ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

புகைப்படத்தில் மறைந்திருக்கும் முகங்களை 11 வினாடியில் கண்டுபிடித்தால் நீங்கள் தான் அதிபுத்திசாலி!

புகைப்படத்தில் மறைந்திருக்கும் முகங்களை 11 வினாடியில் கண்டுபிடித்தால் நீங்கள் தான் அதிபுத்திசாலி!

ஆப்டிகல் இல்யூசன்

ஆப்டிகல் இல்யூசன்

பெண் நிற்பதற்கு முன்னாள் உள்ள பூந்தொட்டியை நன்றாக உற்று நோக்குங்கள்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  நாம் பார்த்தவுடனே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பூ ஜாடி ஒன்றில் மறைந்திருக்கும் முகங்களை 11 வினாடிகளில் கண்டுபிடிக்க சவால் விடும் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிறது.

  இன்றைக்கு சோசியல் மீடியாக்களைத் தேவையில்லாமலும், நேரத்தை வீணாக்கும் வகையில் தான் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்து வருகிறது. ஆனால் எல்லா நேரங்களில் நெட்டிசன்கள் ஒரு மாதிரியாக இருக்கக் கூடாது என்பதற்காக அவர்களையும் பிஸியாக வைத்திருக்கவும், மூளைக்கு சவால் விடும் வகையிலான ஆப்டிகல் இல்யூசன் அதாவது ஒளியியல் மாயை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

  5 வினாடி, 11 வினாடி, 1 நிமிடம் என நேரத்தைக் கணக்கிட்டு ஒளியியல் மாயையில் ஒளிந்திருக்கும் புகைப்படங்களைக் கண்டுபிடித்தால் நீங்கள் தான் ஜீனியஸ் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வைரலாகும். இந்த புகைப்படங்கள் வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமில்லாமல் உங்களது திறனை சோதிக்கும் கருவியாகவும் அமைகிறது.

  இது போன்ற ஒளியியல் மாயை புகைப்படம் ஒன்று தான் சோசியல் மீடியாவில் வைரலாகி நெட்டிசன்களிடம் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அப்படி என்ன தான்? அதில் இருந்தது தெரியுமா? ஒரு பூந்தொட்டிக்கு முன்னாள் ஒரு பெண் ஒரு மலரை ரசிப்பது போன்று புகைப்படம் ஒன்று இருந்தது.

  ஆனால் அந்த புகைப்படத்தில் ஒரு பெண் மட்டுமில்லை, 2 முகங்கள் ஒளிந்திருக்கிறது என்றும் இதனை நீங்கள் 11 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று நெட்டிசன்களுக்கு சவால் விடுத்துள்ளது. நிச்சயம் பார்த்தவுடனே யாராலும் கண்டுபிடிக்க முடியாது. சில வினாடிகள் எடுக்கத்தான் செய்யும். நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் புத்திசாலியாக தான் இருப்பீர்கள்.

  இல்லையென்றால் இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள் இங்கே தருகிறோம்.. கண்டுபிடிக்க முயலுங்கள்.

  டிப்ஸ்… 1

  ஒரு பெண் பூந்தொட்டியில் இருந்த பூவை நுகர்வது போன்ற காட்சிகள் நமக்கு தெரியும். பூந்தொட்டிக்கு பின்னதாக பச்சை நிற செடி இருப்பது போன்றுள்ள ஜாடியைப் பாருங்கள். ஜாடியின் அடிப்பாகத்தில் காது மடல் போன்று நமக்கு காட்சியளிக்கும். இதை பார்த்தவுடனே நாம் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இன்னும் 2 முகங்கள் உள்ளது.. அதை கண்டுபிடிக்க முடிகிறதா? நிச்சயம் கொஞ்சம் சவாலாக தான் இருக்கும். இதோ உங்களுக்கான அடுத்த டிப்ஸ்..

  டிப்ஸ்- 2..

  பெண் நிற்பதற்கு முன்னாள் உள்ள பூந்தொட்டியை நன்றாக உற்று நோக்குங்கள். இப்போது அதன் பாதியில் ஒரு செயின் வடிவில் ஒன்றிருக்கும். அதனை நன்றாக கவனியுங்கள். செயினின் இருபக்கமும் கடைசியில் தலைகீழாக வைத்துப்பாருங்கள். இப்போது கண்கள் போன்று நமக்கு தெரியும். இதை நன்றாக கவனித்துப்பார்க்கும் போது பூந்தொட்டியின் ஓரமாக இருப்பது மூக்கு, கண் என இரண்டு முகங்கள் நமக்கு காட்சியளிக்கும்.

  Read More: கிரிக்கெட் மட்டுமல்ல, எனக்கு சமையல் கலையும் தெரியும் - அசத்தும் சச்சின்!

  இப்போது நிச்சயம் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள்.. இந்த டிப்ஸ்கள் எதுவும் இல்லாமல் 11 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்கள் தான் அதிபுத்திசாலியாக இருப்பீர்கள் என்பதில் எவ்வித மாற்றமில்லை. இந்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் இதில் மறைந்திருப்பது 2 முகங்கள் அல்லது 4 முகங்கள் என்றும், உக்ரேனிய கலைஞர் ஓலெக் ஷுப்லியாக் வரைந்த அற்புத ஓவியம் தானே இது என பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Optical Illusion