Home /News /trend /

ஒளிந்திருக்கும் பூனை பாலை குடிக்கும் முன் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்.!

ஒளிந்திருக்கும் பூனை பாலை குடிக்கும் முன் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்.!

ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆப்டிக்கல் இல்யூஷன்

Optical Illusion | இங்கே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் ஒரு பூனை மறைந்திருக்கிறது அந்த பூனையை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இணையத்தில் எவ்வளவு செய்திகள் வைரலாக பகிரப்பட்டாலும், சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் சார்ந்த செய்திகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. பலரும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்களில் வெவ்வேறு கண்ணோட்டத்தில் தெரியும் விஷயங்களை கண்டுபிடிக்க மிகவும் மெனக்கெடுகிறார்கள். அந்த வகையில் மறைந்திருக்கும் பொருட்களை கண்டுபிடிங்கள் என்ற ஒரு புது வகையான ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் பகிரப்பட்டு பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இங்கே, ஒரு புகைப்படம் உள்ளது, அதில் மறைந்திருக்கும் பூனையை கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்க்கலாம்.

இளம் வயதில் மறைந்திருக்கும் புகைப்படங்களை கண்டுபிடிங்கள், ஆறு வித்தியாசத்தை கண்டுபிடிங்கள், சிதறியிருக்கும் வார்த்தைகளை கண்டுபிடிங்கள் என்று இதுபோன்ற பல வகையான விளையாட்டுகளைப் பார்த்திருப்போம். அதுவே தான் இப்போது நவீன வடிவத்தில் டிஜிட்டல் வெர்ஷனில் ஆப்டிக்கல் இல்யூஷனாக வந்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் ஒரு பூனை மறைந்திருக்கிறது அந்த பூனையை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

இந்த புகைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள வீட்டின் வரவேற்பறையில் எல்லா பொருட்களும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. எதுவும் சரியான இடத்தில் வைக்கப்படாமல் அப்படியே போடப்பட்டுள்ளது. திரைசீலைகள் திறந்து இருக்கிறது, நாற்காலிகளில் ஆடைகள் குவிந்திருப்பது போல, படிக்கும் மேசையில் ஆடைகள் அப்படியே போடப்பட்டுள்ளன, சோபாவில் ஏதேதோ பொருட்கள்; தையல் மெஷின் மேசையில் குப்பையாக போர்ய்ட்கள், எதுவும் சரியாக அடுக்கி வைக்கப்படவில்லை. இந்நிலையில், சேட்டை செய்ய பூனை வேறு ஒன்று. இந்த பொருட்கள் எல்லாம் கண்களுக்கு தெரிகிறதே, பூனை தெரிகிறதா? பூனை எங்கிருக்கிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா?



இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஒருவகையான சிமுலேஷன் கேம் போல. ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. இதையே ஒரு கதை போல கூறினால், இன்னும் சுவாரஸ்யமாக இருக்குமே!

Also Read : இந்த யானை கூட்டத்தில் மறைந்திருக்கும் ஒரே ஒரு காண்டாமிருகத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

இந்த வீட்டின் உரிமையாளர் மிகவும் பிசியான ஒரு பெண்மணி. 24 மணி நேரம் போதாமல், காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழன்று கொண்டிருக்கிறார். இதில், அவர் ஆசையாக வளர்க்கும் ஒரு பூனை வேறு. அவரின் குழந்தைகளை விட பூனை செய்யும் சேட்டை அதிகம்.

Also Read : ரயில் தண்டவாளத்தில் இன்ஸ்டா ரீல்ஸ் செய்த இளைஞர்.. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்

பால், தயிர் என்று எதையாவது ஒன்றை கண்ணுக்குத் தெரியும் படி வைத்து விட்டால் போதும். உடனடியாக தாவிச் சென்று, சாப்பிடுகிறதோ இல்லையோ மொத்தமாக கொட்டிக் கவிழ்த்துவிடும். சில நாட்கள் விடுமுறை என்று சுற்றுலா சென்று வந்து இரண்டு நாட்கள் ஆகியும் வீட்டை சுத்தம் செய்ய முடியவில்லை. போட்டது போட்ட இடத்தில் இருக்கின்றன. இந்நிலையில், பூனையை காணவில்லை என்று தேடிக் கொண்டிருக்கிறார், அவர். இறைந்து கிடைக்கும் பொருட்களை எப்படி சரி செய்வது என்ற யோசனையில், பால் காய்ச்சிய பாத்திரத்தை மூடாமல் வைத்துவிட்டார். புசுபுசு பூனை, அவர் எப்போது கண் அயர்வார், பாலை நோக்கி படையெடுக்கலாம் என்று காத்திருக்கிறது. பால் பாத்திரத்தை காலி செய்யும் முன்பு, பூனையை கண்டுபிடிக்கிறீர்களா?



இறுதி வரை கண்டறிய முடியாதவர்கள் விடையை காண மேலே படத்தில் வட்டமிட்டுள்ள இடத்தை பாருங்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி