்ளும் என்பதால் இமேஜை கவனமாக பாருங்கள்.

Also Read : பாம்புக்கு முத்தம் கொடுத்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்.. வைரல் வீடியோ.!

சிறந்த கவன திறன் கொண்டவர்கள் நிச்சயமாக பல்லியை எளிதாக கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் உங்களால் இன்னும் பல்லியை கண்டுபிடிக்க முடியவில்லையா.? ஒரு க்ளூ கொடுக்கிறோம்.. மறைந்திருக்கும் பல்லியை சுவற்றின் மீது தேடாமல் கீழே மர ஃபர்னிச்சர்களின் அருகில் தேடி பாருங்கள். அப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கீழே வட்டமிட்டுள்ள விடை அடங்கிய இமேஜை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ஐ டெஸ்ட் ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்களாகவே விடையை கண்டுபிடித்திருத்தால் உங்களுக்கு எண்கள் பாராட்டுக்கள். இப்போது இந்த சவாலை உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கும் நீங்கள் விடுக்கலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending