Home /News /trend /

இந்த ஓவியத்தை பார்த்தால் என்ன தெரிகிறது? உங்களின் ஆளுமை எப்படிப்பட்டது என்பதை அறியலாம்

இந்த ஓவியத்தை பார்த்தால் என்ன தெரிகிறது? உங்களின் ஆளுமை எப்படிப்பட்டது என்பதை அறியலாம்

Optical Illusion | உங்களின் ஆளுமைப் பண்பை வெளிப்படுத்தும் - அதே சமயம் ஒரு மனதை கவரும் - ஒரு ஆப்டிகல் இல்லுஷன் ஓவியத்தை தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

Optical Illusion | உங்களின் ஆளுமைப் பண்பை வெளிப்படுத்தும் - அதே சமயம் ஒரு மனதை கவரும் - ஒரு ஆப்டிகல் இல்லுஷன் ஓவியத்தை தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

Optical Illusion | உங்களின் ஆளுமைப் பண்பை வெளிப்படுத்தும் - அதே சமயம் ஒரு மனதை கவரும் - ஒரு ஆப்டிகல் இல்லுஷன் ஓவியத்தை தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

பல ஆண்டுகளாகவே, ஓவிய கலைஞர்கள் நம் கண்களையும், நம் மனதையும் ஏமாற்றும் ஓவியங்களையும், படங்களையும் உருவாக்க ஆப்டிகல் இல்லுஷனின் சக்தியை பயன்படுத்தி வருகிறார்கள். அப்படியாக ஆப்டிகல் இல்லுஷனை ஏற்படுத்தும் ஒரு ஓவியத்தை அல்லது படத்தை இரண்டு முறைக்கும் மேலாக, நன்றாக ஊற்று நோக்கும்படி நம்மையும், நம் கண்களையும் கட்டாயப்படுத்துகிறார்கள்.

குறிப்பிட்ட ஆப்டிகல் இல்லுஷன் படங்கள் ஆனது மிகவும் சுவாரஸ்யமானதாக இருப்பது ஒருபக்கம் இருக்க, நம் கண்களுக்கு விருந்தாக அமைவது ஒருபக்கம் இருக்க, அவைகளில் சில நமக்கே தெரியாத, நம் ஆளுமையை பற்றி நிறைய விடயங்களையும் வெளிப்படுத்துகின்றன. இதனாலேயே தான் எத்தனை ஆப்டிகல் இல்லுஷன் ஓவியங்களை அல்லது புகைப்படங்களை பார்த்தாலும் கூட நாம் சலிப்படைவதே இல்லை!

அப்படியாக, உங்களின் ஆளுமைப் பண்பை வெளிப்படுத்தும் - அதே சமயம் ஒரு மனதை கவரும் - ஒரு ஆப்டிகல் இல்லுஷன் ஓவியத்தை தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

மேலே உள்ள ஓவியத்தை பாருங்கள். நீங்கள் முதலில் எதை பார்க்கிறீர்கள்? அதாவது உங்கள் கண்களுக்கு எது முதலில் புலப்பட்டது? ஒரு மனிதனின் முகமா அல்லது தன் கைகளில் புத்தகம் ஒன்றை வைத்துக்கொண்டு அதை படித்து கொண்டிருக்கும் ஒருவரையா? இந்த ஓவியத்தை பார்த்த வேகத்தில் நீங்கள் முதலில் கண்டுகொண்டது யாரை?



உங்கள் கண்களுக்கு முதலில் புலப்பட்டது ஒரு மனிதனின் முகம் என்றால்...

முதலில் நீங்கள் ஒரு மனிதனின் முகத்தை கண்டீர்கள் என்றால், உள்ளுணர்வை மையப்படுத்தி சமூகத்தோடு ஒன்றிவாழும் மக்களில் நீங்களும் ஒருவர் என்று அர்த்தம். இருப்பினும், உங்களின் மோசமான முடிவெடுக்கும் திறனால், உங்களின் தெளிவான மொழித்திறன் பெரிதும் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி கருத்து கூறிய பிறகு, அதைப்பற்றி எதுவும் சொல்லாமலேயே இருந்து இருக்கலாம் என்கிற அனுபவத்தையே நீங்கள் அதிகம் பெறுவீர்கள்.

Read More : நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு எது? உங்கள் பர்சனாலிட்டியை சொல்லும் புகைப்படம்..


ஆக, முதலில் ஒரு மனிதனின் முகத்தை கண்டவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்கள் மனம் என்ன சொல்ல நினைக்கிறதோ அதை வெளிப்படுத்தும் போது கொஞ்சம் கவனமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக, எப்போது பேச வேண்டும், எப்போது பேசக்கூடாது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் கண்களுக்கு முதலில் புலப்பட்டது புத்தகம் வாசிக்கும் ஒரு மனிதன் என்றால்...

குறிப்பிட்ட ஆப்டிகல் இல்லுஷன் ஓவியத்தில், மரத்தின் அடியில் அமர்ந்து புத்தகம் வாசிக்கும் ஒரு மனிதனை தான் உங்கள் கண்கள் முதலில் அடையாளம் கண்டதென்றால், நீங்கள் பகல் கனவு காண்பவர் என்று அர்த்தம். நீங்கள் எண்ணங்களில் மூழ்கி திளைப்பவர் என்று அர்த்தம். இதனாலேயே நீங்கள் எதையும் காது கொடுத்து கேட்க தவறி விடுவீர்கள். பிறர் உங்கள் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைக்காததற்கு பல காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம், ஏனெனில் நீங்கள் அவர்களின் மீது கவனம் செலுத்தவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Optical Illusion, Trending, Viral

அடுத்த செய்தி